இதை நீங்கள் நம்ப வேண்டும்.


நான் இப்பொழது வேலை பார்க்கும் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சி இது.
புதிதாக வேலைக்கு சேர்பவர்களுக்கு எங்கள் கம்பெனி தலைமை நிர்வாக அதிகாரி  ஒருநாள் மதிய உணவு அளிப்பார்.அதன் படி நானும் புதிதாக சேர்ந்தவர்கள் மற்ற 4 பேரும் தலைமை அலுவகத்திற்க்கு சென்றோம்..காரியதர்சி எங்களை வரவேற்று அதிகாரி சந்திக்கும் இடத்துக்கு அழைத்து சென்றாள். அந்த அதிகாரி எங்களுக்காக காத்துக்கொண்டிருந்தார்..நான் முன்பே சொல்லியபடி எனக்கு சைவ சாப்பாடு தயாராக இருந்தது..பேசிக்கொண்டே சாப்பிட்டோம்.சாப்பிட்டு முடிந்தவுடன் அவர்கள் சாப்பிட்ட தட்டை அவர்களே அப்புறப்படுத்த வேண்டும்.(இங்கு peon கிடையாது).எல்லோரும் எழந்து அவரவர் தட்டுகளை எடுக்கும்போது நானும் ஆந்திராவில் இருந்து வந்த மற்றவரும் குளிர் காலமானதால் கோட்டை போட்டுக்கொண்டு தட்டை எடுக்கலாம் என்று நாற்காலி மேல் இருந்த கோட்டை போட்டுக்கொண்டு திரும்பினால் எங்கள் கம்பெனியை ஆரம்பித்த அந்த நிர்வாக அதிகாரி எங்கள் எச்சில் தட்டுகளை எடுத்துக்கொண்டிருந்தார்..கிட்டதட்ட 700 பேரை வேலைக்கு வைத்திருக்கும் அவர் இப்படி செய்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

வெளிநாட்டினரிடம் இருந்து ஏன் நாம் இந்த அடக்கத்தை கற்றுக்கொள்ள கூடாது.
அவர்களிடமிருந்து பீசா, பர்கர் லிவிங் டுகெதர் தவிர இதையும் பின்பற்றலாம்

இன்றைய பாடல்


நான் தினமும் இந்த பாடலை முணுமுணுக்காமல் இருக்க மாட்டேன் .
நம்மை நாம் இருக்கும் நிலையை உணர்ந்து நடக்க வழி வகுக்கும் பாடல்.
TMS ன் அருமையான குரல்  வாழ்க்கை படிப்பினை எளிய வரிகளில் சொல்லும் கவிநயம்..நான் இந்த படத்தை பார்க்கவில்லை .தேங்காய் சீனிவாசன் நன்றாக நடித்திருப்பார் என்று சொல்வார்கள்.

ஜெயிச்சிட்டே கண்ணா நீ ஜெயிச்சிட்டே
திறந்துட்டே கண்ணை திறந்துட்டே
உன்னிடத்தில் தோற்றதில் வெற்றி எனக்கு
என்னை தெளிய வைத்தாய் தன்னை புரிய வைத்தாய்
என் நன்றி உனக்கு .

கர்ணன் படத்தில் வந்த மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா பாடல் எப்படி கீதையின் சாரத்தை பாமரமக்களுக்கு சேர்த்ததோ இந்த பாடலும் அதற்க்கு இணையாக
“தன்னை அறிந்தவர்க்கு தானாக நிற்ப்பவனை” மக்களுக்கு சுலபமாக புரிய வைத்தது
.

Get this widget | Track details | eSnips Social DNA
l

பூட்டு இல்லாத வங்கி



 இந்தியாவில் முதல் முதலாக பூட்டு இல்லாத வங்கிக் கிளையை யூகோ வங்கி ஆரம்பித்து உள்ளது.
    மகாராஷ்டிரா மாநிலம் சனி சிங்க்னா பூர் என்ற சிற்றூரில் சமீபத்தில் திறக்கப்பட்டது. ஆச்சரியம்
   என்னவென்றால் அவ்வூரில் எந்த வீட்டுக்கும் கதவுகளே கிடையாது. அங்கு சனி பகவான் கோயில்
 பிரசித்தம். தினசரி 5000 முதல் விசேஷ நாட்களில் ஒரு லட்சம் பேர் வரை வந்து போகும் ஊர்.
 உள்ளூர் வி ஐ பி ஒருவர் பல வங்கிகளை அணுகி கடைசியில்  யூகோ சம்மதித்தது. இது வரை அந்த
ஊரில் திருட்டே நடந்தில்லையாம். பார்ப்போம். சனியே துணை.




