சிரிப்புத் திருடன்

பல வருடங்களுக்கு முன் ஆனந்த விகடனில் மதன் கார்டூனில்  சிரிப்பு திருடன் சிங்காரவேலு வை பலர் மறந்திருக்க முடியாது. கடந்த வாரம் சென்னையில் உண்மையில் நடந்தது இது.
அதிமுக எம் எல் ஏ திரு .பழ .கருப்பையா வீட்டுக்குள் நுழைந்த திருடன் ஒருவன் அவரது மனைவி கமலா ஆச்சியை தாக்கி அவரது செயினை பறித்து ஓடிவிட்டான். ஆனால் மறதியில் தனது மொபைலை விட்டு விட்டான்.
மொபைல் மூலமாக பிடிபட்டு விடுவோமா என்ற பயத்தில் திரும்ப வந்து வெளியிலேயே நின்று ஆச்சியிடம் மொபைல் தாருங்கள், செயினை வேண்டுமானால் தந்து விடுகிறேன் என்றான். அவர்கள் பயத்தில் கதவை திறக்கவே இல்லை. போலீஸ் வருவதை கண்டு பின்னர் ஓடி விட்டான். ஆனால் போலீஸ் மொபைல் மூலமாக சுலபமாக அவனை பிடித்து விட, தான் தொழிலுக்கு புதுசு என்றானாம்.
எப்படி ? இவன்தான் உண்மையான சிரி .திருடன் சி.வேலு இல்லையா?
 

புதுவை ராம்ஜி


நான் அமெரிக்காவில் நேரில் கண்ட ஜோக் திருடன் இவன்.
நான் ஒரு வங்கியில் இருந்த போது அங்கு இருந்த கணக்காளரிடம் வெறும் கையை பாக்கெட்டில் விட்டு துப்பாக்கி எடுப்பது போல் ஒருவன் பாவ்லா காட்டி பணத்தை எடு என்று கேட்க.அந்த கணக்காளரும் பயந்து போய் ஆனால் சாமர்த்தியமாக வெறும் ஒரு டாலர் ஐந்து டாலர் நோட்டுக்களை தந்திருக்கின்றாள்.அந்த லூசும் கை நிறைய காசுக்களை வாரிக்கொண்டு(சில நூறு டாலர்கள் தான்) காரில் தப்பித்து சென்றான்.சென்றவன் சினிமாவில் பார்ப்பது போல் விர்ர்ர்ர் என்று தப்பிக்கவில்லை.மிக பொறுப்பாக வங்கி அருகிலேயே இருந்த ஒரு சிக்னலில் இடது புறம் திரும்புவதற்க்காக ( இங்கு வலது புறம் திரும்ப சிக்னல் அவ்வளவாக தேவையில்லை) சிரத்தையாக காத்திருந்த போது பிடிப்பட்டு விட்டான்.
ஹும் நம்ப ஊர் பசங்களா இருந்தா கிடைத்த கேப்பில் பறந்திருக்க மாட்டார்களா?


