மலேசியா வாசுதேவன் --ஒரு சகாப்தம்


கணீரென்ற குரலுக்கு சொந்தக்காரர்.
70 இறுதிகளிலும் 80 களிலும் தமிழ்த்திரையிசை உலகில் கோலோச்சிய பாடகர்.
தமிழ் உச்சரிப்பை சிந்தாமல் சிதைக்காமல் உலகெங்கும் தன் இசையால் பரப்பிய மலேசியா வாசுதேவன் இன்று நம்மிடையே இல்லை
அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
முதன் முதலில்  அவர் பாடிய தமிழ்ப்படம்
உறவாடும் நெஞ்சம்.
அதில் வந்த இந்த பாடல்

Get this widget | Track details | eSnips Social DNA

சோகப்பாடலா இல்லை இளமை ததும்பும் இந்த பாடலா.
மலேசியா வாசுதேவன் அவர்களின் தேன் குரலில் அன்று கட்டுப்படாதவர்கள் யாரும் இல்லை


ஆகாயமே எந்தன் கையில் ஊஞ்சல் ஆடுதோ
பூ மேகமே எந்தன் கன்னம் தொட்டு போகுதோ
சோகம் போகும் உன் கண்கள் போதும்
சின்ன பாதம் நடந்ததால்..
வலியும் தீர்ந்தது வழியும் தெரிந்தது..ஓ

இந்த வரிகளில் அவர் காட்டும் அந்த பாவத்தால் இந்த பாட்டில் மயங்காதவர்கள் இல்லை



இதுவும் ஒரு தேன் துளி தான்

பொன் மானைத்தேடி நானும் பூவோடு வந்தேன்
நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்லை
அந்த மான் போன மாயமென்ன என் ராசாத்தி
அடி நீ சொன்ன பேச்சு நீர் மேல போட்ட மாக்கோலம் ஆச்சுதடி
அடி நான் சொன்ன பாட்டு ஆத்தோரம் வீசும் காத்தோடு போச்சுதடி

Get this widget | Track details | eSnips Social DNA


அவரின் பேட்டியை சில மாதங்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பினார்கள்.அதில் அவர் பிரபலமான பின்பு கூட ஒவ்வொரு பாட்டுக்கும் ஒத்திகை பார்த்து விட்டே ஒலிப்பதிவுக்கு சென்றதாக கூறினார்.
எம்.எஸ்.அவர்களும் ஒரு முறை இதே மாதிரி கூறியிருந்தார்கள்.அந்த தொழில் பக்திதான் அவர்கள் மக்கள் மனதில் என்றும் இடம் பிடித்ததற்க்கு காரணமாகும்







காட்சியும் கானமும் கருத்தும் மற்ற எல்லா ம் மும்




நான் பொதுவாக விலங்குகள் ஒன்றுக்கு ஒன்று வேட்டை யாடும் நிகழ்ச்சியை  விரும்பி பார்க்க மாட்டேன் . மிகவும் மனதை பாதிக்கும் என்று அந்த அலைவரிசையையே என் தொலைக்காட்சி தொகுப்பில் இருந்து நீக்கி விட்டேன்  என் சரிபாதி யின்( அதாங்க betterhalf ன்) சகோதர் துபாயில் இருப்பவர்.Discovery channel  தவிர வேறு எதுவும் விரும்பி பார்க்கமாட்டார்.எனவே துபாய் க்கு நான் சென்றால் டி.வி இல்லாத அறையில் பொழதை கழிக்க விரும்புவேன்

இந்த வீடியோவை சமீபத்தில் தான் பார்த்தேன். தென் ஆப்ரிக்க நாட்டில் குருஜே
ர் காட்டுவனப் பகுதியில் நடந்த மனதை தொட்ட  உண்மை சம்பவம்.
ஐந்தறிவு பிராணிகள் ஆறறிவு உள்ள மனிதனுக்கு கற்ப்பித்த  பாடம் .
உலகில் நம்மால் எதுவும்  முடியும் என்பதை  உணர்த்திய  ஒரு அற்புத விளக்கம் 

