திருமணமாம் திருமணமாம்

சில திருமண மரபுகள்
  
மெக்சிகன்; Animated Flag of Mexico
சிவப்பு மணிகள் மணமக்கள் வரும் வழிநெடுகிலும் தூவப்படும்.அது அவர்களுக்கு செழிப்பை கொடுக்கும் என்று நம்புகின்றார்கள்.

ஆப்பிரிக்கா Animated flag of Afro-American - USA
இன்றும் அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்கர்கள் இடையே இந்த பழக்கம் நிலவுகிறது.ஒரு துடப்பத்தை மணமக்கள் இருவரும் குதித்து தாண்டவேண்டும். ஆபிரிக்க அமெரிக்கர் அடிமைத்தனம் போது சட்டப்படி அவர்களால் திருமணம் செய்து கொள்ள முடியாத போது இந்த சடங்கு உருவாக்கப்பட்டது
இன்றும்  திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்கள் வரவேற்புபகுதியில் நுழையும் பொழுது விருந்தினர்களால் அலங்கரிக்கப்பட்ட விளக்குமாறு அங்கு இருக்கும்.

பெல்ஜியம் Animated Flag of Belgium
மணப்பெண் தன் திருமண விழாவில் மேடை வரை நடந்து பின்,  அவரது பூச்செண்டிலிருந்து அவள் அம்மாவிடம்  ஒருமலரை கொடுப்பாள் பின்பு  அவர்கள் தழுவி பிரியாவிடை பெறுவார்கள். திருமண விழா முடிந்த பிறகு,புதிய ஜோடி தேவாலயத்தின் மற்றொரு பக்கம் நடந்து செல்லும் போது மணப்பெண் அவள் பூச்செண்டை அவள் மாமியாரிடம் கொடுத்து  தழுவி கொள்வாள்.

சீனா Animated Flag of China
 
மணப்பெண் , ஒரு சிவப்பு திருமண ஆடையை அணிந்துக்கொள்வாள்  சிவப்பு வர்ணம் காதல் மற்றும் மகிழ்ச்சியை குறிக்கின்றன  திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், ஒன்பது  வகையான  உணவு பறிமாறப்படும் விருந்து சாப்பிட மூன்று மணி நேரம்வரை நீடிக்கும் .திருமண விழாவில் குடும்பஅறிமுகங்கள், , நகைச்சுவை நாடகங்கள், மற்றும் பலவிதமான கலைநிகழ்கச்சிகள் நடக்கும்.

பிரஞ்சு  Animated Flag of France திருமணம் என்பது இரண்டுகுடும்பங்கள் இணைத்து உருவாக்கப்பட்ட புதிய உடன்பாட்டை குறிக்கும் விதமாக. திருமண வரவேற்பு நிகழ்ச்சி போது, புதிய இரண்டுவெவ்வேறு திராட்சை தோட்டங்கள் இருந்து வரும் ஒயினை மணப்பெண்ணும் மணமகனும் ஆளுக்கொரு  கோப்பையில் எடுத்துக்கொண்டு அதன்பிறகுஅவர்கள் அதைஒரு மூன்றாவது கண்ணாடியில் ஒன்றாக ஊற்றி அருந்துவார்கள்..

ஜெர்மன் Animated Flag of Germany
திருமண விழாவில் போது, ஆண் பெண் மீது  தனது கட்டுப்பாட்டை காட்டும் குறியீடாக மணமகள் உடுத்தியுள்ள ஆடை  ​​மீது முழங்கால் போடுவான் பின்பு மணமகள் . அவள்   அதிகாரத்தை  காட்டும் விதமாக அவன் காலில் மீது ஏறி நிற்பாள்.

