தாயுமானவன்




நான் என் பள்ளி வயதில் எந்த ஒரு பஜனையோ சுலோகங்களோ படித்ததில்லை. ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தாலும் கற்றுக்கொள்ள விருப்பபட்டதில்லை
தெரிந்ததல்லாம் சிலோன் ரேடியோவில் சினிமா பாட்டு அகில இந்திய வானொலி சினிமா பாட்டுக்கள்தான்.
1980 அல்லது 1981 ல் மதுரையில் நண்பர்குழாத்துடன் வடக்கு வடம் போக்கி குட் ஷெட் வீதி சந்திப்பில் குமார் டீ கடையில் அரட்டை அடித்துக்கொண்டு டீ குடிக்கும்போது திடீரென எதிர் வீட்டில் ஒரு சலசலப்பு. திடீரென ஒரு 20 அல்லது 25 பேர் குவிந்தனர்.  என்ன என்று பார்த்துக்கொண்டிருக்கும் போதே ஆரஞ்சு வண்ண உடையுடன் பளீரென பாபா அந்த வீட்டில் இருந்து வெளியே வந்தார். அங்கு கூடியிருந்த சிலர் வீதி என்று பாராமல் தரையில் வீழ்ந்து வணங்கினர்
நாங்கள் வாயடைத்து நின்றோம்.நான் அவரைப்பற்றி அவ்வளவாக கேள்வி பட்டதில்லை.எங்கள் வீட்டில் ஷிரடி பாபா சிறிய படத்தை பார்த்திருக்கின்றேன்..இப்பொழதுதான் சத்திய சாய்பாபாவை நேரில் பார்க்கின்றேன். அவர் கூட்டத்தினரை நோக்கி கையை தூக்கி ஆசிர்வாதம் பண்ணினார் முக்கியமாக டீ கடையில் நின்றிருந்த எங்களைப்பார்த்தும் ஆசிர்வாதம் செய்தார்.நான் அவரை நோக்கி என்னை அறியாமல் வணங்கினேன்.இதெல்லாம் ஒரு சில நிமிடங்களில் நடந்தது.
அந்த நிகழ்ச்சிக்குப்பின்பும் எனக்கு எந்த வித ஈர்ப்பும் அவரிடம் எழவில்லை.
..இன்று வரை ஒரு ஆச்சரியம் அன்று அவர் எனக்கு அப்படி எப்படி ஒரு பளீர் கலரில் தோன்றினார் என்று.உண்மையில் அவர் உடல் வர்ணம் கிருஷ்ணன் வர்ணம்
காலங்கள் உருண்டன.1995  நவம்பர் 21 சென்னை விமான நிலயத்தில் சிங்கப்பூரில் இருந்து வரும் என் சகோதரர் மனைவியை வரவேற்க்க நானும் என் சகோதரரும் சென்றிருந்தோம். அங்கு அப்போது சத்ய சாய் பாபாவின் பெரிய படம் வைக்கப்பட்டு வெளி நாட்டில் இருந்து வரும் பக்தர்களுக்கு வழிகாட்டியாக அங்கிருந்தவர்கள் தகவல் கொடுத்துக்கொண்டிருந்தனர்.(பின்பு தான் தெரிந்தது பாபாவின் 70 வது பிறந்த நாள் விமர்சை யாக கொண்டாடப்பட்ட நேரம் அது)
என் வாய் சற்று அடக்கமில்லாத வாய் பகிங்கரமாக அவரைப்பற்றி அங்கேயே விமர்சனம் செய்தேன்.என் சகோதரன் என்னை கடிந்து கொண்டான். உன் எண்ணங்களை வீட்டில் சொல் ஆனால் பொது இடத்தில் வேண்டாம் என்று.
1996 ம் வருடம் ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவில் மிக்சிகனில் காலடி வைத்தேன். அப்போது அந்த பூமியில் எனக்கு என் சொந்த குடும்பத்தை தவிர பரிச்சமானவர்கள் இரண்டு பேர்.அவர்கள் வானத்தில் உள்ள சூரியனும் சந்திரனும் தான் ஆமாம் எனக்கு உற்றார் உறவினர் நண்பர்கள் யாரும் பூமியின் இந்த பக்கம் இல்லை எல்லாம்  அந்த பக்கம் தான். நம்பி வந்தவர் அப்பொழுது  அங்கு இல்லை.வேறு யாரோ ஒருவர் இருந்தார்.அவரால் அலட்சியப்படுத்தப்பட்டேன்
தனிமை விரக்தி,துயரம் துரோகம் மற்றும் கலாச்சார மாற்றம் எல்லாம் என்னை பாடாய் படுத்தியது.இப்பொழது மாதிரி தொலைபேசி அலை பேசி அவ்வளவாக இந்தியாவில் வலம் வராத காலம்.அதனால் என் தனிமையை வெளிப்படுத்த முடியாத சூழ்நிலை.
கடவுளே எனக்கு வழிகாட்டு. மனநிம்மதிக்கு ஒரு குருவை காட்டு என உறங்கப்போனேன்.கனவில் கயிற்றுக்கட்டிலில் ஒரு உருவம் மெதுவாக எழந்திருந்து என்னை ஆசிர்வதித்தது.ஒரு பக்கம் பார்த்தால் ஷீரடி பாபா மறுபுறம் சத்ய சாய்.