 முதலில் சாதாரணமாக  சிங்கம் எருமையை வேட்டையாடும்  படம் போல தோன்றும்  இந்த எட்டு நிமிட படத்தில் கடைசி நிமிட திருப்பம்  தான் உலகில் கோடிக்கணக்கானவர்களை இந்த வீடியோவை  பார்க்க வைத்திருக்கின்றது. இதை மொத்தம் 59,483,551 பேர் பார்த்திருக்கின்றார்கள்.(நீங்களும் இதில் ஒன்றாக இருக்கலாம்.)இருந்தாலும் இப்பொழது இதைப்பாருங்கள்.கடைசி நிமிட காட்சியில் நான் என்னை அறியாமல் கைதட்டி ஆரவாரம் செய்தபோது வீட்டில் உள்ளவர்கள் என்னை விநோதமாக பார்த்தது நிஜம் .
என்னவென்று அறிய கடைசி வரை இந்த வீடியோவைப்பாருங்கள்
நாம் ஒன்றாம் வகுப்பில் படித்த அதே கதைதான் இப்பொழது  நிஜத்தில் நடந்தது..



இப்பொழுது அதே கருத்தை சொல்லும் காலத்தால் அழியாத இந்த பா ட்டைகேளுங்கள் .
இந்த வரிகளில் உள்ள உண்மையை ஏன் சிலரால் உணர்ந்துகொள்ள முடியவில்லை .

துணையன்றி வெண்புறா தனியாக வந்ததே
வனவேடன் வீசிய வலைதன்னில் வீழ்ந்ததே
இனம் யாவும் சேர்ந்துதான் அதை மீட்கச் சென்றதே
கதை யான போதிலும் கருத்துள்ள பாடமே
வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே

இந்த படத்தில்  நடிகர்கள் பாலய்யா.எம்.ஆர்.ராதா ,சுப்பையா அனைவரும் சிவாஜிக்கு ஈடு கொடுத்து நடித்து இருப்பார்கள். .




========================================================================

கடந்த 13-02-2011 அன்று ஜெயா டி.வியில் ஜாக்பாட் நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.கடந்த ஒரு வருடமாகத்தான் எங்க வீட்டு டிவி யில் ஜெயா தெரிகிறது.