கிரேக்கம் Animated Flag of Greece
புது மணத்தம்பதிகள் திருமண சடங்கின் போது மலர்கிரீடத்தை அணிந்து  மூன்று முறை பீடத்துக்கு சுற்றி  புனித டிரினிட்டி ஐ குறிக்கும் வகையில்  நடந்து.வருவார்கள். வரவேற்பு நிகழ்ச்சியில், கிரேக்கம் நாட்டுப்புற நடனங்கள்  பிரபலமாக உள்ளன..
இத்தாலியன் Animated Flag of Italy
மணமகள்  பணம் பரிசுகளை சேமிக்கஒரு வெள்ளை பட்டு அல்லது சாட்டின் பணப்பை ("busta") வைத்திருப்பாள் "ட்ராண்டெல்லா" நாட்டுப்புற நடனங்கள்திருமண வரவேற்பில் கண்டிப்பாக இருக்கும்  இத்தாலிய திருமணத்தில் விருந்தினர்களுக்கு   ஐந்து சர்க்கரை-பூசப்பட்ட பாதாம்  கொடுக்கப்படும். அது உடல்ஆரோக்கியம்,செல்வம், நீண்ட ஆயுள், மக்கட்பேறு மற்றும் மகிழ்ச்சியை குறிக்கும்

 ஸ்காட்லாந்து Animated flag of Scotland - UKமணமகன்  அவர்களின் திருமணநாள் அன்று ஒரு அலங்கரிக்கப்பட்ட வெள்ளி தேக்கரண்டியை   பெண்ணுக்கு அவளை பட்டினி போட மாட்டேன் என்று குறிக்கும் விதமாக பரிசாக கொடுப்பான். ஒரு பாரம்பரிய வாள் நடனம் சில நேரங்களில் அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இருக்கும்

ஐரிஷ் திருமண வாழ்த்து Animated Flag of Ireland
கடவுள் உங்களுடன் இருந்து உங்களைஆசீர்வதிப்பாராக;
நீங்கள் உங்கள் குழந்தைகளின் குழந்தைகளை பார்க்கவேண்டும்.
நீங்கள், துரதிர்ஷ்டத்தில் ஏழையாக இருங்கள்
ஆசீர்வாதங்களில் பணக்காரர்களாக இருங்கள் ,
உங்கள் சந்தோஷம் என்றும் நிலைத்திருக்கும்.

இது நம்ம நாடுங்க.கேட்டுப்பாருங்க
Clipart

Get this widget | Track details | eSnips Social DNA

ஹி ஹி இன்னிக்கு எங்களுடைய திருமண நாள்.

5 comments:

சாந்தாவிசு said...

உள்ளம் நிறைந்த திருமணவாழ்த்துக்களை முதலில் தெரிவித்துகொள்கிறேன்.சுண்டுஎலியின் திருமண நாளின் மூலம் பல்வேறு நாடுகளின் திருமண பழக்க வழக்கங்களைப் பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது.முடிவில் லலிதா படத்தில் வரும் மந்திர தமிழ் முத்தாய்ப்பாக இருந்தது.

பிரேம்ராக்கி said...

Happy Marriage day

தொடர்ந்து இதுபோல் அரிய தகவல் வெளியிடவேண்டுமென எதிர்பார்க்கும் பலரின் சார்பாக நான்

லாமா said...

தங்கள் திருமணநாளில் தெரிவித்த நல்ல தகவல்கள் அனைவரின் திருமண நாள் வரும்போதும் நினைவுக்கு வரும் என நினைக்கிறேன்

வி.நாத் said...

சில திருமண மரபுகள் ஒருபுரம் இருக்கட்டும்.பல்வேறு நாடுகளின் கொடிகள் பறந்துகொண்டிருப்பது கண்களுக்க குளிர்ச்சியாக இருந்தது என்பது மறுக்க முடியாது. என்ன சுண்டு+எலி யும் வாசகர்கள் மனதில் பறந்துக் கொண்டிருக்கிறார் என்பதை சிம்பாலிக் காக சொல்கிறாரோ

அலமேலு கோபாலகிருஷ்ணன் said...

யானைப்பசிக்கு சோளப்பொறிபோல இருந்தது.திருமண விழா இந்தியாவிலேயே ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு விதமான பழக்க வழக்கங்கள் உள்ளது. அதையும் எப்படியாவது சுண்டு+எலி மோப்பம் பிடித்து அனைவரும் அறிந்துகொள்ள உதவியிருக்கலாம்

Post a Comment