துலாபாரம்


1961 இல் வெளிவந்த பாசமலர் திரைப்படத்தை பார்த்தவர்கள் கண்கலங்காமல் இருந்ததைல்லையோ அதேப்போல் 1969 ம் வருடம் வெளிவந்த துலாபாரம் திரைப்படத்தைப்பார்த்துவிட்டு கண்ணீர் வராமல் வெளிவந்தவர்கள் இல்லை.
பின்பு இந்த படத்தை 80 களில் கறுப்பு வெள்ளை  டெலிவிஷனில் மாநில திரைப்படங்கள் வரிசையில் டில்லி தூர்தர்ஷன் ஒரு ஞாயிறு மதியம் இந்த படத்தை போட்டது.அதை நான் சாப்பிடும் போது பார்த்துவிட்டு மனதை பிழிந்த காட்சிகளால் சாப்பாட்டின் பாதியில் எழுந்து விட்டேன் மலையாளத்தில் முதலில் வந்த துலாபாரம் மலையாளத்தில் கதாநாயகியாக நடித்த சாரதாவே தமிழிலும் கதாநாயகியாக நடித்தார். அவருக்கு ஊர்வசி பட்டம் இந்தப்படத்தால் கிடைத்தது.
ஏ வி எம் ராஜன் பரிதாபமான கணவன் பாத்திரத்தில் நடித்திருந்தார்.முத்துராமன் தன்னலமுள்ள கதாப்பாத்திரத்தில்  நாம் அந்த பாத்திரத்தை வெறுக்கும்படி நன்கு நடித்திருந்தார்.
மற்ற எல்லா சோகப்படத்தில் வருவது போலவே இந்த படத்திலும் துரோகமே எல்லாத்துயரங்களுக்கும் அடிப்படையாக இருக்கின்றது.
காதலன் காதலிக்கு செய்யும் துரோகம்,முதலாளி தொழிலாளிக்கு செய்யும் துரோகம்,வக்கீல் கட்சிக்காரருக்கு செய்யும் துரோகம்,நண்பருக்கு செய்யும் துரோகம் என்று பல துரோகங்கள் ஒரு அபலையின் வாழ்வில் விளையாடியிருப்பதை இந்த படத்தில் காணலாம்
அந்தப்படத்தில் சோகத்தை ஓவர் டோஸாக கொடுத்திருகின்றார்களோ என்று இப்பொழுது எனக்கு சந்தேகம் வருகின்றது.
இந்த படத்தின் இயக்கம் வின்சென்ட்.—பாடல் –கண்ணதாசன் இசை தேவராஜன். 
இந்தபாடல் முதலில் கேட்டபோது அவ்வளவாக மனதில் இடம் பிடிக்கவில்லை கேட்க கேட்க தான் பிடிக்க ஆரம்பித்தது.


காற்றினிலே பெரும் காற்றினிலே,
ஏற்றிவைத்த தீபத்திலும் இருள் இருக்கும்,
காலம் எனும் கடலிலே சொர்கமும் நரகமும்,
அக்கரையோ இக்கரையோ?

ஆண்டவனும் கோவிலில் தூங்கிவிடும் போது,
யாரிடத்தில் கேள்வி கேட்பது,
ஏழைகளின் ஆசையும் கோவில் மணி ஓசையும்
வேறுபட்டால் என்ன செய்வது,
தர்மமே மாறுபட்டால் என்ன செய்வது,

ஆடுவது நாடகம் ஆளுக்கொரு பாத்திரம்,
இறைவனுக்கு வேஷமென்னவோ?
ஆடவைத்து பாடுவான் மூடுதிரை போடுவான்
மேடை அவன் மேடையல்லவோ
வாழ்க்கையின் பாதை அவன்
பாதையல்லவோ?