 இன்று காலை ஆபீஸ் அவசரத்திலும் நான் மிகவும் ரசித்த பாடல். சங்கம் வளர்த்த தமிழ். தாய்
  புலவர் காத்த தமிழ். காரணம் தெரியாமல் கண்ணீர் வந்தது. என்ன அழகான பாடல் வரிகள். இப்போது
 அத்தகைய பாடல்கள் இல்லையே என்ற ஏக்கமா அல்லது நான் தற்போது வட மாநிலத்தில் நிறைய
தமிழ் பேசாத சூழ்நிலையில் வசிப்பதாலா . கண்ணீருக்கு காரணம் புரியவில்லை.


புதுவை ராம்ஜி .



Get this widget | Track details | eSnips Social DNA

ரிலாக்ஸ் ராம்ஜி .இப்பொழுதும் நல்ல பாடல்கள் எப்பொழுதாவது  வருகின்றன .
காலங்கள் மாறும்போது ரசனைகளும் மாறுவது இயற்கை தானே .
இந்த பாடலை கேளுங்கள் இது இந்த காலத்து பாடல்   தாம் தூம் படத்தில் வந்தது  எவ்வளவு நல்ல  இனிமையான பாடல் 

Get this widget | Track details | eSnips Social DNA

இதெல்லாம் தமிழிலிருந்து வந்ததுங்கோ

காசு லேருந்து cash  பெற்றோம்
 கட்டுமரம் catamaranஆனது
சுருட்டு cheroot தான் 
coir  கயிறுலேயிருந்துதான் வந்தது -- 
மிளகுத்தண்ணி ஐ  mulligatawany soup ஆக குடித்தோம் 
 இலுப்பை illupai யாக உருமாறியது
பாளை palay யானது 
tutenag  வேறு  என்ன நம்ம துத்தநாகம் தான் l
யாராவது ரொம்ப ஸ்டைல் ஆக எங்க வீட்டு வாசல்படி எல்லாம் teak ல் செய்தது என்றால் ஓ நம்ப தேக்கு என்று அவங்களை வெறுப்பேத்துங்க 
நம்ப கிடங்கு (godown) அரிசிலேயிருந்து அவங்க rice சாப்பிடுகிறார்கள் 
 மாங்கா mango வாக அவங்க பழத்தட்டில் இருக்கிறது
சரி அதெல்லாம் எனக்கு தெரியும் என்று சொல்றீங்களா .
அட நீங்க வேற நானே ஒரு பதிவை எப்படியாவது நிரப்பிட வேண்டும் என்று
எழுதுகிறேன்

சிரிப்பாய் சிரிங்க

தந்தை வெளிஊரில் இருக்கும் மகனுக்கு அவசரமாக போன் செய்து
எனக்கும் உங்க அம்மாவுக்கும் ஒத்துவரலை .இருபத்தைந்து வருட வாழ்கையில் நான் நிறைய அவமானப்பட்டுவிடேன் .இனிமேல் தாங்க முடியாது .விவாகரத்து ஒன்றுதான் வழி பக்கத்துக்கு ஊரில் இருக்கும் .உன் தங்கையிடமும் சொல்லிவிடு  என்றார் .
மகன் கவலையுடன் அப்பா அவசரப்பட்டு எதையும் செய்து விடாதீர்கள் ,நாங்கள் வருகிறோம் பின்பு பார்த்துக்கொள்ளலாம் என்றான்.
தந்தை மனைவியை பார்த்து அப்பாடா பசங்கள் ஒரு வழியாக நம்மை அவர்கள்செலவிலே பார்க்க வருகிறார்கள் என புன்னகை செய்தார் .