சுண்டு+எலி

பால்கே பாலு அவர்கள்


சமீபத்தில் என்னை மகிழ்ச்சி அடைய வைத்த செய்தி இயக்குனர் சிகரம் 
பாலசந்தர் அவர்களுக்கு கிடைத்த தாதாசாஹிப் பால்கே விருது.
எனது கல்லூரி நாட்கள் அவரது படங்கள் பற்றிய  விவாதங்களில் 
கழிந்தன.  எந்த படத்தை சொல்ல அல்லது எதை விட? நான் தியேட்டரில் மூன்று முறையும் ஒலிச்சித்திரமாக பல முறையும் கேட்டு இன்றளவும் மனப்பாடமாக உள்ள அபூர்வ ராகங்களை சொல்வதா? மிக சிறந்த நடிகராக நாகேஷை நமக்கு தந்த சர்வர் சுந்தரத்தை சொல்வதா? பெண்கள் கதாபாத்திரங்கள் அதுவரை வெறும் டூயட் பாட மட்டும் என்ற நிலையை மாற்றி , குடும்பத்துக்காக தன்னையே கொடுக்கும் பெண்களாக அ.ஒ.தொடர்கதையிலும் அரங்கேற்றத்திலும் காதலை பூட்டிவைத்து ஏங்கும பெண்களை சொ.நினைக்கிறேன் மற்றும் அழகனிலும் பெண் கலெக்டர் என்றால் சௌகார் தான் என்று தோன்ற வைத்த இரு கோடுகளிலும் பெண்ணால் ஒருவரை தடுமாறி விழ மட்டுமல்ல பின்னர் எழ வைக்கவும் முடியும் என்று காட்டிய சிந்து பைரவி நாயகி ஆகட்டும் எத்தனை பெண் கேரக்டர்கள்.
கமலையும் ரஜினியையும் நமக்கு அடையாளம் காட்டியவர் அவர்தானே?
நேற்று முன்தினம் ஜெயா டிவியில் அவர் பேட்டி பார்த்தேன்.
தன்னை கவர்ந்த நாகேஷ் பற்றி சொல்லும் பொது அவர் கண்களில் கண்ணீர்.சோ அவர்களையும் புகழ்ந்தார் . இத்தனை வயதாகியும் அவருக்கு ஆசை எதாவது இருக்குமா? ஆம் . இருக்கிறது . இயக்குனர் வெற்றி மாறன் இரண்டு விருது வாங்கியதை பார்த்த உடன் எனக்கும் அது போல தேசிய விருது வாங்க வேண்டும், நான் இதுவரை வாங்கியதில்லை என்று குழந்தைபோல் சொன்னார்.
சார். நிச்சயம் வாங்குவீர்கள். தற்போது நீங்கள் இயக்கி ஜெயா  டிவியில்  வந்து கொண்ருக்கும் சாந்தி நிலையத்தில் உங்கள் கை வண்ணம்  உங்கள் இளமையை நிரூபித்து கொண்டிருக்கிறது. அதனால்தான் சொல்கிறேன். சார். நிச்சயம் வாங்குவீர்கள் .

எனக்கு என்னமோ அவருடைய கமல் ரஜினி அறிமுகத்துக்கு முன்பு இருந்த படங்கள் பிடிக்கும்.அதிலும் மேஜர் சந்திரகாந்த் அவருக்கு ஒரு மைல் கல்
அப்போது உச்சத்தில் இருந்த 20 வயது கூட நிரம்பாத ஜெயலலிதா அவர்களை படத்தில் முன் பாதியில் இறக்க வைத்து படத்தை பின்பாதியில் மிக விறுவிறுப்பாக செலுத்திய துணிச்சல் அந்த காலத்தில் புதியது.





 புதுவை ராம்ஜி. 

கேள்வியின் நாயகனே என் கேள்விக்கு பதில் சொல்லய்யா



அர்த்தமுள்ள இந்துமதம்
பத்தாம் பாகம்



ஆனால் அடுத்த கேள்விதான் யாரும் பதில் காண முடியாத ஒரு கேள்வியாகும் 
அது நல்லவர்கள் வருந்துகிறார்கள் என்பதைவிட தீயவர்கள் வாழ்கிறார்களே அது எப்படி?
எனக்குத்தெரியும் 
ஒரு நண்பர் ,வாழ்க்கையில் எந்த விதமான நன்மையும் யாருக்கும் அவர் செய்தது கிடையாது.
எதை அனுபவிக்க வேண்டும் என்றாலும் தானும் தன் குடும்பமும் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று வாழ்ந்தவர்,வாழ்பவர் ஆம் இன்னும் வாழ்ந்துக்கொண்டு இருப்பவர்.