இயக்குனர் பாலாவும் விளிம்பு நிலை மனிதர்களும்

இயக்குனர் பாலாவும்விளிம்பு நிலை மனிதர்களும்  
தலைப்புக்கு பொருத்தமா இருக்குல்ல


  


தந்தையர் தினம்


தந்தையர் நாடென்னும் பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே என்றார் பாரதி..
எல்லோரும் தாய்த்திருநாடு என்னும் போது அவர் மட்டும் ஏன் தந்தை என்று சொன்னார்.?
ஆம் தாய் என்று சொன்னால் அன்பு வந்துவிடும் ஆனால் பாரதி வாழ்ந்த காலத்தில் நமக்கு வீரம் வேண்டியிருந்தது ஒரு சக்தி தேவைப்பட்டது அது யாரால் நமக்கு கொடுக்கமுடியும் ஒரு தந்தையால் அல்லவா அது முடியும்.
எனக்கு என்னமோ தாயை மிக உயர்த்தி பேசும் இந்த சமூகம் அதற்கு சமமாக தந்தையை பார்ப்பததாக தெரியவில்லை.
என்னைப்பொறுத்த வரையில் தாயை  விடவும் தந்தை நமக்காக தியாகங்கள் நிறைய செய்கின்றார் என தோன்றுகின்றது

“தாயார் சுமையோ சில மாதம் தகப்பன் சுமையோ பல காலம்”

என்று கவிஞர் வாலி பாடியது போல் தகப்பனின் சுமை ஆயுசு வரையில்.
"குழந்தை பாரம் உனக்கல்லவா குடும்பபாரம் எமக்கல்லவா"

என்று ஒரு கணவன் பாடுவது போல் இன்னொரு திரைப்பட பாடல்.
இது தந்தையர்களுக்கு மிகப்பொருந்தும்.
என் தந்தையும் இதற்கு தகுந்த உதாரணமாக திகழ்ந்தார்.
எனது தாய் அவ்வளவாக படிக்காத குடும்ப தலைவி.எனது தந்தை ஒரு பொறியாளர்.ஆனால் மனைவியை தகுந்த மரியாதையுடன் நடத்தினார்.வீட்டு நிர்வாகம் அத்தனையிலும் அம்மாவின் ஆலோசனைபடி நடந்தார்.ஏன் இதை கூறுகிறேன் என்றால் இந்த காலத்தில் மனைவி எவ்வளவு படித்திருந்தாலும் சம்பாதித்தாலும் சில கணவர்கள் அவர்களை அலட்சியம் பண்ணும் போது அந்த நாளில் என் தந்தை மனைவிக்கு உரிய உரிமையை கொடுத்தார் ஆனாலும் குடும்ப தலைவன் என்ற கம்பீரம் அவரிடம் எப்பொழுதும் இருக்கும்..

என் தகப்பனார் அரசு வேலையில் இருந்து  பொறியாளராக ஓய்வு பெற்று விட்டு பின்பு தனது 78 வயது வரையில் ஒரு தனியார் துறையில் வேலைப்பார்த்தார்.எங்களிடமிருந்து பணம் என்று எதிர்ப்பார்த்தது இல்லை.மிக மிக எளிமையாக வாழ்க்கை நடத்தினார்.நாங்கள் வெளிநாட்டில் இருந்தபோதும் வெளிநாட்டுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் சிறிது கூட இல்லாமல் இருந்தார்
அவர் மோதிரமோ அல்லது வேறு தங்க நகையோ அணிந்து நாங்கள் பார்த்தது இல்லை தனது.குழந்தைகள் நலமே போதும் என்ற எண்ணத்துடன் கடைசி நாள் வரை வாழ்ந்தார். அவருக்காக் வைத்திய செலவுக்காக எந்த வித பெரிய செலவும் எங்களுக்கு அவர் வைக்கவில்லை.
அவர் வார்த்தைக்கு மாறாக நான் செய்த செய்கைக்கு நானே பலனை அனுபவித்த பின்பு தான் அவருடைய அறிவுரையின் உண்மை காலம் சென்று என்னால் உணரப்பட்டது
அவரின் நினைவு நாள் இரண்டு நாட்கட்கு முன் வந்தது.
.


