அத்தை

என் குழந்தைகளின் ஒரே அத்தை திருமதி மல்லிகா சந்திரசேகர் நேற்று (மே 14 2011) சென்னையில் காலமானார்.
அவள் ஒரு நல்ல சகோதரி,நல்ல நாத்தனார் முக்கியமாக ஒரு நல்ல அத்தை.
என் பசங்களுக்கு அத்தை என்றால் கொள்ளை பாசம்.ஆனால் இப்பொழது நாங்கள் சட்டென்று சென்னை செல்லமுடியாத சூழ்நிலையில் மாட்டிக்கொண்டதால் வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் அவள் உடலைப் பார்த்து கண்ணீர் விட்டோம்.என்ன வாழ்க்கை ?உறவினர் நல்லது கெட்டதுக்கு கூட போக முடியாத ஒரு இயந்திர உலகம்.

அவள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்.மானிடர் ஆன்மா மரணம் அடையாது .மறுபடி மறுபடி அதன் பாவ புண்ணிய பலன் படி பிறந்திருக்கும் என்று சொல்லும் இந்த பாட்டைக்கேட்டு கொஞ்சம் ஆறுதல் அடைய வேண்டியதுதான்.
அவளுடைய அருமை கணவருக்கும் செல்ல மகன்களுக்கும் காலம் தான் ஆறுதல் சொல்ல முடியும்

No comments:

Post a Comment