எவ்வளவு சிரமங்கள் வந்தாலும் கூட அவருக்கு வசதி குறையவில்லை,பதவி குறையவில்லை புகழ் குறையவில்லை
எப்படி இது இயங்குகிறது எப்படி இது நடக்கிறது.
லட்சோப லட்சமாகப் பணத்தைக் குவித்தார்.அதுவும் தவறான வழியில் .அதுவும் நிலைத்துவிட்டது.தவறான வழியில் சேர்த்த பணம் நிலைக்காது என்பார்கள் .நிலைத்துவிட்டதே.கண்முன்னாலே கண்டிருக்கிறோமே

தப்பான வழியில் அபகரித்த பதவி நிலைக்காது என்பார்கள் அது பல வருஷங்கள் அவர் கையில் இருந்ததே அது எப்படி?

இவையெல்லாம் மனதில் ஏற்ப்படுத்தக்கூடிய மயக்கம் என்ன?
ஆண்டவனுடைய இயக்கம், என்பதிலே ஒரு சந்தேகத்தை இதுதான் உண்டாக்கிறது.
இதைப்பொறுத்தவரை உங்களுக்கு நான் சொல்லக்கூடியது ஒன்றே ஒன்றுதான்.
இப்படிபட்ட அக்கிரமக்காரர்கள் இருபது வருஷம் இருபத்தைந்து வருஷம் நிம்மதியாக வாழ்ந்தாலும் கூட இவர்களுடைய கடைசிக்காலம் மோசமாக இருக்கும்.
அவர்கள் படாதபாடு பட்டுத்தான் தங்களுடைய வாழ்க்கையை முடிக்க வேண்டியிருக்கும்.இல்லையென்றால் அவர்கள் செயத பாவங்களுக்கு அவர்களுடைய குழந்தைகள் தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும்.

நான் ஒரு கட்டுரையிலே சொன்னபடி பதினான்காவது லூயி செய்த தவறுகளுக்கான தண்டனைகளை,பதினாறாவது லூயி அநுபவிக்க வேண்டியிருந்தது
பழைய ஜார் மன்னன் செய்த தவறுகளை அடுத்து வந்த வாரிசு அனுபவிக்க வேண்டியிருந்தது.


கண்ணதாசன் 

 ஆமாம் கண்ணதாசன் யாரை சொன்னார்?



அத்தை

என் குழந்தைகளின் ஒரே அத்தை திருமதி மல்லிகா சந்திரசேகர் நேற்று (மே 14 2011) சென்னையில் காலமானார்.
அவள் ஒரு நல்ல சகோதரி,நல்ல நாத்தனார் முக்கியமாக ஒரு நல்ல அத்தை.
என் பசங்களுக்கு அத்தை என்றால் கொள்ளை பாசம்.ஆனால் இப்பொழது நாங்கள் சட்டென்று சென்னை செல்லமுடியாத சூழ்நிலையில் மாட்டிக்கொண்டதால் வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் அவள் உடலைப் பார்த்து கண்ணீர் விட்டோம்.என்ன வாழ்க்கை ?உறவினர் நல்லது கெட்டதுக்கு கூட போக முடியாத ஒரு இயந்திர உலகம்.

அவள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்.



மானிடர் ஆன்மா மரணம் அடையாது .மறுபடி மறுபடி அதன் பாவ புண்ணிய பலன் படி பிறந்திருக்கும் என்று சொல்லும் இந்த பாட்டைக்கேட்டு கொஞ்சம் ஆறுதல் அடைய வேண்டியதுதான்.
அவளுடைய அருமை கணவருக்கும் செல்ல மகன்களுக்கும் காலம் தான் ஆறுதல் சொல்ல முடியும்





அன்னையும் குருவும்


உலகில் உள்ள அனைத்து அன்னையருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்




==================================================================================
இன்று மே 8  ஆதி சங்கர பகவத்பாதாள் அவர்களின் ஜெயந்தி.