அப்பா உன்னால் வந்தேன் உலகில்.
என் உடலில் நீயும் இருக்கின்றாய் ஒரு பங்காய்
நீ உணர்த்திய நேர்மையில் நடைபயில
என் வாழ்வை வழி நடத்துகின்றாய் ஒரு குருவாய்

ஓய்வில்லா உழைப்பு மட்டும் உன்னிடம் அதில் அடைந்த
பலன்கள் அனைத்தும் எங்களிடம்.
தன்னலமில்லா உள்ளத்தின் பெயர் தந்தை என
நான் அறிந்துகொண்ட போது நீ இல்லை இவ்வுலகில்

உன் கண்டிப்பு இல்லையெனில் நங்கூரம் இல்லா
மரக்கலமாய் பாறையில் தூளாயிருப்போம்.
உன்னால் தானய்யா எமக்கு அங்கீகாரம் எல்லா
நலங்களும் தந்தவனே எங்கிருக்கின்றாய் இன்று.

அடுத்த பிறவி ஒன்று இருந்தால் இறைவா
என்னை அவருக்கு மகனாக பிறக்க வைக்காதே
எத்தனை தடவை அவரிடம் நான் நன்றி கடன் பெறுவது.
அவருக்கு ஒரு முறையாவது என்னை தந்தையாக்கு
இன்று உலக தந்தையர் தினம்
எல்லா தந்தையர்க்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்

கண்ணன் தாசன்


கண்ணதாசன் கவித்திறன் பற்றி எழுதியவர் அநேகம். நானும் அவர் புகழைப் பாட வேண்டும் என்ற நீண்ட நாள் ஆவலின் விளைவே இந்த தொகுப்பு. அவரின் பாடல் வரிகளை பக்தி , காதல், தத்துவம் , வீரம் , பாசம் என்று பல வகைகளையும் நாம் சுவைத்து உள்ளோம். பக்தி என்ற தலைப்பை பார்த்தால் பல கடவுள்கள் மீது பாடி உள்ளார். என்றாலும் கண்ணதாசன் அல்லவா ? முதலில் அவர்  கிருஷ்ணன் மீது கொண்ட பக்தியை சுவைப்போம்

ண்ணதாசனும் கிருஷ்ணனும்
கண்ணனின் நிறம் என்ன ?  கவிஞர் இப்படி வர்ணிக்கிறார் :
                              கண்ணனின் மேனி கடல் நீலம். அவன்
                              கண்களிரண்டும் வான் நீலம்.
                              கடலும் வானும் அவனே என்பதை
                              காட்டும் குருவாயூர் கோலம்.     (கிருஷ்ண கானம்)
  மேலும்,      
                               பச்சை நிறம் அவன் திருமேனி
                               பவழ நிறம் அவன் செவ்விதழ்கள்
                               மஞ்சள் நிறம் அவன் தேவி முகம்
                              வெண்மை நிறம் அவன் திரு உள்ளம் (திருமால் பெருமை)
அவன்  கருப்பு சரி.  ஆனால் ஒரு பெண் கருப்பு என்று ஒதுக்கி வைக்கப்படும் போது அவள் கண்ணனிடம் எப்படி அழுகிறாள் தெரியுமா?
                              மனம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா
                             நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா
                             என்றவர் ,
                            நல்ல இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா (நா.ஒ.பெண்)
                            என்று உரிமையோடு கண்ணனை திட்ட அவரால் மட்டுமே முடியும்.
நாயகி பாவத்தில் அவர் கண்ணனிடம்  ராதை  ஊடல் செய்வது போல் ,
                            கோபியர் தம்மை தொட்ட கைகள் எந்தன்
                           கூந்தலை தொட வேண்டாம்.
                           நான் கோடியில் ஒன்று  அல்ல.
                           கொஞ்சிட வர வேண்டாம். என்
                          கோலமும் கெட வேண்டாம்.           (கி.கானம்)
  ஆனால் திருடன் சும்மா விடுவானா?
                            சோலை யமுனை வெள்ளம்
                            துள்ளி எழுந்து அவள் மேனியை
                           தொடவும் செய்தான் கண்ணன்
                           மீண்டொரு கலகம் செய்தான்.
என்று முடிக்கிறார்.  எவ்வளவு அழகு ?
அதே கிருஷ்ண கானத்தில்
                             மோகனனின் பெயரைச்சொல்லி
                            மூடி வைத்த பாத்திரத்தில் மூன்று படி
                            நெய் இருக்குது ராமா ஹரி .
                            படிப்படியாய் மலையில் ஏறி பக்தி செய்தால் துன்பம்
                            பொடிபொடியாய் நொறுங்குதடி
                           அடி படிப்பில்லாத ஆட்கள் கூட
                           பாதத்திலே போய் விழுந்தால்
                          வேதத்திற்கே பொருள் விளங்குது கிருஷ்ண ஹரி
என்று அவன் பெருமையை விளக்குகிறார்.
மனம் துன்பத்தில் உழலும் போது அவர் கதா பாத்திரங்கள் வாயிலாக கிருஷ்ணனிடம் கூறியவை நமக்கு என்றும்
ஆறுதல் அளிப்பவை. உதாரணங்கள் :
                             பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள். அந்த
                            பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்.
                            நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்?
                            நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்.
                           உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா
                           உணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம்
                           விலகும் கண்ணா.   (அவன்தான் மனிதன்)
                           தர்மம் என்னும் தேரில் ஏறி கண்ணன் வந்தான்.
                           தாளாத துயர் தீர்க்க கண்ணன் வந்தான்.
                           கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா
                           கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா. (ராமு)
      என்னும் போது நமக்கும் துன்பம் குறைந்து விடுகிறது.
 பாரதியை போல இறைவனை நண்பனாய், சேவகனாய், காதலியாய், ஆசானாய் பார்த்த நம் கண்ணதாசனை
நாமும் தொடர்ந்து ரசிப்போம்.    
==================================================================