இரு அணிகளுக்கும் நடந்த போட்டி நிகழ்ச்சியில் ஒரு அணியினர் சென்னையில் உள்ள ஒரு வங்கியிலிருந்து வந்திருந்தனர்..அனைவரும் ஆண்கள்..இரண்டாம் அணியை சேர்ந்தவர்கள். ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்ப்பவர்கள் போல அதில் மூன்று பேர்கள் பெண்கள்.(தங்கள் பதவி பெயரை ஏதோ எக்ஸ்க்யூடிவ் என்று சொல்லிக்கொண்டார்கள்.)
அவர்கள் அந்த நிகழ்ச்சியில் 95% ஆங்கிலேத்திலேயே உரையாடினார்கள்...
அந்த பெண்கள் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் மாதிரி தெரியவில்லை எல்லாம் நம்ம ஊர் அம்மணிகள் தான்.
அந்த அணியை சேர்ந்த ஒரே ஒரு ஆண் சினிமாவில் வரும் அமெரிக்க மாப்பிள்ளை மாதிரி இருந்தார் வீட்டிலேயே சத்தியம் பண்ணி விட்டு வந்திருப்பார் என நினைக்கிறேன்.ஒரு வார்த்தை கூட தமிழில் திருவாய் மலரவில்லை 
முதலில் தமிழில் உரையாடிய எதிர் அணியில் உள்ள ஆண்கள் மற்றவர்கள் ஆங்கிலத்தில் விடை சொல்லும் போது தமிழில் தாம் பதில் சொன்னால் தம்மை குறைவாக மதிப்பிடுவார்கள் என நினைத்து அவர்களும் தங்கள் நாவில் அவ்வளவாக தமிழை நடமாட விடவில்லை..
பாவம் மும்பையில் பிறந்து வளர்ந்த நதியா இயன்றவரை தமிழில் நிகழ்ச்சியை நடத்த முயற்சி பண்ணினார். 
இதப்போய் பெரிசா எழத வந்திட்டியாக்கும் இதெல்லாம் எங்களுக்கு சகஜமப்பா என்று நீங்கள் பொருமுவது கேட்கிறது.
உங்களுக்கு  எல்லாம் ரொம்ப பொறுமையப்பா. 
கொஞ்சம் யாராவது அந்த 4 பேரை இங்க அனுப்புங்கப்பு..நாங்க தமிழர்கள் ஒருவருக்கொருவர் பேசும்பொழது ஆங்கிலத்தில் பேசக்கூடாது என்று ஒரு விதி வைத்துள்ளோம்.அப்பவாவது அவர்கள் தமிழில் பேசுவார்களா என்று பார்ப்போம்.
 கடந்த வருடம் ஒரு டி வி நிகழ்ச்சியில் திரு அப்துல்கலாம் அவர்களை  நடிகர் விவேக் அவர்கள் பேட்டி கண்டபோது நான் அறிந்தவரையில் முன்னாள் ஜனாதிபதி அவர்கள் கொஞ்சம் கூட  ஆங்கில கலப்பிடமில்லாமல் பேசினார்..அதுதான் நிறைகுடத்தின் தன்மை.


-

யாரும் ரசிக்கவில்லையே


ஒருவர் வாஷிங்டன் நகரத்தின் மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனில் ஒரு ஜனவரி மாதத்தின் பனி பெய்யும் காலை நேரத்தில் வயலின் வாசிக்க ஆரம்பித்தார்.(நம் ஊரில் துண்டை விரித்து ஆர்மோனியம் வாசித்து காசு கேட்ப்பார்களே அந்த மாதிரி) .
 புகழ்ப்பெற்ற 6 பாடலை சுமார் 45 நிமிடம் வாசித்தார். காலை நேரமாதலால் அலுவலகம் செல்லும் சில ஆயிரக்கணக்காணவர்கள்.அந்த வழியாக வயிலின் வாசிப்பை கவனிக்க நேரமின்றி பறந்துக்கொண்டிருந்தனர்.
 
மூன்று நிமிடம் கழித்து ஒரு நடுத்தர வயதுக்காரர் அந்த வயலின் காரரை கவனித்தார்.சில நொடிகள் இசையை ரசித்து விட்டு கூட்டத்தோடு கூட்டமாக மறைந்தார்.
 ஒரு நிமிடத்திற்க்கு பின்பு வயலின் காருக்கு ஒரு டாலர் கிடைத்தது அதுவும் அவரின் இசையை ரசித்து விட்டு போட்ட பணம் கிடையாது.ஒரு பெண்மணி அவசரத்தில் வீசிவிட்டுப்போனது.
  