எனக்கு ஒரே ஆச்சரியம். எங்கள் குடும்பம் காஞ்சி பரமாச்சாரியார் அவர்களின் பக்தர்கள்.எனக்கு அப்போது அரவிந்த ஆஸ்ரம அன்னையிடம் ஒரு பக்தி உண்டு. இவர்கள் இல்லாமல் எப்படி கனவில்  பாபா எனக்கு குருவாக வந்தார் என்று.
எனக்கு இந்த இரண்டு பாபா பற்றி ஒன்றுமே தெரியாது.சரி இங்குள்ள இந்தியர் எவரிடமாவது பாபா கோயிலைப்பற்றி கேட்கலாம் என்றிருந்தேன்.அப்போது எனக்கு ஒரு இந்தியர் கூட பரிச்சயம் கிடையாது.
மறு வாரம் திரு ரமேஷ் ,ஷோபா தம்பதியர் அறிமுகம் ஆனார்கள்.அதற்கு அடுத்த வாரம் அவர்கள் காரில் அவர்கள் வீட்டுக்கு என்னை கூப்பிட்டுக்கொண்டு போகும்போது
சத்ய சாய் படம் காரில் இருந்ததைப்பார்த்த வுடன் தான் அவரைப்பற்றி கேட்க தோன்றியது. நான் சத்ய சாய் கோயிலைப்பற்றி கேட்டவுடன் ஷோபா அவர்கள் அவருக்கு கோயில் என்று எதுவும் இங்கு  இல்லை ஆனால் சமிதி என்று சொல்லப்படும் சாய் சென்டர் இங்கு உள்ளது நான் வாரா வாரம் வியாழன் அன்று செல்வேன் உங்களை இந்த வாரம் அழைத்து செல்கிறேன் என்றார்.
மறு வாரம் அங்கு சென்றேன்.நிறைய இந்தியர்கள் சில அமெரிக்கர்கள்,ஒழுங்கு சுத்தம் முதல்தடவையிலேயே அந்த சூழ்நிலை என்னை கவர்ந்தது.வார வாரம் அங்கு செல்ல ஆரம்பித்தேன்
அந்த வருடம் 1996 நவம்பரில் அங்கு நடைப்பெற்ற பாபாவின்  பூஜை தினத்தில் நான் தான் பாபாவுக்கு ஆர்த்தி எடுத்தேன்.
இதே நவம்பரில் கடந்த வருடம் பாபாவை விமர்சனம் செய்த வாய் இந்த வருடம் அவரின் ஆர்த்தி பாடலை பாடியது
 பிலெடெல்பியா வரும் வரை அந்த சென்டர் அன்பர்கள் தான் என் உறவினர்கள்.எனக்கு கார் கிடைக்கும் வரை ஒருவர் மாற்றி ஒருவர் எங்களை அழைத்துக்கொண்டு செல்வார்கள்
அவரை குருவாக தெய்வமாக நம்ப தொடங்கியதில் இருந்து என் வாழ்வில் வசந்த காலமும் வந்தது சூறாவளியும் வந்தது.ஆனால் அதிலிருந்து மீள சக்தி கொடுத்தார்
வேண்டியது பல நடந்தது நடக்காத கோரிக்கைகளும் உண்டு.ஆனால் அதற்கான காரணங்களையும் மனதில் தோன்ற வைத்தார்
அதனால் அவர் அருளால் சந்தோஷம் வரும்போது தலைகால் புரியாமல் ஆடவும் செய்யவில்லை.துன்பம் வரும் போது நிலை குலைந்து போகவும் இல்லை.
என் குழந்தைகள் சாய் பால விகாரில் நல்லொழுக்கம் படித்தனர்.
அடிப்படை கலாச்சாரத்தை பாபாவின் வார்த்தைகளால் குழந்தைகள் புரிந்துக்கொண்டனர்
 இங்கு வந்ததிலிருந்து நான் பாபா சென்டருக்கு போகவில்லை அவர் எங்களை வழிநடத்திக்கொண்டுதான் இருக்கின்றார்.
ஒரு ஆச்சரியம் நான் எப்பொழது பாபாவை தரிசிக்க புட்டபர்த்தி அல்லது வொய்ட் பீல்ட் போனாலும் ஒரு பைசா கூட என்னிடம் அவர்கள் நன்கொடை என்று வசூலித்ததில்லை.
இங்குள்ள சென்டர்களும் பணம் வசூலிக்க தடை இருக்கின்றது.
அவருக்கு வேண்டியது .நல்லொழக்கம் மனிதநேயம் அன்பு சேவை இதுதான்..
ஒருதடவை பாபா கூறினார்
என்னை பரட்டை தலையா என்று சொன்னால் நான் கோபப்பட மாட்டேன் ஏனென்றால் நான் பரட்டை தலையன் தான்.அது தான் உண்மை
அதே போல் மொட்டைத் தலையா என்றாலும் கோபப்படமாட்டேன்.
ஏனென்றால் நான் மொட்டைத் தலையன் இல்லை அதனால் அவர்கள் என்னை சொல்லவிலை என்று போய் விடுவேன்
எவ்வளவு அர்த்தம் பொதிந்த நகைச்சுவையான அறிவுரை.
உங்களை யாராவது கடிந்தால் அது உண்மையான காரணமாக இருந்தாலும் சரி உண்மைக்கு மாறாக இருந்தாலும் சரி நாம் கோபப்பட அவசிய மில்லை என்பதை எவ்வளவு எளிமையாக கூறியிருக்கின்றார்

