யாரும் ரசிக்கவில்லையே


ஒருவர் வாஷிங்டன் நகரத்தின் மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனில் ஒரு ஜனவரி மாதத்தின் பனி பெய்யும் காலை நேரத்தில் வயலின் வாசிக்க ஆரம்பித்தார்.(நம் ஊரில் துண்டை விரித்து ஆர்மோனியம் வாசித்து காசு கேட்ப்பார்களே அந்த மாதிரி) .
 புகழ்ப்பெற்ற 6 பாடலை சுமார் 45 நிமிடம் வாசித்தார். காலை நேரமாதலால் அலுவலகம் செல்லும் சில ஆயிரக்கணக்காணவர்கள்.அந்த வழியாக வயிலின் வாசிப்பை கவனிக்க நேரமின்றி பறந்துக்கொண்டிருந்தனர்.
 
மூன்று நிமிடம் கழித்து ஒரு நடுத்தர வயதுக்காரர் அந்த வயலின் காரரை கவனித்தார்.சில நொடிகள் இசையை ரசித்து விட்டு கூட்டத்தோடு கூட்டமாக மறைந்தார்.
 ஒரு நிமிடத்திற்க்கு பின்பு வயலின் காருக்கு ஒரு டாலர் கிடைத்தது அதுவும் அவரின் இசையை ரசித்து விட்டு போட்ட பணம் கிடையாது.ஒரு பெண்மணி அவசரத்தில் வீசிவிட்டுப்போனது.
  
சில நிமிடங்கள் கழித்து யாரோ ஒருவர் சுவற்றின் மீது சாய்ந்த வாறு அவர் இசையை கேட்டுக்கொண்டிருந்தார் ஆனாலும் அவரின் பார்வை தன் கைக்கடிகாரத்தின் மீதே இருந்தது. பின்பு அவர் அலுவலகத்துக்கு நேரமாயிற்று என விரைந்தார்..
 . 
ஒரு சிறுவனைத்தவிர எவரும் அவரின் இசையை கவனித்து பார்க்கவில்லை.அவனையும் அவன் அம்மா அவனை தரதர வென்று இழத்துக்கொண்டு சென்றாலும் அவன் கண்கள் அந்த வயலின்காரர் பக்கமே திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டு சென்றது 
அவர் வயலின் வாசித்த அந்த ஒரு மணி நேரத்தில் அவருக்கு கிடைத்த தொகை 32 டாலர்கள்..6 பேர் மட்டுமே அவரை நின்று பார்த்தனர்..20 பேர்கள் பணத்தை மட்டும் வீசிவிட்டு சென்றனர்.அவர் வயலின் வாசித்து விட்டு முடித்த போது யாரும் அங்கு நின்று கொண்டிருக்கவில்லை.
 . 
ஆனால்  அவர்தான் உலகப்புகழ்ப்பெற்ற மிகச்சிறந்த வயலின் விததகர் ஜோஷுவா பெல்  என்று அங்கிருந்தவர்கள் அறிந்தால் அவ்விடத்தில் ரயில் போக்குவரத்தே ஸ்தம்பித்திருக்கும்
அன்று அவர் வாசிதத வயலினின் மதிப்பு மட்டும் 3.5 மில்லியன் டாலர்.
 
இரு நாட்களுக்கு முன்புதான் அவருடைய கச்சேரி  பாஸ்டன் அரங்கில் நடைப்பெற்ற போது எல்லா டிக்கெட்டுகளும் விற்று தீரந்து விட்டது.கடைசி வரிசை இருக்கையின் டிக்கெட் 100 டாலர் 

ஜோஷுவாவின் இந்த ரயில்வே ஸ்டேஷன் நிகழ்ச்சி .மக்களின் ரசனை, வாழ்க்கையில் அவர்களின் முக்கியத்துவம் இவைகளைப்பற்றி ஒரு சமூக பரிசோதனைக்காக வாஷிங்டன் போஸ்ட்  ஏற்ப்பாடு பண்ணியது
ஒரு பொது இடத்தில் ஒரு பொருத்தமில்லாத நேரத்தில், நாம் அழகை ரசிப்போமா?மற்றவர்களின் கலைத்திறமைகளை பொறுமையாய் நின்று பாராட்டுவோமா அவர்களின் செயல் திறத்தினை எதிர்ப்பார்க்காத.தறுவாயில் அங்கீகரிப்போமா?
இந்த கேள்விகளை முன் வைத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் மனிதனின் மனோபாவம் வியப்புக்குறியதே. என அறியப்பட்டது.
==================================================================================
                மாறித்தான்  போச்சு

மதிப்புமிகு மடாதிபதிகளும்
மாண்புள்ள  சாமியார்களும்  -முன்பு
வாழ்ந்த இடம்  பர்ணசாலை  - இன்று
வாழுமிடம் சிறைச்சாலை.

கள்ளத்தொழிலும் கருணை இன்றி
தலையை சீவும் தரம் அற்றோரும்
சேர வேண்டியது சிறைச்சாலை- அவரோ
சேர்ந்து விட்டார் சட்டசபை.

நடிகர்களும் தொழில் மறந்து
நாடாள முனைகின்றார்-நாடாள்பவரும்
நம்மிடம் நலலவன்போல் தினம்தினம்
நன்றாகவே நடிக்கின்றார்.

படிக்கும் மாணவரும் சிந்தைமயங்கி
சீரழிவார் தேவையில்லா அரசியலால்
அரசியல்வாதிகள்  அந்தோ தம்பணி மறந்து
துடிக்கசெய்வார் நம்மையெல்லாம்.

பணம்தேடி பெண்களும் வெளியிலே சுற்றி
வீட்டினை மறக்கின்றார். தம்கடமை மறந்து
புல்லனாக மாறிவிட்ட  கணவன் தானும்
போதையில்  தினமும் மிதக்கிறார்

                                        புதுவை ராம்ஜி.

1 comment:

amerp said...

what a beatiful song

Post a Comment