ஒரு அமெரிக்கர் ஒரு ஆப்பிரிக்கர் ஒரு ரஷ்யர் வான்வெளியில் பாரசூட்டில் பறந்து கொண்டிருந்தனர் .ரஷ்யர் கையை வானவெளியில் விட்டு நான் இப்பொழுது ரஷ்யா மேல் பறந்து கொண்டிருக்கின்றோம் என்றார் .மற்றவர் எப்படி தெரியும் என்பதற்கு குளிர் காற்று என் கையில் அடித்தது என்றார்..கொஞ்சம் தூரம் சென்றவுடன் ஆப்பிரிகர் கையை  கீழே துளாவி வெப்பக்காற்று அடிக்கிறது ஆகையால் நாம் இப்போது ஆப்பிரிக்கா மேலே பறக்கிறோம் என்றார், மேலும் சிறிது தூரம் சென்றவுடன் அமெரிக்கர் கையை கீழே
துழவி ஹய்யா நாம் நியூயார்க் மேலே இருக்கோம் என்றார் .எப்படி என்று மற்றவர்கள் வியப்புடன் கேட்டபோது என் கையில் கட்டியிருந்த கைகடிகாரம் இப்போது காணோம் என்று கூவினார்


.
நாளை பனி பொழியும் என இங்கு  வானிலை சொல்லுகிறது .அதனால் நாளை எங்கும்வெளியில் போகமுடியாது எனவே மேலும் உளறல்களை எதிர்பார்க்கலாம்

சிறுத்தை -யூ டியு பில்





.
சிறுத்தைகள் விவேகமானதும்  வலிமையானதும் ஆன பெரிய பூனை. சிங்கம் ,புலி வகையை சேர்ந்தது .
 ஆப்ரிக்க சாகரா காடுகளிலும் மத்திய ஆசியா ,இந்தியா மற்றும் சீனாவிலும் காணப்படுகிறது 
சிறுத்தை மரத்தில் ஏறக்கூடியவை .தன்னால் கொல்லப்பட்ட மிருககங்களின் உடல்களை மற்ற மிருகங்கள் எடுக்காத படி மரப்பொந்தில் ஒளித்து வைக்கும் .அவைகள் நன்றாக நீந்தக்கூடியவை .மீன்கள் ,நண்டு கூட அதன் உணவு ஆகும் .
பெண் சிறுத்தை  எல்லா பருவ  நாட்களிலும் குட்டி ஈணும்.அவைகள் பெரும்பாலும் சாம்பல் கலரில் இரு குட்டிகளை போடும் .குட்டிகள் அதன் தாயுடன் இரு வருடங்கள் வாழும்  பின்பு தனியாக வாழ ஆரம்பிக்கும்.


சரி சரி அடிக்க வராதீங்க நீங்க சிறுத்தைதிரைப்படம்ன்னு தப்பா நினைச்சு என்பதிவை அவசர அவசரமாக பார்த்ததற்கு நன்றி 
.
இந்த மொக்கை ஜோக் கனணி தோன்றி பில் கேட்ஸ் தோன்றாத காலத்தில் இருந்து வந்த ஜோக் 

நான் இன்று மதியம் பெய்த மழையில் மாலையில் முளைத்த காளான்.அதாங்க புத்தம் புதிய பதிவருங்க 
.
சும்மா வந்துட்டு என் பதிவை பார்த்துவிட்டு போனால் போகுதுன்னு எதாச்சம் பின்னூட்டம் போடுங்க சாமி

 

நமக்கு என்ன வேண்டும்

எனக்கு மட்டும் அன்றி  எல்லோருக்கும் வேண்டும்  பாடல்கள்




                


கலையாத கல்வியும் குறையாத வயதுமோர் 
கபடு வாராத நட்பும் 
கன்றாத வளமையுங் குன்றாத ­ளமையும் 
கழுபிணியிலாத உடலும் 
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும் 
தவறாத சந்தானமும் 
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் 
தடைகள் வாராத கொடையும் 
தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு 
துன்பமில்லாத வாழ்வும் 
துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய 
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே! 
ஆதிகட வூரின் வாழ்வே! 
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே! 
ஆதிகட வூரின் வாழ்வே! 
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! 
அருள்வாமி! அபிராமியே! 
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! 
அருள்வாமி! அபிராமியே! 

தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே
பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே







திருஅருட்பா
ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
      உத்தமர்தம் உறவுவேண்டும்
உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
    உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை
    பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய்
    பிடியாதிருக்க வேண்டும்
மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை
   மறவாதிருக்க வேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
   வாழ்வில்நான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
   தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
   சண்முகத் 
தெய்வமணியே 

நமக்கு என்ன வேண்டும்





"மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்நெருங்கின பொருள் கை பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்கை வசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்

மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்ஓம் ஓம் ஓம்





 அட நம்ம பசங்களுக்கு இதுதான் வேண்டுமாம்








தீராத தம்மு வேண்டும்
திட்டாத அப்பு வேணும்
குறையாத குவாட்டர் வேணும்
கொண்டாட நட்பு வேண்டும்