அவருடைய இந்த சிறிய உதாரணம் என் பெண்ணுக்கு மிகவும் பிடிக்கும்..தான் பள்ளியில் இதை கடைப்பிடிப்பதாக கூறுவாள்.

அவர் அன்பில் தாய்,கண்டிப்பில் தந்தை,பாசத்தில் குழந்தை,கருணையில் தெய்வம் அவர்தான் பாபா.அவரை புரிந்துகொள்ள முடியாது. உணரவே முடியும்.
அவர் பூதவுடலை நீத்தாலும் இவ்வுலகில் எம்மை வழிநடத்துவார் என்ற நம்பிக்கையுடன் அவர் கூறிய அஹிம்சா நெறியினை பின்பற்றுவோம்

நன்றி மிக்க நன்றி



சுவாமி உங்கள் பொன்னான நேரத்தை எங்களுடன் கழித்ததற்க்கு நன்றி.உங்கள் வழிகாட்டுதலுக்கு நன்றி.
இந்த உலகத்துக்கு இறங்கி வந்து எங்களுக்கு வாழ்க்கையின் அர்த்ததை உணர்த்தமைக்கு நன்றி.
 Sai
இனிமேலும் எங்களை பாதுகாக்கும் உங்கள் சக்திக்கு எங்கள் சிரம் தாழ்த்தி உங்கள் பாதத்தில் எங்கள் நன்றியை தெரிவிக்கிறோம்.