சில நிமிடங்கள் கழித்து யாரோ ஒருவர் சுவற்றின் மீது சாய்ந்த வாறு அவர் இசையை கேட்டுக்கொண்டிருந்தார் ஆனாலும் அவரின் பார்வை தன் கைக்கடிகாரத்தின் மீதே இருந்தது. பின்பு அவர் அலுவலகத்துக்கு நேரமாயிற்று என விரைந்தார்..
 . 
ஒரு சிறுவனைத்தவிர எவரும் அவரின் இசையை கவனித்து பார்க்கவில்லை.அவனையும் அவன் அம்மா அவனை தரதர வென்று இழத்துக்கொண்டு சென்றாலும் அவன் கண்கள் அந்த வயலின்காரர் பக்கமே திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டு சென்றது 
அவர் வயலின் வாசித்த அந்த ஒரு மணி நேரத்தில் அவருக்கு கிடைத்த தொகை 32 டாலர்கள்..6 பேர் மட்டுமே அவரை நின்று பார்த்தனர்..20 பேர்கள் பணத்தை மட்டும் வீசிவிட்டு சென்றனர்.அவர் வயலின் வாசித்து விட்டு முடித்த போது யாரும் அங்கு நின்று கொண்டிருக்கவில்லை.
 . 
ஆனால்  அவர்தான் உலகப்புகழ்ப்பெற்ற மிகச்சிறந்த வயலின் விததகர் ஜோஷுவா பெல்  என்று அங்கிருந்தவர்கள் அறிந்தால் அவ்விடத்தில் ரயில் போக்குவரத்தே ஸ்தம்பித்திருக்கும்
அன்று அவர் வாசிதத வயலினின் மதிப்பு மட்டும் 3.5 மில்லியன் டாலர்.
 
இரு நாட்களுக்கு முன்புதான் அவருடைய கச்சேரி  பாஸ்டன் அரங்கில் நடைப்பெற்ற போது எல்லா டிக்கெட்டுகளும் விற்று தீரந்து விட்டது.கடைசி வரிசை இருக்கையின் டிக்கெட் 100 டாலர் 

ஜோஷுவாவின் இந்த ரயில்வே ஸ்டேஷன் நிகழ்ச்சி .மக்களின் ரசனை, வாழ்க்கையில் அவர்களின் முக்கியத்துவம் இவைகளைப்பற்றி ஒரு சமூக பரிசோதனைக்காக வாஷிங்டன் போஸ்ட்  ஏற்ப்பாடு பண்ணியது
ஒரு பொது இடத்தில் ஒரு பொருத்தமில்லாத நேரத்தில், நாம் அழகை ரசிப்போமா?மற்றவர்களின் கலைத்திறமைகளை பொறுமையாய் நின்று பாராட்டுவோமா அவர்களின் செயல் திறத்தினை எதிர்ப்பார்க்காத.தறுவாயில் அங்கீகரிப்போமா?
இந்த கேள்விகளை முன் வைத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் மனிதனின் மனோபாவம் வியப்புக்குறியதே. என அறியப்பட்டது.
==================================================================================
                மாறித்தான்  போச்சு

மதிப்புமிகு மடாதிபதிகளும்
மாண்புள்ள  சாமியார்களும்  -முன்பு
வாழ்ந்த இடம்  பர்ணசாலை  - இன்று
வாழுமிடம் சிறைச்சாலை.

கள்ளத்தொழிலும் கருணை இன்றி
தலையை சீவும் தரம் அற்றோரும்
சேர வேண்டியது சிறைச்சாலை- அவரோ
சேர்ந்து விட்டார் சட்டசபை.

நடிகர்களும் தொழில் மறந்து
நாடாள முனைகின்றார்-நாடாள்பவரும்
நம்மிடம் நலலவன்போல் தினம்தினம்
நன்றாகவே நடிக்கின்றார்.

படிக்கும் மாணவரும் சிந்தைமயங்கி
சீரழிவார் தேவையில்லா அரசியலால்
அரசியல்வாதிகள்  அந்தோ தம்பணி மறந்து
துடிக்கசெய்வார் நம்மையெல்லாம்.

பணம்தேடி பெண்களும் வெளியிலே சுற்றி
வீட்டினை மறக்கின்றார். தம்கடமை மறந்து
புல்லனாக மாறிவிட்ட  கணவன் தானும்
போதையில்  தினமும் மிதக்கிறார்

                                        புதுவை ராம்ஜி.

பாருக்குள்ளே நல்ல நாடு


அன்றும் இன்றும்

  
அன்று

.இந்தியா 1000 வருடங்களாக எந்த நாட்டின் மீதும் படை எடுத்தது கிடையாது.