பாரத மாதா , அன்னை பூமி , மங்கையராய்ப் பிறப்பதற்கே ,,....
எதற்கு இந்த பீடிகை என்று நினைக்கிறீர்களா?
இதோ டைம்ஸ் ஆப் இந்தியாவில் 16 .06.2011  அன்று வந்த செய்தியினை படியுங்கள் :
 உலகத்தில் உள்ள நாடுகளில்  பெண்கள் வாழ்வதற்க்கு மிக மோசமான நாடுகள் என்ற பட்டியலில் இந்தியா 5 வது இடத்தில உள்ளது. இது Thomson Reuters Foundation எடுத்த சர்வே வெளியீடாகும்.
நமக்கும் கீழே மோசமான நாடுகள் எவை தெரியுமா?
ஆப்கான , காங்கோ, பாகிஸ்தான், சோமாலியா ஆகியவை.
மிக அதிகமாக விபச்சாரம், பெண் சிசு கொலை, மேலும் கடந்த நூற்றாண்டில் ஐந்து கோடி பெண்கள் காணாமல் (!) போயிருக்கிறார்கள் என்ற பெருமையினால் (!) நமக்கு நான்காவது இடம் கிட்டியிருக்கிறது.
நம்ப முடியவில்லை. மாதொரு பாகன் ,பாரத மாதா, தமிழ் தாய் போன்று பல வகைகளிலும் பெண் பெருமை போற்றும் நாம் நாடா இப்படி?
பொன்னான மனம் ஒன்று தந்தாய் கண்ணா -
 அதில் பூப்போன்ற நினைவொன்று வைத்தாய் கண்ணா
 கண் பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா - எந்தக்
கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா
புதுவை ராம்ஜிஎல்.கே.ஜியின் எழுத்து