பிரபல ஆசிரியர்கள்


திரும்பி பார்த்தால் இன்னொரு புத்தக கண்காட்சி வந்து விடும்.
அதற்காக இப்போதே சில பிரபலங்கள் புத்தகம் எழுதுவதாக செவி வழி செய்தி.யார் யார் என்ன என்ன புத்தகங்கள் எழதுகிறார்கள் என்று மறைந்திருந்து பார்த்தபோது இவர்கள் மும்மரமாக எழுதிக்கொண்டு இருக்கும் புத்தங்கள்

விளக்கமாக தெளிவாக பேசுவது எப்படி------ரஜனி காந்த்
இந்துக்களின் தெய்வங்கள்-- ஒரு கண்ணோட்டம்------கமல் ஹாசன்
குடும்ப சொந்தம்  மனிதனுக்கு அவசியமா-------கலைஞர்
விளம்பரமில்லா வாழ்க்கை------------கலாநிதி மாறன்
வள்ளலாரின்  மாண்பு-------------அழகிரி
கோபம் ஒரு குணமல்ல---------ஜெயலலிதா
வேட்பாளரை அரவணைப்பது எப்படி----விஜய காந்த்
சுயநலமில்லா தொண்டு--------ராமதாஸ்
கெளதம புத்தரின் கொள்கைகள்----தங்கபாலு
500 ரூபாயில் குடித்தனம் நடத்துவது எப்படி-வறுமை கோடும் ஏழைகள் வாழ்வும்---------ராஜா
அரசியல் சாமர்த்தியம்----வைகோ
சுயமாக சிந்திக்க 100 வழிகள்---------மன்மோகன் சிங்
பதினாறு முழ சேலை கட்டுவது எப்படி----நமீதா
வெள்ளித்திரையில் வெளிச்சமும் வசனமும் ---மணிரத்தினம்
அகலிகை,அனுசுயா கண்ணகி வாழ்க்கை வரலாறு----குஷ்பு—
நகைச்சுவையும் மனிதநேயமும்-----தமிழ் மெகா சீரியல் இயக்குனர்.

ஜான் லெஜெண்ட்



எனக்கு ஜான் லெஜெண்ட் பாட்டுக்கள் மூன்று வருடங்கள் முன்பு வரை அவ்வளவாக பரிச்சயம் இல்லை.2008 அமெரிக்கா சுதந்திர தினத்தன்று பிலடெல்பியாவில் அவருடைய கச்சேரியை நேரில் கேட்டேன் பின்பு தான் ஏன் அவருக்கு இவ்வளவு வெறி பிடித்த ரசிகர்கள் இருக்கின்றார்கள் என்று.புரிந்தது பின்பு நானும் அவர்களில் ஒன்றாக  ஆகிவிட்டேன்.
சமீபத்தில் வந்த இந்த பாடலை கேளுங்கள்.

 You had my heart inside of your hand,
But you played it with a beating.
Throw your soul through every open door, (Whoa)
Count your blessings to find what you look for, (Whoa-uh)
Turn my sorrow into treasured gold, (Whoa)
You pay me back in kind and reap just what you sow.
(You're gonna wish you... Never had met me)
We could have had it all (Tears are gonna fall... Rolling in the deep)
We could have had it all ( you're gonna wish you... never had met me)
It all. (Tears are gonna fall)
It all

இந்த பாட்டு முதலில் அடிலி என்ற மற்றொரு பிரபல பாடகி பாடியது.இரண்டுமே ஒன்றுக்கு ஒன்றுக்கு சளைத்து இல்லை.இரண்டில் எனக்கென்னமோ ஜான் பாடியதே உள்ளத்தை உருக்குவதாக இருக்கின்றது


நான் சொல்றதை கேளுங்க


நம்ப பேச்சை நம்ப காலே கேட்காத போது வேறு யாரு கேட்கப்போறாங்க

என்னாச்சு சுண்டெலிக்கு வடிவேல்,செந்தில்,சிங்கமுத்து போன்றோரின் எழச்சி மிக்க தேர்தல் பிரசாரத்தைக்கேட்டதால் இந்த மாதிரி எல்லாம் தானே வருதா ன்னு சந்தேகப்படாதீங்க
இதை செய்து பாருங்க நீங்களும் என்னை மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவிங்க

இப்ப நாற்காலியில் தானே உட்கார்ந்து இருக்கீங்க தரையிலே உட்கார்ந்து மடி கணணியை என்னை மாதிரி சோபாவில் சாய்ந்துக்கொண்டு காலை நீட்டிக்கொண்டு பார்ப்பவர்களோ அல்லது படுக்கையில் சாய்ந்துக்கொண்டு கை கணணி யை பார்த்துக்கொண்டு இருப்பவர்கள் பின்பு இதை செய்து பார்த்துக்கொண்டு உங்களை நீங்களே நொந்து கொள்ளலாம்.

