மலேசியா வாசுதேவன் --ஒரு சகாப்தம்


கணீரென்ற குரலுக்கு சொந்தக்காரர்.
70 இறுதிகளிலும் 80 களிலும் தமிழ்த்திரையிசை உலகில் கோலோச்சிய பாடகர்.
தமிழ் உச்சரிப்பை சிந்தாமல் சிதைக்காமல் உலகெங்கும் தன் இசையால் பரப்பிய மலேசியா வாசுதேவன் இன்று நம்மிடையே இல்லை
அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
முதன் முதலில்  அவர் பாடிய தமிழ்ப்படம்
உறவாடும் நெஞ்சம்.
அதில் வந்த இந்த பாடல்

Get this widget | Track details | eSnips Social DNA

சோகப்பாடலா இல்லை இளமை ததும்பும் இந்த பாடலா.
மலேசியா வாசுதேவன் அவர்களின் தேன் குரலில் அன்று கட்டுப்படாதவர்கள் யாரும் இல்லை


ஆகாயமே எந்தன் கையில் ஊஞ்சல் ஆடுதோ
பூ மேகமே எந்தன் கன்னம் தொட்டு போகுதோ
சோகம் போகும் உன் கண்கள் போதும்
சின்ன பாதம் நடந்ததால்..
வலியும் தீர்ந்தது வழியும் தெரிந்தது..ஓ

இந்த வரிகளில் அவர் காட்டும் அந்த பாவத்தால் இந்த பாட்டில் மயங்காதவர்கள் இல்லைஇதுவும் ஒரு தேன் துளி தான்

பொன் மானைத்தேடி நானும் பூவோடு வந்தேன்
நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்லை
அந்த மான் போன மாயமென்ன என் ராசாத்தி
அடி நீ சொன்ன பேச்சு நீர் மேல போட்ட மாக்கோலம் ஆச்சுதடி
அடி நான் சொன்ன பாட்டு ஆத்தோரம் வீசும் காத்தோடு போச்சுதடி

Get this widget | Track details | eSnips Social DNA


அவரின் பேட்டியை சில மாதங்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பினார்கள்.அதில் அவர் பிரபலமான பின்பு கூட ஒவ்வொரு பாட்டுக்கும் ஒத்திகை பார்த்து விட்டே ஒலிப்பதிவுக்கு சென்றதாக கூறினார்.
எம்.எஸ்.அவர்களும் ஒரு முறை இதே மாதிரி கூறியிருந்தார்கள்.அந்த தொழில் பக்திதான் அவர்கள் மக்கள் மனதில் என்றும் இடம் பிடித்ததற்க்கு காரணமாகும்2 comments:

sriram said...

மலேஷியா வாசுதேவன் அவர்கள் 8000 பாடல்களுக்கு மேல் தமிழில் பாடியுள்ளர். ஆனால் எனக்கு தெரிந்ததோ மிக குறைவு. அதில் மௌன கீதங்கள் என்ற படத்தில் daddy daddy oh my daddy என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அந்த பாடலைத்தான் இப்பொழுது கேட்கிறேன். வாழ்க அவரது இசை!!

Anonymous said...

There few other excellent songs sung by Mr Malaysia Vasudevan (I hope so) but not so familiar.

Adi adu poonkodiyae, vilayadu poonkodiyae (Film is probably Kali, not sure)

Another excellent song from the movie 'Nandu',
Alli thanda vanam annai allava (Listen to the incredible lyrics)
This movie was directed by ace director mahendran, but it was not a hit which may be the reason that the movie is not available, also the video is unavailable for this song.
(Sorry for not typing in Tamil)

----PAUL

Post a Comment