கவிதையின்னா சொல்லு வேணும்
காதலுன்னா தில்ல்லு வேணும்
கேரம் போர்டு காயின் போல
கண்ணு ரெண்டும் ஓட வேணும்

காதல் செஞ்சு ஜெயிச்சா நீயும்
கனவாக மாற வேணும்
காதல் செஞ்சு தோற்றா நீயும்
அடுத்த பொண்ண தேட வேணும்

காலேஜு போனா தலைய சீவ
கண்ணாடி வச்ச சுடிதார் வேணும்
லேடிஸ் ஹாஸ்டல் உள்ளே போக
சுரங்கம் தான் வேணும்

ஏய் அழகு பொண்ணு பஞ்சமின்னா
ஐஸ்வர்யா ராய் க்ளோனிங் வேணும்
தங்கமான பொண்ணு இன்னா
உரசி பார்க்கணும்

பில்கேட்ஸு எங்களைத்தான்
தத்தெடுத்து போக வேணும்
திருப்பதி உண்டியலில்
தினம் ஒரு பங்கு வேணும்

சீரபுஞ்சி மழைய போல
பீர் மழை பெய்ய வேணும்
சிறையில் உள்ளே காவிரி ஆறு
வெயிலுதானே வெளியே வேணும்
(
தீராத..)

ஸ்டாரு ஹாட்டல் போதும் போதும்
பழச நீயும் நெனைக்க வேணும்
கையேந்தி பவனுக்கெல்லாம்
நன்றி சொல்லணும்

கேட்ட உடனே வேலை கொடுக்கும்
புதிய கடவுள் பொறக்க வேணும்
ரப்பர் வச்சு வறுமை கோட்டை
அழிக்க தான் வேனும் ஹே

சீக்கிரமா போகணுமா
ஒன் வேயில் போக வேனும்
தேனிலவு போகனும்னா
டபுள்ஸாக போக வேணும்

ஜன்னல் வச்ச ஜாக்கேட் எல்லாம்
கதவு வச்சு மூட வேணும்
கன்னி தமிழு மட்டும் தானே
கல்லூரி பெண்கள் பேச வேண்டும்
(
தீராத..)

புத்தக கண்காட்சியும் நானும்

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்  .

 சென்னைக்கு வந்து இறங்கியவுடனே காரில் அம்மா முறைத்து கொண்டு வந்தாள்.
போன மாதம் மாமாவுக்கு 60 ம் கல்யாணம் அப்போ வர தெரியலை .புத்தக கண்காட்சிக்கு மட்டும் வரத்தெரியுது ஜன்னலை பார்த்துக்கொண்டு முணுமுணுத்துக்கொண்டு இருந்தாள்.நானும் கவனிக்காத மாதிரி டிசம்பெர்லே கூட இந்த வெயில் அடிகிறேதே என்று பீலா விட்டுகொண்டிருந்தேன்
அன்றே புத்தக கண்காட்சிக்கு வந்து விட்டேன்  .
எதிர் பார்த்ததை விட கொஞ்சம் கூட்டம் அதிகம்தான் .
முதலில் உயிர்மை ஸ்டால் க்கு சென்றேன் .சாரு மனுஷ்ய புத்திரனுடன் பேசிக்கொண்டிருந்தார் .அதே டிசைன் போட்ட ஷர்ட் அணிந்திருந்தார் .என்னை பார்த்ததும் அடையாளம் கண்டு நலம் விசாரித்தார் .மனுஷ்ய புத்திரன் என்னை கண்டுக்கலை .சாரு வின் தேகம் புத்தகத்தை வாங்கி அவரிடம் கையெழுத்து வாங்கினேன் .திரும்பும்போது எஸ் ரா உள்ளே நுழைந்தார் .
கிழக்கு ஸ்டாலில் கேபிள் சங்கரை பார்த்துவிட்டு ஹலோ சொல்லும்போது அட நம்ப ஜெ.மோ  கொஞ்சம் களைப்பாக தென்பட்டார் .
மறுநாள் பார்த்த பிரபலங்கள் வைரமுத்து ஒ அருண் .
நான் வாங்கின புத்தகங்கள் .
இத்தாலி எழுத்தாளர் கசாகசா வின் பதியக்கர்ன்
மு .ப வின் பொங்கல் .Vi.tee ra இன் tantanga
பிரெஞ்சு எழுத்தாளர் ழந்தார் ப்ருழ்ன்  எழுதிய மிசியே முதலியன .

