துலாபாரம்


1961 இல் வெளிவந்த பாசமலர் திரைப்படத்தை பார்த்தவர்கள் கண்கலங்காமல் இருந்ததைல்லையோ அதேப்போல் 1969 ம் வருடம் வெளிவந்த துலாபாரம் திரைப்படத்தைப்பார்த்துவிட்டு கண்ணீர் வராமல் வெளிவந்தவர்கள் இல்லை.
பின்பு இந்த படத்தை 80 களில் கறுப்பு வெள்ளை  டெலிவிஷனில் மாநில திரைப்படங்கள் வரிசையில் டில்லி தூர்தர்ஷன் ஒரு ஞாயிறு மதியம் இந்த படத்தை போட்டது.அதை நான் சாப்பிடும் போது பார்த்துவிட்டு மனதை பிழிந்த காட்சிகளால் சாப்பாட்டின் பாதியில் எழுந்து விட்டேன் மலையாளத்தில் முதலில் வந்த துலாபாரம் மலையாளத்தில் கதாநாயகியாக நடித்த சாரதாவே தமிழிலும் கதாநாயகியாக நடித்தார். அவருக்கு ஊர்வசி பட்டம் இந்தப்படத்தால் கிடைத்தது.
ஏ வி எம் ராஜன் பரிதாபமான கணவன் பாத்திரத்தில் நடித்திருந்தார்.முத்துராமன் தன்னலமுள்ள கதாப்பாத்திரத்தில்  நாம் அந்த பாத்திரத்தை வெறுக்கும்படி நன்கு நடித்திருந்தார்.
மற்ற எல்லா சோகப்படத்தில் வருவது போலவே இந்த படத்திலும் துரோகமே எல்லாத்துயரங்களுக்கும் அடிப்படையாக இருக்கின்றது.
காதலன் காதலிக்கு செய்யும் துரோகம்,முதலாளி தொழிலாளிக்கு செய்யும் துரோகம்,வக்கீல் கட்சிக்காரருக்கு செய்யும் துரோகம்,நண்பருக்கு செய்யும் துரோகம் என்று பல துரோகங்கள் ஒரு அபலையின் வாழ்வில் விளையாடியிருப்பதை இந்த படத்தில் காணலாம்
அந்தப்படத்தில் சோகத்தை ஓவர் டோஸாக கொடுத்திருகின்றார்களோ என்று இப்பொழுது எனக்கு சந்தேகம் வருகின்றது.
இந்த படத்தின் இயக்கம் வின்சென்ட்.—பாடல் –கண்ணதாசன் இசை தேவராஜன். 
இந்தபாடல் முதலில் கேட்டபோது அவ்வளவாக மனதில் இடம் பிடிக்கவில்லை கேட்க கேட்க தான் பிடிக்க ஆரம்பித்தது.


காற்றினிலே பெரும் காற்றினிலே,
ஏற்றிவைத்த தீபத்திலும் இருள் இருக்கும்,
காலம் எனும் கடலிலே சொர்கமும் நரகமும்,
அக்கரையோ இக்கரையோ?

ஆண்டவனும் கோவிலில் தூங்கிவிடும் போது,
யாரிடத்தில் கேள்வி கேட்பது,
ஏழைகளின் ஆசையும் கோவில் மணி ஓசையும்
வேறுபட்டால் என்ன செய்வது,
தர்மமே மாறுபட்டால் என்ன செய்வது,

ஆடுவது நாடகம் ஆளுக்கொரு பாத்திரம்,
இறைவனுக்கு வேஷமென்னவோ?
ஆடவைத்து பாடுவான் மூடுதிரை போடுவான்
மேடை அவன் மேடையல்லவோ
வாழ்க்கையின் பாதை அவன்
பாதையல்லவோ?

2 comments:

மாலி said...

துலாபாரம் போலவே உயர்ந்தவர்கள் என்ற படம் அதில் வரும் கடவுள் இரண்டு பொம்மைகள் செய்தான் தான்
விளையாட எனற பாடலையும் இதன் மூலம் நினைவு
படுத்துகிறேன்.எனக்கு என்னவோ துலாபாரம் என்றவுடன் உயர்ந்தவர்கள் படம் நினைவுக்கு வந்தது
ஏன் என தெரியவில்லை

Anonymous said...

இந்த படத்தில் வரும் மற்றொரு பாடல் பூஞ்சிட்டு கன்னங்கள் என்ற பாடலில் வரும் கண்ணீர் உப்பிட்டு காவேரி நீரிட்டு கலயங்கள் ஆடுது சோறின்றி இதயங்கள் வாடுது வாழ்வின்றி கண்ணுறங்கு கண்ணுறங்கு பொன்னுலகம் கண்ணில் காணும் வரை என்ற வரிகள் கேட்க கேட்க இல்லை முதன் முதலாக கேட்ட மாத்திரத்திலே கண்கள் குளமாகி விடும் இப்பாடலை ஏன் சுண்டு+எலி விட்டுவிட்டார்?

Post a Comment