உலகின் முதல் பல்கலைகழகம் தாக்ஷில்லாவில்( பிரிவினைக்கு முந்தைய பஞ்சாப் ) தொடங்கப்பட்ட ஆண்டு கி.மு.500.

.உலகின் மிகப்பெரிய பல்கலைகழகமான நாளந்தாவில் பயில உலகம் முழுதும் இருந்து வந்த  மாணவர்களின் எண்ணிக்கை 10500 .அவர்கள் பயின்ற கலைகள் 60 .கி.மு நான்காம் நூற்றாண்டின் கல்வித்துறையில் இது மிகப்பெரிய சாதனை. 

.ஃபோர்ஃப்ஸ் பத்திரிக்கையின்படி சமஸ்க்கிருதம் தான் கம்யூட்டர் மென்பொருளுக்கு மிகப்பொருத்தமான மொழி 

ஆயுர் வேத மருந்தே மனித இனத்தின் மிகத்தொன்மையான மருந்து..
படகு விடும் கலை சிந்துநதிக்கரையில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.ஆங்கில வார்த்தைன Navigation  நாவாய் என்ற இந்திய மொழியில் இருந்தே வந்தது.

பை” கணித குறியீடு புத்தாயானா கண்டுபிடித்தது. அவர் விவரித்ததேபித்தாகோர்ஸ்கண்டுப்பிடிப்பாக உணரப்பட்டது.இங்கிலாந்து அறிஞர்கள் 1999ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக இதை அறிவித்தனர். 

 Algebra, trigonometry and calculus இந்தியாவில் இருந்து வந்ததே.

 நவரத்தினங்கள் ஆராய்ச்சி செய்யும்  அமெரிக்க நிறுவனம் 1896 வரை உலகிலேயே வைரம் கிடைக்கும் ஒரே நாடாக இந்தியா இருந்து வந்தது என அறிவித்தது.
.
 தந்தியில்லா செய்தி தொடர்பினை கண்டுப்பிடித்தவர் ஜகதீஷ் போஸ் தான் மார்கோனி அல்ல என்று ஒரு நூற்றாண்டு சந்தேகத்தை IEEE தீர்த்து வைத்தது. 

செஸ் ஆட்டத்தினை கண்டுப்பிடித்தது நம்ம நாடுதான்
 சுஷ்ருதா தான் அறுவை சிகிச்சையின் தந்தை என  2600 ஆண்டுகட்கு முன்பு அறியப்பட்டார்.அப்போது மயக்க மருந்து போன்ற வலி தெரியாத மருந்தும் உபயோகிக்கப்பட்டது


 இன்று

இந்திய அரசியல்வாதிகள் கடந்த 8 ஆண்டுகளில் ரூ6.5 லட்சம் கோடி மக்கள் பணத்தை ஊழல் செய்து வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளனர் என்று அமெரிக்காவில் உள்ள பொருளாதார புலனாய்வு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.  
 டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் என்ற சர்வதேச ஊழல் மதிப்பீட்டு அமைப்பு  இவ்வாறு கூறுகிறது. 
ஐக்கிய நாடுகள் சபை டிசம்பர் 9-ம் தேதியை ஊழல் எதிர்ப்புத்தினமாக கடைப்பிடிக்கிறது. ;ந்த தினத்தை ஒட்டி மேற்கண்ட அமைப்பு ஊழலில் உலக நாடுகளின் தரவரிசையை ஆராய்ந்து ஓர் அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறது. 
உலக அளவில் அரசியல் கட்சிகள்தான் அதிக அளவில் ஊழல் புரிகின்றன என்பதைக் கோடிட்டுக் காட்டியுள்ள அந்த அமைப்பு, இந்த வரிசையில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கிறது. 
மொத்தம் 62 நாடுகளில் பல்வேறு தரப்பைச் சேர்ந்த 50,000 பேரிடம் திரட்டப்பட்ட விவரங்களின் அடிப்படையில் ஊழல் மிகுந்துள்ள நாடுகளை அந்த அமைப்பு வரிசைப்படுத்தியிருக்கிறது. இதில் ஈகுவேட்டர், அர்ஜெண்டினா ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக ஊழல் நிறைந்த அரசியல் கட்சிகளைக் கொண்ட நாடாக இந்தியா இடம் பெற்றிருக்கிறது.
====================================================================================================================================
இன்றைய பாடல்
சிறுவன் கமலின் அழகான முகபாவம்,அருமையான பாடல் வரிகள் ,எளிமையான இசை.
யாருக்குத்தான் பிடிக்காது இந்த பாடல்