ஸ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம்
கருணாலயம்
நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம்


சார்வாகர்கள், லோகாயதிகர்கள், காபாலிகர்கள், சக்தி வழிபாடு செய்யும் சாக்தர்கள், சாங்கியர்கள், பௌத்தர்கள், மாத்யமிகர்கள் என்று ஏறத்தாழ எழுபத்திரண்டு வெவ்வேறு மதவாதிகள் இந்தியாவில் கோலோச்சிக்கொண்டிருந்த காலமது

காலடியில் அப்போது ஒரு விடிவெள்ளி தோன்றிய.து சிவபெருமானே ஆதிசங்கராக இப்பூவுலகில் தோன்றினார் என்றும் கூறுவார்கள்

 ஆதி சங்கர் அப்பொழது  அவதரிக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? உலகில் முதலில் தோன்றியதாக கருதப்படும் ஹிந்து மதம் நசிந்துபோயிருக்கும்..

ஷண்மதம் என்ற மத கோட்ப்பாட்டினை அத்வைதம் என்ற பொக்கிஷத்தோடு தந்தார்.

உனக்கு பிள்ளையாரைப் பிடிக்குமா ? இந்தா உனக்கு  காணாபத்யம் கணபதியை முக்கிய கடவுளாக கும்பிடு
உனக்கு சிவனை ரொம்ப பிடிக்குமா சரி நீ சைவத்தை பின்பற்று

முருகனை இஷ்ட தெய்வமாக கருதுபவர்களுக்கு கொமாரம்

 சாக்தம்  சக்தியை வணங்குபவர்களுக்கு
 வைணவம் திருமால் அடியை தொழுபவர்களுக்கு
சரி எனக்கு உருவத்தில் ஈடுபாடு இல்லை இயற்கையே என் தெய்வம் என்பவருக்கு சரி சூரியனை வணங்கும்  சொரம் உனக்கு பொருத்தம்
இப்படி அவரவர்களுக்கு ஏற்ற மாதிரி மதத்தில் ஒரு புதுமையை புகுத்தினார்.

ஒவ்வொருவரின் ரசனையும் ஒவ்வொரு வகைப்படும். அதனால், ‘இவர் மட்டுமே உனக்குக் கடவுள் என்று எந்தவொரு மனிதரையும் கட்டாயப்படுத்தாமல், ‘இந்த அறுவரில் எவர் உன் மனதைக் கவர்கின்றாரோ, அவரையே முழு முதற் கடவுளாக நீ போற்றலாம் என்று வழி காட்டுகிற அத்வைத்தை நமக்காக உணர்த்தினார்.
அவர் பாடாத தெய்வங்கள் இல்லை.

எல்லா உபனிஷ்த்திலிருந்தும் சாரத்தை எடுத்து நமக்கு புரியும்படி சோபான பஞ்சகம் என்னும் நூலில் கூறியிருக்கிறார்.
* வேதம் எல்லாராலும் படிக்கப்பட வேண்டும். அந்த வேதங்களில் கூறப்பட்டிருக்கும் கர்மாக்களை அனுசரித்து நடக்க வேண்டும்
* ஆத்மாவைக் கண்டு கொள்ள ஆசைப்படவேண்டும்.

* சாதுக்களின் அருகில் இருத்தல் வேண்டும்.
* ‘நான் பிரும்மமாக இருக்கிறேன் என்று ஒவ்வொருவரும் எப்பொழுதும் நினைக்க வேண்டும்.
 தியானத்தின் மூலம் அமைதி பெறவேண்டும்.
ஆதிசங்கரர் கூறியபடி ஆத்மாவை அறிய மிகச் சிறந்த மனஉறுதி அவசியம் இருத்தல் வேண்டும்.

 தன் சிஷ்யர்கள் மனதில் ஏறிய சிறு கர்வத்தை அடக்க எல்லோராலும் அசடு என்று அறியப்பட்ட கிரி என்ற மாணவன் நாவின் மூலம்  விதிதாகில என்று தொடங்கும் தோடாஷ்கத்தைப் பாடவைத்தார்.

. நிலையான பேரின்பத்தைப்  பக்திமூலம் பெற கருணாமூர்த்தியான சங்கர பகவத் பாதரின் பாதகமலங்களை இந்த தோடாஷ்ட்டகத்தின் மூலம் துதிப்போம்
 .