முதலில் நாற்க்காலியில் அல்லது சோபாவில் உட்கார்ந்தபடியே
வலது காலை ஒரு அடி தூக்குங்கள் இடது கால் தரையிலேயே இருக்கட்டும்
பின்பு வலது பாதத்தை கடிகார சுற்றில் சுற்றவும்..ஒரு ஐந்து அல்லது ஆறு சுற்று சுற்றவும்
அதே சமயம் உங்கள் வலது கையால் ஆறு நம்பரை 6 என்று காற்றில் எழதவும்
இப்ப பாருங்க உங்க கால் உங்க பேச்சை இப்ப கேட்காது.எதிர்ப்பக்கமாக சுற்றும்.
ஒரு முக்கிய நிபந்தனை
யாரும் வீட்டில் இல்லாத போது இதை செய்து பார்க்கவும் .
இல்லாவிட்டால் ஒரு நல்ல குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்கிய பாபம் எனக்கு வந்துவிடப்போகிறது.

=========================================================================
எல்லோரும் என்னை உபயோகமாகவே எழுதலை என்று கூறியதால் கல்லூரியில் படிக்கும் நம் எதிர்கால சந்ததிகளுக்காக
இந்த பதிவு

கல்லூரி பாடத்தில் எப்படி அசைன்மென்ட் எழுதுவது (மறுநாள் தான்  சமர்ப்பித்தல் கடைசி நாள் என்ற சூழ்நிலை) என்பதை இப்பொழது விளக்குகின்றேன்
இரவு 8 மணிக்கு மேல்
1.முதலில் நேராக நல்ல வசதியான நாற்காலியில் உட்காரவும்
2.பின்பு MSN ,ICQ gmail முதலிய இணைப்புக்கு சென்று உங்கள் email ஐ பார்க்கவும்
3. உங்கள் assignment ஐ மிகவும் கவனமாக படித்து புரிந்து கொள்ளவும்
4.கொஞ்சம் காலாற நடந்து அருகில் இருக்கும் கடையில் சாக்லெட் வாங்கி சாப்பிடவும்(டார்க் சாக்லெட் ஞாபக சக்தியை வளர்க்குமாம்)
5.மீண்டும் இமெயிலை பார்க்கவும்
6.கைப்பேசியில் உங்கள் நண்பரைக்கூப்பிட்டு காப்பி சாப்பிட போகாலாமா என்று கேட்கவும்
6.மறுபடியும் அறைக்கு வந்தவுடன் நேராக நாற்காலியில் உட்காரவும் போதுமான வெளிச்சம் இருக்க வேண்டும்
7.மீண்டும் உங்கள் assignment ஐ மிகவும் கவனமாக படித்து புரிந்து கொள்ளவும்
8.நீங்கள் 4 ம் வகுப்பில் படித்த நண்பருக்கு இன்னும் இமெயில் அனுப்பவில்லை என்று ஞாபகத்துக்கு வந்தால் உடனே எழுதவும்
9.பாத்ரூமுக்கு போய் கண்ணாடியில் உங்கள் பற்களை உற்று பார்தது ஏதாவது சொத்தை பல் இருக்கின்றதா என்று ஆராயவும்.
9 ரூமுக்கு வந்தவுடன் MP3 பாட்டுக்களை internet ல் தேர்ந்து எடுக்கவும்
10.அதை பதிவிரக்கம் செய்யவும்
11.மறுபடியும் இமெயிலை பார்க்கவும்.
12 உங்கள் கம்யூட்டரில் MSN chat மூலம் உங்கள் நண்பர்களிடம் உங்கள் எதிர்காலத்தைப்பற்றி திட்டமிடவும்(வேறு என்ன கோடை விடுமுறை பயணத்திட்டம் தான்)
13.புதிதாக download செய்த mp3 பாட்டுக்களைக் கேட்கவும்.
14.உங்கள் பெண் நண்பி ஒருவருக்கு போன் பண்ணி அவர் எழுதிவிட்டாரா என்று கேட்கவும்.அந்த பாட பேராசிரியர் ,பாடத்திட்டம்,கல்லூரி,மற்றும் உலக அளவில் மாணவருக்கு எதிராக நடக்கும் பாடசுமை  இவைகளைப்பற்றி உங்கள் மனக்குறைகளை கொட்டித்தீர்க்கவும்
15.பின்பு தெரு முனை பெட்டிக்கடையில் சூயிம்கம் மற்றும் அன்றைய தினசரியையும் வாங்கவும்.
16.தினசரியில் முக்கியமான நிகழ்ச்சிகளை படிக்கவும்(அதான் TV நிகழ்ச்சி நிரல் தாங்க)
17.bored.com வெப்சைட்க்கு போய் உங்களுக்கு பிடித்த விளையாட்டை தேர்வு செய்யவும்
18.கைகளை கழுவவும்
19.போன ஆண்டு கல்லூரி மலரை எடுத்து நண்பர்கள் புகைப்படங்களைப்பார்க்கவும்.தெரியாத நண்பர்களை உங்கள் நினைவுக்கு கொண்டு வரவும்
20.இப்போது கம்யூட்டரை reboot பண்ண வேண்டி இருக்கும்.
21.Assignment ஐ மறுபடியும் படிக்கவும்
22.நாற்காலியை ஜன்னல் ஒரம் நகர்த்திக்கொண்டு சூரியோதத்தை ரசிக்கவும்
23 தரையில் படுத்துக்கொண்டு உரக்க கொட்டாவி விடவும்
24.மன அழுத்தத்தை தீர்க்க எந்த பொருளையாவது உடைக்கவும்
25. மறுபடியும் இமெயிலை பார்க்கவும்
24. மணி இப்பொழது காலை 6 மணி. மீதம் இருக்கும் 30 நிமிடத்தில் assignment ஐ அவசர அவசரமாக எழுதவும்
25.எல்லோரிடமும் இரவு முழுவதும் தூங்காமல் எப்படி கடினமாக உழைத்தீர்கள் என சொல்லி புலம்பவும்..