உஸ் அப்பாடி இப்பவே கண்ணை கட்டுதே .
இப்படி எல்லாம் எழுதணும் என்று எனக்கும் ஆசைதான்.என்னசெய்வது
போனமாதம் தான் விடுமுறையை கப்பலில் கழித்து விட்டு பேங்க் பாலன்சையும் விடுமுறையையும் இந்தியா உலகத்துக்கு கண்டுபிடித்து கொடுத்த இலக்க நம்பர்க்கு கொண்டுவந்து விட்டேன் .எங்கே சென்னை க்கு வந்து புத்தகம் வாங்கி இலக்கிய சேவை செய்வது
 புத்தக கண்காட்சியைப்பற்றி எழுதாவிட்டால் என்னை பதிவர் என்றே பதிவுலகம் என்னை ஒத்துகொள்ளாது .அதான் இந்த அலப்பறை .
சத்தியமாக மேலே குறிப்பிட்டவர்களுக்கு என்னை தெரியாது  என் பெயரை கொண்டவர்கள் அவர்களுக்கு  நண்பர்களாக இருப்பார்கள் என்பதே சந்தேகம் .
கசகசா,பைத்தியக்காரன் ,முந்தரிபருப்பு பொங்கல் விஜய் டி ர  டண்டணக என்பதெல்லாம் போட்டு ஒரு இன்டர்நேஷனல் வாசத்தை என் பதிவில் கொண்டு வந்து விட்டேன்
அடுத்த புத்தக கண்காட்சியில் மீண்டும் சந்திப்போம்

புது வருட தரிசனம்

புது வருடம் முதல் நாள் நமக்கு கொண்டாட்டம் .ஆனால் நம் கடவுள்கள் நிலை தான் அன்று பரிதாபமானது.நான்  கேள்விப்பட்டவரை அன்று அவர்களுக்கு ஓய்வே கிடையாது .
24 மணிநேரமும் தரிசனம் தான் .பூஜா விதிகளின் படி நடக்கும் பல நித்ய பூஜைகள் ஓரம் கட்டப்பட்டு விடும் என நினைக்கிறேன்.
அன்று புதுவை மணக்குள விநாயகர் கோயில் தரிசனத்துக்காக மனித வரிசை பல மைல் தூரம் இருந்ததாகவும் பலர் தரிசனம் பார்க்க முடியாமல் வீடு திரும்பியதாகவும் கேள்விப்பட்டேன்
இந்த நிலை தென் இந்தியாவில் தான் அதிகம் .
அமெரிக்காவிலும் நம்மூர் மக்கள் இதை சிரத்தையாக கடை பிடித்து பல மைல் தூரம் பயணம் செய்து ஜன்ம சாபல்யம் அடைகிறார்கள் .
இது மக்களின் உளநிலை சார்பு உடையதாக இருக்கின்றது .
புது வருட கடவுள் தரிசனம் அவர்களுக்கு ஒரு  நேர் மறை எண்ணங்களை கொடுப்பதை மறுக்கவில்லை ஆனால் இதே அளவு அது கிடைக்காவிட்டால் எதிர் விளைவுகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதையும் நினைவில் கொள்ளவேண்டும் .
அன்று ஜனவரி முதல் நாள் புதுவருட ஆரம்பம் தரிசனம் நன்றாக கிடைக்கவில்லை .சகுனம் சரியில்லை அர்ச்சனை  தேங்காய் சரியாக இல்லை என்ற காரணங்களால் பலபேர் மன உளச்சலால் அவதிக்குள்ளகிறார்கள்.
முதலில் சொல்லப்போனால் ஜனவரி முதல் தேதி சமீப காலமாகத்தான் (சுமார் 600 வருடங்களாக) புதுவருடமாக கருதப்பட்டு வந்திருக்கின்றது .ஜூலிஸ் சிசர் முதலில் ஜூலியன் காலண்டர் கொண்டு வந்தார் பின்பு ஜானுஸ் என்கிற கிரேக கடவுள் பெயரில்
ஜனவரி மாதத்தை தோற்றுவித்தார் பின்பு கி பி 1582 தான் போப் இதை அங்கீகாரம் அளித்தார்
அப்படி இருக்கும் போது நாம் ஏன் இதற்கு இவ்வளவு முக்கியம் கொடுக்க வேண்டும்  ஆ ன்மீக விஷயத்தில் .சுவாமி தரிசனம் முக்கியம் சில பண்டிகை நாட்களில்
 .நம் முன்னோர்கள் சூர்ய சந்திர பயணங்களை கணக்கிட்டு தைவீக யீர்ப்பு சக்தியினை கொண்ட நாட்களாக சில நாட்களை  அவதானித்து உள்ளார்கள். அந்த நாட்களில் முடிந்தால் கோயிலுக்கு செல்லலாம் அல்லாவிடில் முதல் நாள் அல்லது மறுநாள் சென்று மனமார வேண்டிக்கொண்டு வரலாம்
இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு பின்பு சீனா உலக தாதா வாகி சீன புத்தாண்டை புது வருட மாக எல்லோரும் கொண்டாட வேண்டும் என்று ஆணையிட்டால் அன்று நம் ஊர் பெருமாள் கோயிலில் 24 மணிநேர தரிசனத்துக்காக கூட்டம் நெரியும்