கடந்த இரண்டு நாட்களாக நான் எழுதிய பதிவு ஒன்றுக்காக சில அன்பர்கள் என்னை கண்டன பின்னூட்டங்களால் கிழி கிழி என்று கிழித்துக்கொண்டிருந்த வேளையில் என் பதிவில் உள்ள ஆரம்ப வரிகளான கான மயிலாட பாடலின் வரிகளில் உள்ள எழுத்துப்பிழையினை சுட்டிக்காட்டி பிரபல எழுத்தாளர் அமுதவன் எழுதியிருந்தார்.பத்திரிக்கைகளில் மட்டும் நான் அறிந்த ஒரு சிறந்த  எழுத்தாளர் எனக்கு எழுதுவது நான் எதிர்பாராதது.
அவர் போன்ற எழுத்தாளர்கள் முன் நான் வான்கோழி கூட இல்லை .சும்மா கொசு தான்.
அவர் என் பதிவை பார்த்து  எனக்கு எழுதியது.ஹார்வேர்ட் பேராசிரியர் நம் ஊர் 3 வயது எல் கே ஜி பையன் போட்ட ) C என்று திருத்தியதற்க்கு சமம்.
பயமாக இருக்கிறது அவரெல்லாம் என் பதிவை படிக்கிறாரே என்று.
அமுதவன் சார் மிக்க நன்றி பிழையை சரி செய்து விட்டேன்.
==================================================================================
ஜென் துறவி பென்கே தனியாக வாரக்கணக்கில் தியானத்தில் ஈடுப்பட்டிருப்பார்.அப்போது அந்த தியானத்தில் கலந்துக்கொள்ள ஜப்பானில் உள்ள அவரது மாணவர்கள் வருவார்கள்.
அப்பொழுது ஒரு மாணவன் பொருள் திருடியதற்க்காக பிடிப்பட்டான்.மற்ற மாணவர்கள் அவனை பிடித்து வந்து குருவின் முன் நிற்க வைத்து அவனுக்கு தண்டனை கொடுக்கும்படி கேட்டுக்கொண்டனர். குரு ஒன்றும் கூறாமல் அமைதியாக இருந்தார்.
மற்றொரு சமயம் அதே மாணவன் அதே போல் மறுபடியும் திருடிக்கொண்டு மாட்டிக்கொண்டான்.அப்பொழுதும் மாணவர்கள் அவனை கையும் களவுமாகப் பிடித்துக்கொண்டு குருவிடம் ஒப்படைத்தனர்.அப்பொழுதும் குரு அவனை ஒன்றும் சொல்லவில்லை.
மற்ற மாணவர்களுக்கு  ஒரே கோபம் .ஒரு புகார் கடிதத்தை குருவிடம் கொடுத்தார்கள்..அதில் அந்த திருட்டு மாணவனை உடனடியாக குரு வெளியேற்ற வேண்டும் என்றும் அவன் அவர்களோடு சேர்ந்து படித்தால் அவர்கள் அனைவரும் அந்த குருகுலத்தை விட்டு விலகப்போவதாகவும் என்று எழுதியிருந்தார்கள்.
குரு அமைதியாக அதைப்படித்து விட்டு நல்லது மாணவர்களே.நீங்கள் தாரளமாக வேறு இடத்துக்கு சென்று படித்து முன்னேறுங்கள்..உங்களுக்கு நல்லது எது கெட்டது எது என்று தெரிந்திருக்கின்றது.ஆனால் இந்த ஏழை சகோதரனுக்கு எது நல்லது எது கெட்டது என்று தெரியவில்லை.யார் இவனுக்கு சொல்லி தருவார்கள்? அதை சொல்லி தருவது என் கடமை அல்லவா? நீங்கள் அனைவரும் வேறிடம் சென்றாலும் இவனை நான் ஆதரிப்பேன் என்றார்.
அதைக்கேட்ட திருடிய மாணவனின் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாய் கொட்டியது.திருடவேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் இருந்து மறைந்தது

பார்ப்பனர்களுக்கு ஏற்ப்பட்டிருக்கும் பலத்த டிமாண்ட்


எப்போ நான் சில நகைசுவை துணுக்குகளை என் பதிவில் போட்டேனோ திரு கருணாநிதிக்கும் நகைச்சுவையாக பேசவேண்டும் என்று தோன்றிருக்கின்றது,(சுண்டெலியை படித்திருப்பாரோ?)
தி.மு.க தலைவரின் பேட்டியில் இருந்து

கேள்வி: ஸ்பெக்ட்ரம் பிரச்சனை தேர்தல் தோல்விக்குக் காரணமா, இல்லையா?

பதில்: இல்லை. ஒரு சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம்.

 சுண்டெலி இந்திய நிருபர் சேகரித்த செய்திகள்.

