எஸ் யுவர் ஆனர்


ஒரு மனிதன் கடற்கரையோரம் ஒரு பாட்டிலை கண்டுபிடித்தான்.அதனை திறந்த போது அதனுள்ளே இருந்து ஒரு பூதம் வெளியேறியது பூதம் தன்னை விடுதலை பண்ணியதற்க்கு நன்றி தெரிவித்தது பின்பு ஏ மனிதா உனக்கு நீ விரும்பிய மூன்று வரங்களை கொடுக்கிறேன்.ஆனால் ஒரு நிபந்தனை
என்ன நிபந்தனை? என்று மனிதன் கேட்டான்..
உனக்கு என்ன கேட்கிறாயோ அதே போல் இரு மடங்கு உலகில் உள்ள வக்கீல்கள் அனைவருக்கும் கிடைக்கும் என்றது பூதம்.
சரி என்று மனிதன் சம்மதித்து முதல் வரமாக உலகின் விலை உயர்ந்த காரை கேட்டான். உடனே அவனுக்கு ஒரு காரும் வக்கீல்கள் அனைவருக்கும் இரு கார்களும் கிடைத்தன.
இரண்டாவது வரமாக பல கோடி பெறுமான வைரங்கள் கேட்டான் அதுவும் அவனுக்கும் வக்கீல்களுக்கும் கொடுக்கப்பட்டது.
மூன்றாவதாக அவன் கேட்டது. என்னுடைய ஒரு கிட்னியை மற்றவருக்கு தானமாக கொடுக்க விரும்புகிறேன்


ஒருவன் தன் வக்கீல் ஆபிஸுக்கு  போன் செய்து தன்னுடைய வக்கீலுடன் பேச விரும்புவதாக தெரிவித்தான்.
அவருடைய செகரட்டரி வக்கீல் போனவாரம் இறந்து விட்டதாக வருத்ததுடன் அறிவித்தாள்.
மறு நாளும் வக்கீல் ஆபிஸுக்கு அதே ஆள் போன் செய்து வக்கீல் இருக்கிறாரா என்று கேட்டான்.செகரட்டரி மறுபடியும் அவர் போனவாரம் இறந்து போனதை தெரிவித்தாள்.
அதற்க்கு மறுநாளும் அதே போன்.
செகரட்டரிக்கு இந்த தடவை ஒரே கோபம்..எத்தனை தடவை உங்களுக்கு தெரிவிப்பது அவர் இறந்து விட்டார் என்பதை என்று சலிப்பாக கூறிளாள்.
அதற்கு அவன் இந்த செய்தி  கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது சலிக்கவில்லை என்றான்.

ஒரு வக்கீல் தன்னுடைய விலையுயர்ந்த புது காரில் இருந்து இறங்கும் போது ஒரு லாரி அவருடைய காரில் உராய்ந்து சென்று ஒரு கதவை பியத்து போட்டு விட்டு சென்றது.
வக்கீலுக்கு காரைப்பார்த்து விட்டு துக்கம் தாங்கமுடியவில்லை.போலிஸுக்கு உடனே போன் பண்ணி அவர்களை வரவழைத்து லாரியை கண்டு பிடித்து தர வேண்டும் என குமறினார்.
அவரின் நிலைமையை பார்த்த போலீஸ் அதிகாரி வக்கீல்கள் சற்று பொருள் மீது ஆசை பிடித்தவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன் ஆனால் இப்பொழுதுதான் பார்க்கிறேன் என்றார். எப்படி என்று வக்கீல் கேட்டார்.
பாருங்கள் அந்த லாரி காரன் உங்கள் கார் கதவை மட்டும் எடுக்கவில்லை உங்கள் இடது கை முழுவதும் துண்டித்து விட்டது.அதைக்கூட உணராமல் கார் கதவு போனதுக்கு வருந்துகின்றீர்களே என்றார்.
அப்போதுதான் தன்னுடைய கை போனதை அறிந்த வக்கீல்
ஐயோ என்னுடைய ரோலக்ஸ் வாட்ச்சும் இப்போ காணோம் என்று கதறினார்..

ஒரு திருடன் நியூஸ்
சமீபத்தில் சிரிப்பு திருடன் சி.வேலு பற்றி எழுதினேன் அல்லவா? அது போன்ற செய்திகளுக்கு பஞ்சமே இருக்காது போலிருக்கிறது. இதோ நாக்பூர் நாளேடு ஒன்றில் சில நாட்களுக்கு முன்பு வந்த செய்தி :
இவன் சிரிப்பு திருடனா (அ) செண்டிமெண்ட் திருடனா?
சஞ்சய் என்ற 29 வயது திருடன் சமீபத்தில் போலீசாரிடம் சிக்கினான். 2005 வருடத்திலிருந்து சுமார் 60 திருட்டுகள் செய்தவன். சிறு சிறு திருட்டுக்கள் என்பதால் எப்படியோ போலீசாரிடம் மாட்டாமல் இருந்துள்ளான்.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் , அவன் திருமணமான சுமங்கலி பெண்களிடம் தப்பி தவறி கூட நகை திருடமாட்டானாம். அவர்கள் விடும் கண்ணீரால் தன் இரு குழந்தைகளுக்கு வியாதியும் தன் மனைவிக்கு
இறப்பும் நேரிடும் என்று சத்தியமாக நம்புகிறான். இதுவரை திருடிய வீடுகளில் பணமும் ஆண்களிடம் உள்ள நகைகளையுமே எடுத்து கொண்டு பெண்கள் நகை இருந்தால் அப்படியே விட்டு விடுவானாம். அதுவும் தாலி ? மூச்.
இப்படி நல்ல செண்டிமெண்ட் இருப்பதால் அவனுக்கு தண்டனை குறையுமா? நோ என்று சொல்கிறார் சீனியர் இன்ஸ்பெக்டர். செய்த தப்புக்கு தகுந்த மாதிரிதான் கிடைக்கும் என்று சொல்லி விட்டார்.
தப்பு என்பது தெரிந்து செய்வது. தப்பு செய்தவன் வருந்தியாகணும்

புதுவை ராம்ஜி.

No comments:

Post a Comment