அவள் ஒரு தொடர்க்கதை


நடிகை சுஜாதாவுக்கு ஓர் அஞ்சலி.
எழுபதுகளின் ஒரு அழகிய கண்டுபிடிப்பு நம் சுஜாதா.
அதுவும் பாலசந்தர் அறிமுகம் வேறு. என்னை பொறுத்தவரை சுஜாதா,நதியா இவர்களுக்கெல்லாம் in built சோகம் கலந்த முகம் அமைந்துள்ளது என நினைப்பதுண்டு. அது அவர்கள் நடிப்பை பல
 மடங்கு தூக்கி காட்டும்.
முதல் படமான அ.ஒ.தொ.கதையிலேயே நம் மனதை தொட்ட நடிப்பு.அப்போது பிறந்த பல குழந்தைகள் சுஜாதா என்றே பெயர்
சூட்டப்பட்டன.பிறகு பல படங்கள். அன்னக்கிளியில் சோகத்திலும் ஒரு சுகம் இருக்கு வாத்தியார் அய்யா என்று சிவகுமாரிடம் சொல்லி விட்டு தன ஆசையை அடக்கிகொள்ளும் காட்சியில் அனைவரையும் கலங்க வைத்து விடுவார்.பிறகு விதி திரைப்படத்தில் வக்கீலாக  அசத்தினார்.பல நாட்கள் தொடர்ந்து ஒலி/ஒளி பரப்பான அந்த வசனங்கள் அப்போது பலருக்கு மனப்பாடம்.
தமிழ் திரை உலகம்  சுஜாதாவை என்றும் மறக்காது.
புதுவை ராம்ஜி


ஆமாம் விதி படத்தைப்பார்த்து விட்டு  வக்கீலுக்கு படித்த பெண்கள் அநேகம் பேர்கள்
கதாநாயகனுக்கு மகளாக நடித்து பின்பு ஜோடி சேர்ந்து பின்பு அம்மாவாக நடித்து ஒய்வு பெரும் தமிழ் கதாநாயகிகளில் சுஜாதாவும் விதி விலக்கில்லை. ஆனால் அவர் எப்போதும் கம்பீரத்தை விட்டுக்கொடுக்காமல் நடித்து விட்டு மறைந்தார்.
 சுஜாதா நடித்து எனக்கு பிடித்த பாடல் இது.




