மகாபாரதம்

நான் பதிவு உலகம் நலமாக இருக்கட்டும் என்று கடந்த சில மாதங்களாக என் எழுத்துப்பணியை நிறுத்தி வைத்தேன்.
ஜாக்கிரதை இப்பொழது வந்துட்டேன்.
இப்பொழுது மகாபாரதம் படித்துகொண்டிருக்கின்றேன் அதைப்படிக்கும் பொழுது என்னுள் ஏற்ப்பட்ட சந்தேகத்துடன் இந்தப்பதிவை ஆரம்பிக்கின்றேன்
நான் இலக்கியம் படித்ததில்லை இதிகாசமும் அறிந்ததில்லை
சில கேள்விகள் நான் இதிகாசம் அறிந்தவர்களை கேட்க வேண்டும் என என் மனதில் போட்டு வைத்திருக்கின்றேன் அறிந்தவர்கள் அடியேனுக்கு விளக்கலாம்.
முதல் கேள்வி.
ஈசனின் இரண்டாவது மனைவி கங்கை என்றாள் அவள் எப்படி மகாபாரத்தில் சந்தனுக்கு மனைவியானாள்?
அரக்கு மாளிகையில் இருந்து பாண்டவர்கள் தப்பிக்கும்போது ஏழ்மையான குந்தியைப்போன்ற தாயையும் அவளது ஐந்து புதல்வர்களையும் மற்ற  வேலைக்காரர்களையும் பீமன் தீக்கிரையாக்கினது முறைதானா?


No comments:

Post a Comment