காட்சியும் கானமும் கருத்தும் மற்ற எல்லா ம் மும்
நான் பொதுவாக விலங்குகள் ஒன்றுக்கு ஒன்று வேட்டை யாடும் நிகழ்ச்சியை  விரும்பி பார்க்க மாட்டேன் . மிகவும் மனதை பாதிக்கும் என்று அந்த அலைவரிசையையே என் தொலைக்காட்சி தொகுப்பில் இருந்து நீக்கி விட்டேன்  என் சரிபாதி யின்( அதாங்க betterhalf ன்) சகோதர் துபாயில் இருப்பவர்.Discovery channel  தவிர வேறு எதுவும் விரும்பி பார்க்கமாட்டார்.எனவே துபாய் க்கு நான் சென்றால் டி.வி இல்லாத அறையில் பொழதை கழிக்க விரும்புவேன்

இந்த வீடியோவை சமீபத்தில் தான் பார்த்தேன். தென் ஆப்ரிக்க நாட்டில் குருஜே
ர் காட்டுவனப் பகுதியில் நடந்த மனதை தொட்ட  உண்மை சம்பவம்.
ஐந்தறிவு பிராணிகள் ஆறறிவு உள்ள மனிதனுக்கு கற்ப்பித்த  பாடம் .
உலகில் நம்மால் எதுவும்  முடியும் என்பதை  உணர்த்திய  ஒரு அற்புத விளக்கம் 

 முதலில் சாதாரணமாக  சிங்கம் எருமையை வேட்டையாடும்  படம் போல தோன்றும்  இந்த எட்டு நிமிட படத்தில் கடைசி நிமிட திருப்பம்  தான் உலகில் கோடிக்கணக்கானவர்களை இந்த வீடியோவை  பார்க்க வைத்திருக்கின்றது. இதை மொத்தம் 59,483,551 பேர் பார்த்திருக்கின்றார்கள்.(நீங்களும் இதில் ஒன்றாக இருக்கலாம்.)இருந்தாலும் இப்பொழது இதைப்பாருங்கள்.கடைசி நிமிட காட்சியில் நான் என்னை அறியாமல் கைதட்டி ஆரவாரம் செய்தபோது வீட்டில் உள்ளவர்கள் என்னை விநோதமாக பார்த்தது நிஜம் .
என்னவென்று அறிய கடைசி வரை இந்த வீடியோவைப்பாருங்கள்
நாம் ஒன்றாம் வகுப்பில் படித்த அதே கதைதான் இப்பொழது  நிஜத்தில் நடந்தது..இப்பொழுது அதே கருத்தை சொல்லும் காலத்தால் அழியாத இந்த பா ட்டைகேளுங்கள் .
இந்த வரிகளில் உள்ள உண்மையை ஏன் சிலரால் உணர்ந்துகொள்ள முடியவில்லை .

துணையன்றி வெண்புறா தனியாக வந்ததே
வனவேடன் வீசிய வலைதன்னில் வீழ்ந்ததே
இனம் யாவும் சேர்ந்துதான் அதை மீட்கச் சென்றதே
கதை யான போதிலும் கருத்துள்ள பாடமே
வேற்றுமையை வளர்ப்பதனாலே விளையும் தீமையே

இந்த படத்தில்  நடிகர்கள் பாலய்யா.எம்.ஆர்.ராதா ,சுப்பையா அனைவரும் சிவாஜிக்கு ஈடு கொடுத்து நடித்து இருப்பார்கள். .
========================================================================

கடந்த 13-02-2011 அன்று ஜெயா டி.வியில் ஜாக்பாட் நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.கடந்த ஒரு வருடமாகத்தான் எங்க வீட்டு டிவி யில் ஜெயா தெரிகிறது.

இரு அணிகளுக்கும் நடந்த போட்டி நிகழ்ச்சியில் ஒரு அணியினர் சென்னையில் உள்ள ஒரு வங்கியிலிருந்து வந்திருந்தனர்..அனைவரும் ஆண்கள்..இரண்டாம் அணியை சேர்ந்தவர்கள். ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்ப்பவர்கள் போல அதில் மூன்று பேர்கள் பெண்கள்.(தங்கள் பதவி பெயரை ஏதோ எக்ஸ்க்யூடிவ் என்று சொல்லிக்கொண்டார்கள்.)
அவர்கள் அந்த நிகழ்ச்சியில் 95% ஆங்கிலேத்திலேயே உரையாடினார்கள்...
அந்த பெண்கள் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் மாதிரி தெரியவில்லை எல்லாம் நம்ம ஊர் அம்மணிகள் தான்.
அந்த அணியை சேர்ந்த ஒரே ஒரு ஆண் சினிமாவில் வரும் அமெரிக்க மாப்பிள்ளை மாதிரி இருந்தார் வீட்டிலேயே சத்தியம் பண்ணி விட்டு வந்திருப்பார் என நினைக்கிறேன்.ஒரு வார்த்தை கூட தமிழில் திருவாய் மலரவில்லை 
முதலில் தமிழில் உரையாடிய எதிர் அணியில் உள்ள ஆண்கள் மற்றவர்கள் ஆங்கிலத்தில் விடை சொல்லும் போது தமிழில் தாம் பதில் சொன்னால் தம்மை குறைவாக மதிப்பிடுவார்கள் என நினைத்து அவர்களும் தங்கள் நாவில் அவ்வளவாக தமிழை நடமாட விடவில்லை..
பாவம் மும்பையில் பிறந்து வளர்ந்த நதியா இயன்றவரை தமிழில் நிகழ்ச்சியை நடத்த முயற்சி பண்ணினார். 
இதப்போய் பெரிசா எழத வந்திட்டியாக்கும் இதெல்லாம் எங்களுக்கு சகஜமப்பா என்று நீங்கள் பொருமுவது கேட்கிறது.
உங்களுக்கு  எல்லாம் ரொம்ப பொறுமையப்பா. 
கொஞ்சம் யாராவது அந்த 4 பேரை இங்க அனுப்புங்கப்பு..நாங்க தமிழர்கள் ஒருவருக்கொருவர் பேசும்பொழது ஆங்கிலத்தில் பேசக்கூடாது என்று ஒரு விதி வைத்துள்ளோம்.அப்பவாவது அவர்கள் தமிழில் பேசுவார்களா என்று பார்ப்போம்.
 கடந்த வருடம் ஒரு டி வி நிகழ்ச்சியில் திரு அப்துல்கலாம் அவர்களை  நடிகர் விவேக் அவர்கள் பேட்டி கண்டபோது நான் அறிந்தவரையில் முன்னாள் ஜனாதிபதி அவர்கள் கொஞ்சம் கூட  ஆங்கில கலப்பிடமில்லாமல் பேசினார்..அதுதான் நிறைகுடத்தின் தன்மை.


-

1 comment:

Anonymous said...

நன்று

Post a Comment