மலேசியா வாசுதேவன் --ஒரு சகாப்தம்


கணீரென்ற குரலுக்கு சொந்தக்காரர்.
70 இறுதிகளிலும் 80 களிலும் தமிழ்த்திரையிசை உலகில் கோலோச்சிய பாடகர்.
தமிழ் உச்சரிப்பை சிந்தாமல் சிதைக்காமல் உலகெங்கும் தன் இசையால் பரப்பிய மலேசியா வாசுதேவன் இன்று நம்மிடையே இல்லை
அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
முதன் முதலில்  அவர் பாடிய தமிழ்ப்படம்
உறவாடும் நெஞ்சம்.
அதில் வந்த இந்த பாடல்

Get this widget | Track details | eSnips Social DNA

சோகப்பாடலா இல்லை இளமை ததும்பும் இந்த பாடலா.
மலேசியா வாசுதேவன் அவர்களின் தேன் குரலில் அன்று கட்டுப்படாதவர்கள் யாரும் இல்லை


ஆகாயமே எந்தன் கையில் ஊஞ்சல் ஆடுதோ
பூ மேகமே எந்தன் கன்னம் தொட்டு போகுதோ
சோகம் போகும் உன் கண்கள் போதும்
சின்ன பாதம் நடந்ததால்..
வலியும் தீர்ந்தது வழியும் தெரிந்தது..ஓ

இந்த வரிகளில் அவர் காட்டும் அந்த பாவத்தால் இந்த பாட்டில் மயங்காதவர்கள் இல்லை



இதுவும் ஒரு தேன் துளி தான்

பொன் மானைத்தேடி நானும் பூவோடு வந்தேன்
நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்லை
அந்த மான் போன மாயமென்ன என் ராசாத்தி
அடி நீ சொன்ன பேச்சு நீர் மேல போட்ட மாக்கோலம் ஆச்சுதடி
அடி நான் சொன்ன பாட்டு ஆத்தோரம் வீசும் காத்தோடு போச்சுதடி

Get this widget | Track details | eSnips Social DNA


அவரின் பேட்டியை சில மாதங்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பினார்கள்.அதில் அவர் பிரபலமான பின்பு கூட ஒவ்வொரு பாட்டுக்கும் ஒத்திகை பார்த்து விட்டே ஒலிப்பதிவுக்கு சென்றதாக கூறினார்.
எம்.எஸ்.அவர்களும் ஒரு முறை இதே மாதிரி கூறியிருந்தார்கள்.அந்த தொழில் பக்திதான் அவர்கள் மக்கள் மனதில் என்றும் இடம் பிடித்ததற்க்கு காரணமாகும்







காட்சியும் கானமும் கருத்தும் மற்ற எல்லா ம் மும்




நான் பொதுவாக விலங்குகள் ஒன்றுக்கு ஒன்று வேட்டை யாடும் நிகழ்ச்சியை  விரும்பி பார்க்க மாட்டேன் . மிகவும் மனதை பாதிக்கும் என்று அந்த அலைவரிசையையே என் தொலைக்காட்சி தொகுப்பில் இருந்து நீக்கி விட்டேன்  என் சரிபாதி யின்( அதாங்க betterhalf ன்) சகோதர் துபாயில் இருப்பவர்.Discovery channel  தவிர வேறு எதுவும் விரும்பி பார்க்கமாட்டார்.எனவே துபாய் க்கு நான் சென்றால் டி.வி இல்லாத அறையில் பொழதை கழிக்க விரும்புவேன்

இந்த வீடியோவை சமீபத்தில் தான் பார்த்தேன். தென் ஆப்ரிக்க நாட்டில் குருஜே
ர் காட்டுவனப் பகுதியில் நடந்த மனதை தொட்ட  உண்மை சம்பவம்.
ஐந்தறிவு பிராணிகள் ஆறறிவு உள்ள மனிதனுக்கு கற்ப்பித்த  பாடம் .
உலகில் நம்மால் எதுவும்  முடியும் என்பதை  உணர்த்திய  ஒரு அற்புத விளக்கம் 

 முதலில் சாதாரணமாக  சிங்கம் எருமையை வேட்டையாடும்  படம் போல தோன்றும்  இந்த எட்டு நிமிட படத்தில் கடைசி நிமிட திருப்பம்  தான் உலகில் கோடிக்கணக்கானவர்களை இந்த வீடியோவை  பார்க்க வைத்திருக்கின்றது. இதை மொத்தம் 59,483,551 பேர் பார்த்திருக்கின்றார்கள்.(நீங்களும் இதில் ஒன்றாக இருக்கலாம்.)இருந்தாலும் இப்பொழது இதைப்பாருங்கள்.கடைசி நிமிட காட்சியில் நான் என்னை அறியாமல் கைதட்டி ஆரவாரம் செய்தபோது வீட்டில் உள்ளவர்கள் என்னை விநோதமாக பார்த்தது நிஜம் .
என்னவென்று அறிய கடைசி வரை இந்த வீடியோவைப்பாருங்கள்
நாம் ஒன்றாம் வகுப்பில் படித்த அதே கதைதான் இப்பொழது  நிஜத்தில் நடந்தது..