இதனால் சோனியா காந்தி அவசர அவசரமாக காங்கிரஸ் பொது குழவை கூட்டி பார்ப்பனர்களை காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலத்திலிருந்து வெளியேற்றி காங்கிரஸ் ஆட்சி அல்லாத மற்ற மாநிலத்தில் குடியேற்றி அங்குள்ள ஆட்சியாளரை விரட்டி அடிக்க உதவி செய்யும் படி தீர்மானம் நிறைவேற்றினார்.
அதற்கு எல்லா எதிர்கட்சினர் எதிர்ப்பு தெரிவித்து பிராமணர்கள் ஆதரவு தமக்குதான் வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி அவர்கள் காங்கிரஸ் ஆளும் மாநிலத்தை விட்டு போகாமல் இருக்க உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ராம் தேவ் ,அத்வானி முதலியோர் அறிவித்துள்ளனர்.

 நமது வெளிநாட்டு நிருபர் அனுப்பிய மெசேஜ்

இதை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி அமெரிக்க நாட்டில் உள்ள பார்பனர்களின் எண்ணிக்கை புள்ளி விவரத்தை உளவு துறையின் மூலம் உடனடியாக கேட்டு அறிந்து
அவர்களுக்கு ஏகப்பட்ட சலுகைகளை அளித்து அவர்களை திருப்தி படுத்த முயற்சி எடுத்துள்ளார்
இதற்கு மாற்றாக புஷ்ஷின் ரிப்பபளிக் கட்சி பிராமணர் பிரநிதிகளை சந்தித்து 2012 வரும் தேர்தலுக்கு அவசர அவசரமாக அவர்கள் ஆதரவை கோரினர்..

மற்ற நாட்டு புரட்சியாளர்கள் பிராமணர்களை உடனடியாக வரவழைத்து ஆட்சியை மாற்ற முடியுமா என்று யோசித்து வருகின்றார்கள்.
இதனால் உலகில் உள்ள பிராமணர்களுக்கு மிகுந்த டிமாண்ட் ஏற்ப்பட்டுள்ளது.
 கடைசி செய்தி.
திரு ராமதாஸ் அவர்கள் பாரதவாஜ் ரிஷி குலத்தில் அந்தண வம்சத்தில் பிறந்த ஒரு பெண் வன்னிய குலத்தில் உள்ள ஒருவரை மணந்ததால் வன்னியர் அனைவரும் பிராமணர்களே அல்லது எல்லா பிராமணரும் வன்னியரே என்று தெளிவாக திரு கருணாநிதிக்கு ஆதரவாக கூறினார்.


கொஞ்சம் சிரிச்சுதான் பாருங்களேன்


என்னடா சிரிச்சுக்கிட்டே போறே?
யாரும் பார்க்கிறதுக்குள்ளே ,ஸ்டாம்ப் ஒட்டாத கடுதாசியை தபால் பெட்டியிலே போட்டுட்டு வந்துட்டேன்.

அந்த காலத்திலேயே பத்திரிக்கையை ஆதரித்த அரசன் யார் தெரியுமா?
சந்தா சாகிப்

நீங்க போன பந்தியிலும் உட்கார்ந்த மாதிரி தெரிஞ்சுதே
என்ன பண்றது பொண்ணு மாப்பிள்ளை இரண்டு வீட்டுக்கும் தெரிஞ்சவனா போயிட்டேனே.!

பக்கத்துக் கிளாஸ்ல நம்ப புரொபசர் ஜோக் அடிக்கிறார்னு நெனைகிறேன்
எப்படித் தெரியும்?
பசங்க எல்லாம் “சைல்ண்ட்டாக இருக்காங்க பார்

அந்த சிலந்திப் பூச்சிக்கு ஏன் இவ்வளவு தற்பெருமை?
வெப் சைட் ஆரம்பிச்சிருக்காம்.