செய்திகள் வாசிப்பது சுண்டு+எலி




செய்தி
தமிழகத்தில், அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை, 58ல் இருந்து, 60ஆக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை, அரசு மேற்கொண்டுள்ளது. தேர்தல் பரிசாக வரும் சட்டசபை கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது


சுண்டு+எலி பிரஸ்

இந்த அறிவிப்பை தொடர்ந்து திரையுலகத்தினர் நடத்திய பாராட்டு விழாவில் கலைஞர் பேசிய பொழது  உலகில் நான்கு பேர்க்கு  நல்லது செய்யணும் என்பார்கள். இந்த அரசு பல்லாயிரக்காணவர்களுக்கு நல்லது செய்துள்ளதால் 60 ஐ 4 மடங்காக்கி 240 தொகுதிகளும் (புதுவையும் சேர்த்து தான் )நமதே என இப்போதே முடிவாகி விட்டது ஆகவே தயவு செய்து அறிவு ஜீவிகள் ஓட்டு போட வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்
.
அரசின் இந்த நடவடிக்கை அ.தி மு.க வட்டாரத்தில் சலசலப்பை ஏற்ப்படுத்தியுள்ளதால் அம்மா மைனாரிடி அரசுவின் இந்த அறிவிப்பு தோல்வி பயத்தால் ஏற்ப்பட்ட நடுக்கம் என்றும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியரின் ஓய்வு பெறும்  வயதை 70 வயதாக உயர்த்துவோம் என அறிவித்தார்.அதே சமயம் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கும் நபரின்  வயது உச்சவரம்பினை 50 வயதாக நிர்ணயம் செய்வோம் என மக்கள் கரகோஷத்தினிடையில் கூறினார்.
.
ப.ம.க தலைவர் இதைப்பற்றி கருத்து தெரிவிக்கும் போது நாங்கள் இன்னும் யார் பக்கம் சாய்வது என்று எந்த முடிவும் எடுக்க முடியாததால் 65 வயதே ஒய்வு பெறும் வயது என்று நம்புவதாகவும் அன்புமணிக்கு பதவி வந்த பிறகே இனி வாய் திறக்கப்போவதாகவும் கூறினார்
.
தேமு தி க தலைவர் விஜயகாந்த் ஒரு அறிக்கையில் இந்த நாட்டில் 60 வயதுக்குமேலுள்ளவர்கள் சுமார் 22 கோடி அதில் ஆண்கள் 11 கோடியே 86 லட்சத்து 93 ஆயிரம் பெண்கள் 10 கோடியே 13 லட்சத்து 7 ஆயிரம் பேர்கள் என்றும் இன்னும் 80 வயதுள்ளவர்களைப்பற்றி கணக்கு எடுத்து முடியாததால் அதைப்பற்றி பின்பு முடிவெடுப்பதாக கோபத்துடன் கர்ச்சித்தார்.

சத்திய மூர்த்திபவனில் எல்லா கோஷ்ட்டிகளும் எல்லா பத்திரிகைகளுக்கும் அறிக்கை கொடுக்க முற்ப்பட்டதால் அடிதடி ஏற்ப்பட்டது.