இப்பொழுது அதே கருத்தை சொல்லும் காலத்தால் அழியாத இந்த பா ட்டைகேளுங்கள் .
இந்த வரிகளில் உள்ள உண்மையை ஏன் சிலரால் உணர்ந்துகொள்ள முடியவில்லை .

துணையன்றி வெண்புறா தனியாக வந்ததே
வனவேடன் வீசிய வலைதன்னில் வீழ்ந்ததே
இனம் யாவும் சேர்ந்துதான் அதை மீட்கச் சென்றதே
கதை யான போதிலும் கருத்துள்ள பாடமே
வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே

இந்த படத்தில்  நடிகர்கள் பாலய்யா.எம்.ஆர்.ராதா ,சுப்பையா அனைவரும் சிவாஜிக்கு ஈடு கொடுத்து நடித்து இருப்பார்கள். .




========================================================================

கடந்த 13-02-2011 அன்று ஜெயா டி.வியில் ஜாக்பாட் நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.கடந்த ஒரு வருடமாகத்தான் எங்க வீட்டு டிவி யில் ஜெயா தெரிகிறது.

இரு அணிகளுக்கும் நடந்த போட்டி நிகழ்ச்சியில் ஒரு அணியினர் சென்னையில் உள்ள ஒரு வங்கியிலிருந்து வந்திருந்தனர்..அனைவரும் ஆண்கள்..இரண்டாம் அணியை சேர்ந்தவர்கள். ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்ப்பவர்கள் போல அதில் மூன்று பேர்கள் பெண்கள்.(தங்கள் பதவி பெயரை ஏதோ எக்ஸ்க்யூடிவ் என்று சொல்லிக்கொண்டார்கள்.)
அவர்கள் அந்த நிகழ்ச்சியில் 95% ஆங்கிலேத்திலேயே உரையாடினார்கள்...
அந்த பெண்கள் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் மாதிரி தெரியவில்லை எல்லாம் நம்ம ஊர் அம்மணிகள் தான்.
அந்த அணியை சேர்ந்த ஒரே ஒரு ஆண் சினிமாவில் வரும் அமெரிக்க மாப்பிள்ளை மாதிரி இருந்தார் வீட்டிலேயே சத்தியம் பண்ணி விட்டு வந்திருப்பார் என நினைக்கிறேன்.ஒரு வார்த்தை கூட தமிழில் திருவாய் மலரவில்லை 
முதலில் தமிழில் உரையாடிய எதிர் அணியில் உள்ள ஆண்கள் மற்றவர்கள் ஆங்கிலத்தில் விடை சொல்லும் போது தமிழில் தாம் பதில் சொன்னால் தம்மை குறைவாக மதிப்பிடுவார்கள் என நினைத்து அவர்களும் தங்கள் நாவில் அவ்வளவாக தமிழை நடமாட விடவில்லை..
பாவம் மும்பையில் பிறந்து வளர்ந்த நதியா இயன்றவரை தமிழில் நிகழ்ச்சியை நடத்த முயற்சி பண்ணினார். 
இதப்போய் பெரிசா எழத வந்திட்டியாக்கும் இதெல்லாம் எங்களுக்கு சகஜமப்பா என்று நீங்கள் பொருமுவது கேட்கிறது.
உங்களுக்கு  எல்லாம் ரொம்ப பொறுமையப்பா. 
கொஞ்சம் யாராவது அந்த 4 பேரை இங்க அனுப்புங்கப்பு..நாங்க தமிழர்கள் ஒருவருக்கொருவர் பேசும்பொழது ஆங்கிலத்தில் பேசக்கூடாது என்று ஒரு விதி வைத்துள்ளோம்.அப்பவாவது அவர்கள் தமிழில் பேசுவார்களா என்று பார்ப்போம்.
 கடந்த வருடம் ஒரு டி வி நிகழ்ச்சியில் திரு அப்துல்கலாம் அவர்களை  நடிகர் விவேக் அவர்கள் பேட்டி கண்டபோது நான் அறிந்தவரையில் முன்னாள் ஜனாதிபதி அவர்கள் கொஞ்சம் கூட  ஆங்கில கலப்பிடமில்லாமல் பேசினார்..அதுதான் நிறைகுடத்தின் தன்மை.


-

யாரும் ரசிக்கவில்லையே


ஒருவர் வாஷிங்டன் நகரத்தின் மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனில் ஒரு ஜனவரி மாதத்தின் பனி பெய்யும் காலை நேரத்தில் வயலின் வாசிக்க ஆரம்பித்தார்.(நம் ஊரில் துண்டை விரித்து ஆர்மோனியம் வாசித்து காசு கேட்ப்பார்களே அந்த மாதிரி) .
 புகழ்ப்பெற்ற 6 பாடலை சுமார் 45 நிமிடம் வாசித்தார். காலை நேரமாதலால் அலுவலகம் செல்லும் சில ஆயிரக்கணக்காணவர்கள்.அந்த வழியாக வயிலின் வாசிப்பை கவனிக்க நேரமின்றி பறந்துக்கொண்டிருந்தனர்.
 