நீ நாளுக்கு நாள் குண்டாகிக் கொண்டே போகிறாய் நீச்சல் அடித்தால் இளைத்து விடுவாய்
இது எப்படி திமிங்கலம் சமுத்திரத்திலேயே தான் 24 மணி நேரமும் இருக்கு.அது இளைத்தா இருக்கு

ஆசிரியர்: கும்பகர்ணன் மாதக் கணக்கில் தூங்கினான் இது என்ன காலம்
மாணவன்: கொசுவே இல்லாத காலம் சார்

ஏண்டா ராஜூ உங்க பள்ளியில் ஓட்டப்பந்தயம் என்றாயே பரிசு கிடைத்ததா?
பயந்தாக்கொள்ளிப்பசங்க எனக்குப்பயந்து கொண்டு எல்லாப்பசங்களும் எனக்கு முன்னால் போயிட்டாங்க.

ஸ்பின் பவுலர் என்றால் கையை சுழற்றிக்கொண்டுதானே பந்து வீசுவார்கள். இவர் என்றால் காலை பின்னிக்கொண்டு வித்தியாசமாக பந்து வீசுகிறாரே?
அவர்தான் லெக் ஸ்பின்னராச்சே

உன் காதலனோடு வெளியூர் லாட்ஜில் ஒரு வாரம் தங்கிட்டு வந்திருக்கியே அவன் உன்னை கல்யாணம் பண்ணிக்குவானா?
சீ போடி இதை போய் அவர் கிட்டே எப்படி வெக்கத்தை விட்டு கேக்கிறது.

உங்க ஸ்கூல் எப்படி நடக்கிறது?
ஃபீஸ் ஃபுல்லாக இருக்கு

என்னோடு நோயைப் பற்றி உங்களுக்கு என்ன தோணுது டாக்டர்
ட்ரீட்மெண்டை ஆரம்பிக்கும் முன்னே ஃபீஸ் வாங்கிடறது நல்லதுனு தோணுது.

தலைவரே எப்ப பார்த்தாலும் மரத்திலேயே இருக்கிறாரே அவர் யார்
அவர் தான் நம்ப கழக கிளைச் செயலாளர்.

உங்களுக்கு இதெல்லாம் தெரிஞ்சுருக்குங்க,


மோனாலிசாவுக்கு புருவம் கிடையாது—(அப்படியா தெரியவேயில்லை)
முட்டையிடும் பிராணிகளுக்கு தொப்புள் பள்ளம் கிடையாது (அப்ப எப்படி பம்பரம் விடுவாங்களாம்)
தி பேசன்ஜி வகை நாய்களுக்கு குரைக்கத்தெரியாது ( அப்போ கண்டிப்பா கடிக்கும்)
தேனிக்கு ஐந்து கண்கள்—( அப்போ ஐந்து கண்ணன் வரான் என்று குழந்தைகளை பயமுறுத்தலாம்)
சூயிங்கம் மென்றுக்கொண்டே வெங்காயம் உரித்தால் கண்ணீர் வராது ( அப்போ மெகா சீரியலுக்கு ?)
வாழைப்பழம் ஆப்பிள் முதலிய பழங்களை வாசனை பிடித்தால் உடம்பு இளைக்கும் (அப்போ பழக்கடைக்காரர்கள் ஒல்லியாய் இருப்பார்களே?)
அமெரிக்கா உச்சநீதி மன்ற நீதிபதி ஆவதற்க்கு வக்கீல் பட்டம் தேவையில்லை (என்ன சட்டம் இது?)
பூனைக்கு 100 வகை குரல் நாளங்கள் உண்டு ( பல குரல் மன்னன்)
பசு மாட்டை மாடியில் ஏற்றலாம் ஆனால் இறங்க வைக்க முடியாது ( அப்போ இரண்டாம் மாடியில் கிரகப்பிரவேசம் செய்தால் என்ன செய்வார்கள்?)
தேன் ஒன்றுதான் கெட்டுபோகாத பண்டம்( அதான் நம்பளை அம்மா தேனே என்று கொஞ்சினாளா?)
ஆஸ்திரிய நாடுதான் முதன் முதலில் போஸ்ட்கார்ட் வெளியிட்டது ( போஸ்ட் கார்ட் ஆ அப்படின்னா?)

