செய்திகள் வாசிப்பது சுண்டு+எலி




செய்தி
தமிழகத்தில், அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை, 58ல் இருந்து, 60ஆக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை, அரசு மேற்கொண்டுள்ளது. தேர்தல் பரிசாக வரும் சட்டசபை கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது


சுண்டு+எலி பிரஸ்

இந்த அறிவிப்பை தொடர்ந்து திரையுலகத்தினர் நடத்திய பாராட்டு விழாவில் கலைஞர் பேசிய பொழது  உலகில் நான்கு பேர்க்கு  நல்லது செய்யணும் என்பார்கள். இந்த அரசு பல்லாயிரக்காணவர்களுக்கு நல்லது செய்துள்ளதால் 60 ஐ 4 மடங்காக்கி 240 தொகுதிகளும் (புதுவையும் சேர்த்து தான் )நமதே என இப்போதே முடிவாகி விட்டது ஆகவே தயவு செய்து அறிவு ஜீவிகள் ஓட்டு போட வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்
.
அரசின் இந்த நடவடிக்கை அ.தி மு.க வட்டாரத்தில் சலசலப்பை ஏற்ப்படுத்தியுள்ளதால் அம்மா மைனாரிடி அரசுவின் இந்த அறிவிப்பு தோல்வி பயத்தால் ஏற்ப்பட்ட நடுக்கம் என்றும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியரின் ஓய்வு பெறும்  வயதை 70 வயதாக உயர்த்துவோம் என அறிவித்தார்.அதே சமயம் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கும் நபரின்  வயது உச்சவரம்பினை 50 வயதாக நிர்ணயம் செய்வோம் என மக்கள் கரகோஷத்தினிடையில் கூறினார்.
.
ப.ம.க தலைவர் இதைப்பற்றி கருத்து தெரிவிக்கும் போது நாங்கள் இன்னும் யார் பக்கம் சாய்வது என்று எந்த முடிவும் எடுக்க முடியாததால் 65 வயதே ஒய்வு பெறும் வயது என்று நம்புவதாகவும் அன்புமணிக்கு பதவி வந்த பிறகே இனி வாய் திறக்கப்போவதாகவும் கூறினார்
.
தேமு தி க தலைவர் விஜயகாந்த் ஒரு அறிக்கையில் இந்த நாட்டில் 60 வயதுக்குமேலுள்ளவர்கள் சுமார் 22 கோடி அதில் ஆண்கள் 11 கோடியே 86 லட்சத்து 93 ஆயிரம் பெண்கள் 10 கோடியே 13 லட்சத்து 7 ஆயிரம் பேர்கள் என்றும் இன்னும் 80 வயதுள்ளவர்களைப்பற்றி கணக்கு எடுத்து முடியாததால் அதைப்பற்றி பின்பு முடிவெடுப்பதாக கோபத்துடன் கர்ச்சித்தார்.

சத்திய மூர்த்திபவனில் எல்லா கோஷ்ட்டிகளும் எல்லா பத்திரிகைகளுக்கும் அறிக்கை கொடுக்க முற்ப்பட்டதால் அடிதடி ஏற்ப்பட்டது.

இது நினைவுக்கு வந்தால் உடனே மறந்து விடுங்கள்

உலகில் மிக அதிகமான இளைஞர்களை,(இருபாலரும் இதில் அடக்கம்) கொண்ட நாடு இந்தியா

செய்தி
புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, நாடாளும் மக்கள் கட்சி போன்றவை .தி. மு.., அணியில் சேர்ந்துள்ளன. 

சுண்டு+எலி பிரஸ்

சுண்டெலி முன்னேற்ற கட்சியின் தலைவரும், பொதுசெயலாளரும்,கொ.ப.ச மற்றும் மாவட்ட செயலாளருமான சுண்டு+எலி யை அ.தி.மு.க தேர்தல் நிர்வாக குழு சந்தித்தது.
பேச்சு வார்த்தை முடிந்த பின்பு நிருபர்களுக்கு பேட்டியளித்த சு.எலி இன்னும் கூட்டணிப்பற்றி முடிவு செய்யவில்லை என்றும் தி.மு.க குழுவும் தன் கூட்டணியை நாடுவதாகவும் அறிவித்தார்.யார் அதிக தொகுதிகள் கொடுக்கின்றார்களோ அவர்களுடனே கூட்டுசேர்வதாகவும் கூறினார்.ஒரு வீணாபோன நிருபர் உங்கள் கட்சியில் ஒருவர் தானே உள்ளீர்கள் என வெறுப்பேத்தி கேட்டாலும் சு.எலி மிகப் பொறுமையாக ஒன்றுக்கு மேற்ப்பட்ட தொகுதிகளில் இந்திராகாந்தி,ஜெயலலிதா லல்லு போன்றவர்கள் நின்றதிலையா என்று சில லட்சம் கோடி ஊழல் செய்த அரசியல்வாதி சிரித்துக்கொண்டே போலிஸ் வேனில் ஏறுவது போல முகத்தில் புன்னகை தவழ பதில் கூறியது அவர் ஒரு பண்பட்ட தலைவர் என்பதை காட்டியது.மேலும் அவர் தேர்தலில் வெற்றிப் பெற்றால் தன் தொகுதியில் உள்ள சுண்டெலிகளை பெரிச்சாளிகளாக மாற்றப்போவதாக சூளுரை உரைத்தார்.கூடியிருந்த பொதுமக்கள் இவர் நிச்சயம் மிகப்பெரிய தலைவராக ஒரு ரவுண்டு வருவார் என மகிழ்வுடன் கரவொலி எழப்பினர்

=========================================================================
நகர வாழ்க்கைக்கு ஆசையாய்
மாலையிட்டவன் அது
நரக வாழ்க்கையென்று உணர்ந்து
ஏக்கத்துடன் தேடுகின்றேன்
ஏற்கனவே இழந்ததை :

சிலு சிலு தென்றலையும்
சின்னஞ்சிறு கிளிகளையும்
மாசு படாத மனங்களையும்
மாவு பூசாத முகங்களையும்
மாலை வெயிலின் மஞ்சளையும்
                                                       
ஏக்கத்துடன் தேடுகிறேன்

மருதாணி சிவப்பை ஒப்பிட்டு
சிரித்தோடும் கொலுசு சிறார்களையும்
வாசலில் கோலமிட்டு
சாணத்தில் பூசெருகி
விழித்த கணவனுக்கு
வெந்நீர் வலாவும்
கங்கை போன்ற புனிதமான
மங்கையரின் எழிற்கோலம்

 ஏக்கத்துடன் தேடுகின்றேன்.

கோவணம் கட்டி மாடு மேய்த்து
ஆடு புலிஆட்டத்தின் வெற்றியில்
காவி தெரிய சிரிக்கும்
கள்ளம் அறியா சின்னானின்
முகத்தை

ஏக்கத்துடன் தேடுகின்றேன்.

குருஜி---

இவர் பெயரைக்கண்டவுடன் ஆசிர்வாதம் வாங்க புறப்பட்டு வந்துடாதீங்க.பெயர் குரு தலைஎழத்து ஜி அதாங்க இனிஷியல்

No comments:

Post a Comment