இதை நீங்கள் நம்ப வேண்டும்.


நான் இப்பொழது வேலை பார்க்கும் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சி இது.
புதிதாக வேலைக்கு சேர்பவர்களுக்கு எங்கள் கம்பெனி தலைமை நிர்வாக அதிகாரி  ஒருநாள் மதிய உணவு அளிப்பார்.அதன் படி நானும் புதிதாக சேர்ந்தவர்கள் மற்ற 4 பேரும் தலைமை அலுவகத்திற்க்கு சென்றோம்..காரியதர்சி எங்களை வரவேற்று அதிகாரி சந்திக்கும் இடத்துக்கு அழைத்து சென்றாள். அந்த அதிகாரி எங்களுக்காக காத்துக்கொண்டிருந்தார்..நான் முன்பே சொல்லியபடி எனக்கு சைவ சாப்பாடு தயாராக இருந்தது..பேசிக்கொண்டே சாப்பிட்டோம்.சாப்பிட்டு முடிந்தவுடன் அவர்கள் சாப்பிட்ட தட்டை அவர்களே அப்புறப்படுத்த வேண்டும்.(இங்கு peon கிடையாது).எல்லோரும் எழந்து அவரவர் தட்டுகளை எடுக்கும்போது நானும் ஆந்திராவில் இருந்து வந்த மற்றவரும் குளிர் காலமானதால் கோட்டை போட்டுக்கொண்டு தட்டை எடுக்கலாம் என்று நாற்காலி மேல் இருந்த கோட்டை போட்டுக்கொண்டு திரும்பினால் எங்கள் கம்பெனியை ஆரம்பித்த அந்த நிர்வாக அதிகாரி எங்கள் எச்சில் தட்டுகளை எடுத்துக்கொண்டிருந்தார்..கிட்டதட்ட 700 பேரை வேலைக்கு வைத்திருக்கும் அவர் இப்படி செய்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

வெளிநாட்டினரிடம் இருந்து ஏன் நாம் இந்த அடக்கத்தை கற்றுக்கொள்ள கூடாது.
அவர்களிடமிருந்து பீசா, பர்கர் லிவிங் டுகெதர் தவிர இதையும் பின்பற்றலாம்

இன்றைய பாடல்


நான் தினமும் இந்த பாடலை முணுமுணுக்காமல் இருக்க மாட்டேன் .
நம்மை நாம் இருக்கும் நிலையை உணர்ந்து நடக்க வழி வகுக்கும் பாடல்.
TMS ன் அருமையான குரல்  வாழ்க்கை படிப்பினை எளிய வரிகளில் சொல்லும் கவிநயம்..நான் இந்த படத்தை பார்க்கவில்லை .தேங்காய் சீனிவாசன் நன்றாக நடித்திருப்பார் என்று சொல்வார்கள்.

ஜெயிச்சிட்டே கண்ணா நீ ஜெயிச்சிட்டே
திறந்துட்டே கண்ணை திறந்துட்டே
உன்னிடத்தில் தோற்றதில் வெற்றி எனக்கு
என்னை தெளிய வைத்தாய் தன்னை புரிய வைத்தாய்
என் நன்றி உனக்கு .

கர்ணன் படத்தில் வந்த மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா பாடல் எப்படி கீதையின் சாரத்தை பாமரமக்களுக்கு சேர்த்ததோ இந்த பாடலும் அதற்க்கு இணையாக
“தன்னை அறிந்தவர்க்கு தானாக நிற்ப்பவனை” மக்களுக்கு சுலபமாக புரிய வைத்தது
.

Get this widget | Track details | eSnips Social DNA
l

No comments:

Post a Comment