மூன்று நிமிடம் கழித்து ஒரு நடுத்தர வயதுக்காரர் அந்த வயலின் காரரை கவனித்தார்.சில நொடிகள் இசையை ரசித்து விட்டு கூட்டத்தோடு கூட்டமாக மறைந்தார்.
 ஒரு நிமிடத்திற்க்கு பின்பு வயலின் காருக்கு ஒரு டாலர் கிடைத்தது அதுவும் அவரின் இசையை ரசித்து விட்டு போட்ட பணம் கிடையாது.ஒரு பெண்மணி அவசரத்தில் வீசிவிட்டுப்போனது.
  
சில நிமிடங்கள் கழித்து யாரோ ஒருவர் சுவற்றின் மீது சாய்ந்த வாறு அவர் இசையை கேட்டுக்கொண்டிருந்தார் ஆனாலும் அவரின் பார்வை தன் கைக்கடிகாரத்தின் மீதே இருந்தது. பின்பு அவர் அலுவலகத்துக்கு நேரமாயிற்று என விரைந்தார்..
 . 
ஒரு சிறுவனைத்தவிர எவரும் அவரின் இசையை கவனித்து பார்க்கவில்லை.அவனையும் அவன் அம்மா அவனை தரதர வென்று இழத்துக்கொண்டு சென்றாலும் அவன் கண்கள் அந்த வயலின்காரர் பக்கமே திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டு சென்றது 
அவர் வயலின் வாசித்த அந்த ஒரு மணி நேரத்தில் அவருக்கு கிடைத்த தொகை 32 டாலர்கள்..6 பேர் மட்டுமே அவரை நின்று பார்த்தனர்..20 பேர்கள் பணத்தை மட்டும் வீசிவிட்டு சென்றனர்.அவர் வயலின் வாசித்து விட்டு முடித்த போது யாரும் அங்கு நின்று கொண்டிருக்கவில்லை.
 . 
ஆனால்  அவர்தான் உலகப்புகழ்ப்பெற்ற மிகச்சிறந்த வயலின் விததகர் ஜோஷுவா பெல்  என்று அங்கிருந்தவர்கள் அறிந்தால் அவ்விடத்தில் ரயில் போக்குவரத்தே ஸ்தம்பித்திருக்கும்
அன்று அவர் வாசிதத வயலினின் மதிப்பு மட்டும் 3.5 மில்லியன் டாலர்.
 
இரு நாட்களுக்கு முன்புதான் அவருடைய கச்சேரி  பாஸ்டன் அரங்கில் நடைப்பெற்ற போது எல்லா டிக்கெட்டுகளும் விற்று தீரந்து விட்டது.கடைசி வரிசை இருக்கையின் டிக்கெட் 100 டாலர் 

ஜோஷுவாவின் இந்த ரயில்வே ஸ்டேஷன் நிகழ்ச்சி .மக்களின் ரசனை, வாழ்க்கையில் அவர்களின் முக்கியத்துவம் இவைகளைப்பற்றி ஒரு சமூக பரிசோதனைக்காக வாஷிங்டன் போஸ்ட்  ஏற்ப்பாடு பண்ணியது
ஒரு பொது இடத்தில் ஒரு பொருத்தமில்லாத நேரத்தில், நாம் அழகை ரசிப்போமா?மற்றவர்களின் கலைத்திறமைகளை பொறுமையாய் நின்று பாராட்டுவோமா அவர்களின் செயல் திறத்தினை எதிர்ப்பார்க்காத.தறுவாயில் அங்கீகரிப்போமா?
இந்த கேள்விகளை முன் வைத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் மனிதனின் மனோபாவம் வியப்புக்குறியதே. என அறியப்பட்டது.
==================================================================================
                மாறித்தான்  போச்சு

மதிப்புமிகு மடாதிபதிகளும்
மாண்புள்ள  சாமியார்களும்  -முன்பு
வாழ்ந்த இடம்  பர்ணசாலை  - இன்று
வாழுமிடம் சிறைச்சாலை.

கள்ளத்தொழிலும் கருணை இன்றி
தலையை சீவும் தரம் அற்றோரும்
சேர வேண்டியது சிறைச்சாலை- அவரோ
சேர்ந்து விட்டார் சட்டசபை.

நடிகர்களும் தொழில் மறந்து
நாடாள முனைகின்றார்-நாடாள்பவரும்
நம்மிடம் நலலவன்போல் தினம்தினம்
நன்றாகவே நடிக்கின்றார்.

படிக்கும் மாணவரும் சிந்தைமயங்கி
சீரழிவார் தேவையில்லா அரசியலால்
அரசியல்வாதிகள்  அந்தோ தம்பணி மறந்து
துடிக்கசெய்வார் நம்மையெல்லாம்.

பணம்தேடி பெண்களும் வெளியிலே சுற்றி
வீட்டினை மறக்கின்றார். தம்கடமை மறந்து
புல்லனாக மாறிவிட்ட  கணவன் தானும்
போதையில்  தினமும் மிதக்கிறார்

                                        புதுவை ராம்ஜி.