இது நினைவுக்கு வந்தால் உடனே மறந்து விடுங்கள்

உலகில் மிக அதிகமான இளைஞர்களை,(இருபாலரும் இதில் அடக்கம்) கொண்ட நாடு இந்தியா

செய்தி
புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, நாடாளும் மக்கள் கட்சி போன்றவை .தி. மு.., அணியில் சேர்ந்துள்ளன. 

சுண்டு+எலி பிரஸ்

சுண்டெலி முன்னேற்ற கட்சியின் தலைவரும், பொதுசெயலாளரும்,கொ.ப.ச மற்றும் மாவட்ட செயலாளருமான சுண்டு+எலி யை அ.தி.மு.க தேர்தல் நிர்வாக குழு சந்தித்தது.
பேச்சு வார்த்தை முடிந்த பின்பு நிருபர்களுக்கு பேட்டியளித்த சு.எலி இன்னும் கூட்டணிப்பற்றி முடிவு செய்யவில்லை என்றும் தி.மு.க குழுவும் தன் கூட்டணியை நாடுவதாகவும் அறிவித்தார்.யார் அதிக தொகுதிகள் கொடுக்கின்றார்களோ அவர்களுடனே கூட்டுசேர்வதாகவும் கூறினார்.ஒரு வீணாபோன நிருபர் உங்கள் கட்சியில் ஒருவர் தானே உள்ளீர்கள் என வெறுப்பேத்தி கேட்டாலும் சு.எலி மிகப் பொறுமையாக ஒன்றுக்கு மேற்ப்பட்ட தொகுதிகளில் இந்திராகாந்தி,ஜெயலலிதா லல்லு போன்றவர்கள் நின்றதிலையா என்று சில லட்சம் கோடி ஊழல் செய்த அரசியல்வாதி சிரித்துக்கொண்டே போலிஸ் வேனில் ஏறுவது போல முகத்தில் புன்னகை தவழ பதில் கூறியது அவர் ஒரு பண்பட்ட தலைவர் என்பதை காட்டியது.மேலும் அவர் தேர்தலில் வெற்றிப் பெற்றால் தன் தொகுதியில் உள்ள சுண்டெலிகளை பெரிச்சாளிகளாக மாற்றப்போவதாக சூளுரை உரைத்தார்.கூடியிருந்த பொதுமக்கள் இவர் நிச்சயம் மிகப்பெரிய தலைவராக ஒரு ரவுண்டு வருவார் என மகிழ்வுடன் கரவொலி எழப்பினர்

=========================================================================
நகர வாழ்க்கைக்கு ஆசையாய்
மாலையிட்டவன் அது
நரக வாழ்க்கையென்று உணர்ந்து
ஏக்கத்துடன் தேடுகின்றேன்
ஏற்கனவே இழந்ததை :

சிலு சிலு தென்றலையும்
சின்னஞ்சிறு கிளிகளையும்
மாசு படாத மனங்களையும்
மாவு பூசாத முகங்களையும்
மாலை வெயிலின் மஞ்சளையும்
                                                       
ஏக்கத்துடன் தேடுகிறேன்

மருதாணி சிவப்பை ஒப்பிட்டு
சிரித்தோடும் கொலுசு சிறார்களையும்
வாசலில் கோலமிட்டு
சாணத்தில் பூசெருகி
விழித்த கணவனுக்கு
வெந்நீர் வலாவும்
கங்கை போன்ற புனிதமான
மங்கையரின் எழிற்கோலம்

 ஏக்கத்துடன் தேடுகின்றேன்.

கோவணம் கட்டி மாடு மேய்த்து
ஆடு புலிஆட்டத்தின் வெற்றியில்
காவி தெரிய சிரிக்கும்
கள்ளம் அறியா சின்னானின்
முகத்தை

ஏக்கத்துடன் தேடுகின்றேன்.

குருஜி---

இவர் பெயரைக்கண்டவுடன் ஆசிர்வாதம் வாங்க புறப்பட்டு வந்துடாதீங்க.பெயர் குரு தலைஎழத்து ஜி அதாங்க இனிஷியல்