அற்புத நடிகர் எஸ்.வி.ரங்கராவ்
நாம் 60 வயது கதாநாயகர்கள் 18 வயது கதாநாயகிக்கு ஜோடியாக நடிப்பதைப் பார்த்து ரசிக்கும் நம்ப ரசிக பெருமக்களுக்கு நான் சொல்லும் இந்த செய்தி கொஞ்சம் புதுசு.
1950 களில் தொடங்கி 60 70 களில் கண்ணியமான அப்பா பாத்திரத்தில் நடித்த எஸ்.வி.ரங்கராவ் தன் வாழ்நாளில் முதுமையே பார்த்ததில்லை. ஆம் அவர் மறைந்த போது அவருக்கு வயது 56 தான்.. திரு எம்.ஜி.ஆரை விட வயதில் இளையவர் ஆனால் அவருக்கு தந்தையாக பல படங்களில் நடித்தவர்.
அந்த காலக்கட்டத்தில் அப்பா வேடங்களில் நடித்த திரு நாகைய்யா,போன்றவர்கள் அழுது நம்மையும் அழ வைத்த போது தன்னுடைய கம்பீரமான நடிப்பாலும் ஆஜானுபாகுவான சரீரத்தாலும் நம் தமிழ் ரசிகர்களை தம்பால் இழுத்தவர்.
இந்த மாதிரி தந்தையோ மாமனாரோ  நமக்கு அவரைப்போல இருக்க மாட்டாரோ என ஏங்க வைத்தவர்,
தெலுங்கு தேசத்தில் பிறந்தாலும் தமிழை டப்பிங் இல்லாமல்  சுத்தமாக உச்சரித்ததாலும் எதார்த்தமான நடிப்பாலும் தமிழ்த் திரையுலகத்தில் ஒரு தனி இடம் பிடித்தவர்.
தெலுங்கு படங்களை இயக்கி விருது பெற்றவர்
அந்த காலத்தில் பட்டதாரிகள் நடிக்க வருவது குறைவு.திரு ரங்கராவ் அவர்கள் ஒரு பட்டதாரி..
ஒரு நடுத்தர வயதினரை மாயாபஜாரில் யார் யார் நடித்தார்கள் என்று கேட்டுபாருங்கள் யாரும் அதில் நடித்த ஜெமினி சாவித்திரியை சொல்ல மாட்டார்கள். டக்கென்று ரங்கராவ் என்று தான் சொல்வார்கள்..
 .
சில படங்களில் அவருடைய கதாப்பாத்திரம் அதில் நடித்த கதாநாயகரையும் மிஞ்சி விடும்.. மாமனார் மருமகள் பாசப்பிணைப்பை உணர்த்திய நானும் ஒரு பெண் அதில் ஒன்று அன்னை திரைப்படத்தில் மனைவியை புரிந்துக்கொண்ட கணவன் பாத்திரமாகட்டும், வளர்ப்பு தந்தை மகனிடம் கொட்டும் பாசத்தை உணர்த்திய படிக்காத மேதையாகட்டும் ரங்கராவை தவிர யாரும் அவ்வளவு அற்புதமாக நடித்திருக்க முடியாது. கண்கண்ட தெய்வம் மற்றும் அன்புச்சகோதரர்கள் படங்களில் தோன்றிய அண்ணனை நாம் மறக்கமுடியுமா? இப்படி எத்தனையோ திரைப்படங்கள்.
உண்மையை சொல்லுங்கள்,இரண்ய கசிபு என்றால் யார் ஞாபகம் உங்களுக்கு வருகிறது.அந்த ஆஜானுபாகுவான ராஜாவுக்கு பொருத்தமானவர் யார்.
ஆங்கில புலமை மிகுந்த அவர் நிறைய ஷேக்ஸ்பியர் நாடகத்தில் நடித்துள்ளார்.
கைகொடுத்த தெய்வத்தில் சாவித்திரிக்கு தந்தையாக நடித்து நம் கண்களை குளமாக்கியவர் சர்வர் சுந்தரத்தில் சிறிய வேடத்தில் தோன்றினாலும் தன் நகைச்சுவை நடிப்பால் நம்மை குலுங்க குலுங்க சிரிக்கவைத்தார்..

அவர் நடித்த அற்புத பாடல் இதோ.
ராஜாக்கள் மாளிகையும் காணாத இன்பமடா