சலீல் சௌத்ரியின் உன்னத இசை.

எனக்கு சலீல் சௌத்ரி இசையமைப்பில் வரும் பாடல்களை  கேட்கும் போதலெல்லாம் ஒரு அருமையான இசை உலகத்தில் பயணிக்கும் உணர்வு இருக்கும் .தமிழில் நிறைய வரவில்லை ஆனால் வந்தது எல்லாம் தேனிசைதான் .


இந்த பாடலும் அவருடைய அற்புதமான படைப்புக்களின்
மத்தியில்  மறக்கமுடியாத ஒன்று

Get this widget | Track details | eSnips Social DNA

தமிழர் அல்லாத ஒருவர் அற்புதமாக சிலப்பதிக்காரத்திற்கு இசை அமைத்தது பற்றி  நாம் பெருமைக்கொள்ளலாம்.

திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோல் அதுஒச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி.
கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்.
மங்கை மாதர் பெருங்கற்புஎன்று அறிந்தேன் வாழி காவேரி.

மன்னும் மாலை வெண்குடையான் வளையாச் செங்கோல் அதுஓச்சிக்
கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி.
கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்.
மன்னும் மாதர் பெருங்கற்புஎன்று அறிந்தேன் வாழி காவேரி.

உழவர் ஓதை மதகுஓதை உடைநீர் ஓதை தண்பதங்கொள்
விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப நடந்தாய் வாழி காவேரி.
விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப நடந்த எல்லாம் வாய்காவா
மழவர் ஓதை வளவன்தன் வளனே வாழி காவேரி.

இந்த ஹிந்தி பாடலை கேட்காதவர்கள் மிக குறைவு.இதுவும் அவர் இசைதான்.



இன்றும் கேட்க கேட்க சலிக்காத அவருடைய பாடல் இது

கவிதையாம் இது

கவிதையாம் இது


கள்ளிப்பால்


அயல்நாட்டில் அஞ்சாப்பு படிக்கும் என் மகனுக்கு
சமுக கொடுமையை கோடிட்டு காட்ட நினைத்து
பிறந்த நாட்டின் சிசுவதை அவலத்தை விளக்கி
முடித்தவுடன் கேட்டான் ஒரு கேள்வி
அம்மா உனக்கு ஏன் பாட்டி கள்ளிப் பாலை கொடுக்கலை
ஐந்து சகோதரிகளுக்கு பின்பு பிறந்த நான் சிலையானேன்


மன மாயம்




உறங்கி எழுந்தேன் உணர்வுகள் மாயம்
மயங்கி விழுந்தேன் மனமே மாயம்
காயங்கள் பட்டேன் குருதிகள் மாயம்
விதியென்று அறிந்தேன் வினைகள் மாயம்


மேகங்கள் கதிரை உள்வாங்கும் தோற்றமே
மண் மீதில் யாம் காணும் மன மாற்றமே
வெளிவந்த பரிதியை காண நாணும் முகிலோடு
வந்த வழி செல்லும் வழி மாறும் எண்ணங்களே


மாயங்கள் விளைந்தென மண் சுவர் மீதில்
சோகங்கள் பட்டதால் சோர்வில்லை சுகமே
பார்த்தன் அவன் தேரில் பரிதவிக்கும் கணத்தில்
உரைத்த நீதி எமக்கும்  அருள்வாய் உத்தமனே உயிரே

எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்

இது டிசம்பர் சீசன் .எனக்கு கர்நாடக சங்கீதம் --பாடறியேன் படிப்பறியேன் தான் .எனினும் அருணா சாய்ராம் பாடும் மெல்லிசை க்கு நான் அடிமை
இதை கேட்டு பாருங்கள் .