 அந்தப்புரத்தில் ஒரு மகராணி
அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராஜன்
அந்தப்புரத்தில் ஒரு மகராணி
அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராஜன்
கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள்
காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்

சாமந்தி பூக்கள் மலர்ந்தன
இரு சந்தன தேர்கள் அசைந்தன
சாமந்தி பூக்கள் மலர்ந்தன
இரு சந்தன தேர்கள் அசைந்தன
பாவை இதழ் இரண்டும் கோவை
அமுத ரசம் தேவை
என அழைக்கும் பார்வையோ

அந்தப்புரத்தில் ஒரு மகராஜன்
அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராணி
ஆசை கனிந்துவர அவன் பார்த்தான்
அன்னம் தலை குனிந்து நிலம் பார்த்தாள்

சங்கு வண்ண கழுத்துக்கு தங்கமாலை
அவள் சங்கமத்தின் சுகத்துக்கு அந்திமாலை
சங்கு வண்ண கழுத்துக்கு தங்கமாலை
அவள் சங்கமத்தின் சுகத்துக்கு அந்திமாலை
குங்குமத்தின் இதழ் சின்னம் தந்த காலை
அவன் கொள்ளை கொள்ள துடித்தது என்ன பார்வை
அது பார்வையல்ல பாஷையென்று கூறடி என்றாள்

அந்தப்புரத்தில் ஒரு மகராஜன்
அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராணி
கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள்
காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்

முத்துச்சிப்பி திறந்தது விண்ணை பார்த்து
மழை முத்து வந்து விழுந்தது வண்ணம் பூத்து
முத்துச்சிப்பி திறந்தது விண்ணை பார்த்து
மழை முத்து வந்து விழுந்தது வண்ணம் பூத்து
பித்தம் ஒன்று வளர்ந்தது முத்தம் கேட்டு
அவள் நெஞ்சில் வந்து பிறந்திடும் தொட்டில் பாட்டு
அங்கே தென்பொதிகை தென்றல் வந்து ஆரிரோ பாடும்

அந்தப்புரத்தில் ஒரு மகராஜன்
அவள் அன்புக்கரத்தில் ஒரு மகராணி
கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள்
காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்
ஆராரிரோ...ஆராரி...ராராரிரோ
ஆரிராரோ ஆராரிரோ
ஆராரிரோ ஆராரிரோ ஆராரிரோ ஆராரிரோ

இந்திய அணிக்கு பாராட்டுக்கள்

  India's Sachin Tendulkar, centre top, is carried by his teammates after beating Sri Lanka in the Cricket World Cup.

அன்று நினைத்தோம் அதற்க்கு உழைத்தோம் 
இன்று முடித்தோம் இடத்தைப்பிடித்தோம்

------------------------------------------------------------------------------------------------------------


உள்ளப்போராட்டம்

ஒரு தாத்தா தன் பேரனுடன் உலாவப்போகும் போது உரையாடிக்கொண்டு சென்றார்.
என்னுள் ஒரு பெரிய போர் நடந்துக்கொண்டு இருக்கின்றது என்றார்
இரண்டு ஓநாய்கள் என்னுள் சண்டை போட்டுக்கொண்டே இருக்கின்றன.

ஒரு ஒநாய் அசிங்கமானது கொடூர குணமுடையது .அது கோபம், பொறாமை,போர்க்குணம்,,பிடிவாதம்,தற்ப்பெருமை,தன்னலம்,,பொய் முதலிய குணம் நிரம்பியது.
இரண்டாவது ஒநாய் அழகானது,,நல்ல குணமுடையது,அது நட்ப்பானது
அன்பு,,நியாயம்,அமைதி,உண்மை நேர்மை,நீதி,இரக்கம் மற்றும் ,தாராள குணமுடையது.
இந்த இரண்டுக்கும் உள்ள போரட்டம் உன் உள்ளத்திலும் மற்றும் எல்லோரிடத்திலும் இருக்கும்.என்றார்  
 பேரன் அவரை உற்றுப்பார்த்துவிட்டு அவருடைய பேச்சை உள்வாங்கிக்கொண்டான்
பின்பு தாத்தாவிடம்  தாத்தா எந்த ஒநாய் ஜெயிக்கும் என்று கேட்டான்
நீ எதற்கு தீனி போடுகிறாயோ அதுதான் என்று தாத்தா பதில் சொன்னார்.
 .