பால்கே பாலு அவர்கள்


சமீபத்தில் என்னை மகிழ்ச்சி அடைய வைத்த செய்தி இயக்குனர் சிகரம் 
பாலசந்தர் அவர்களுக்கு கிடைத்த தாதாசாஹிப் பால்கே விருது.
எனது கல்லூரி நாட்கள் அவரது படங்கள் பற்றிய  விவாதங்களில் 
கழிந்தன.  எந்த படத்தை சொல்ல அல்லது எதை விட? நான் தியேட்டரில் மூன்று முறையும் ஒலிச்சித்திரமாக பல முறையும் கேட்டு இன்றளவும் மனப்பாடமாக உள்ள அபூர்வ ராகங்களை சொல்வதா? மிக சிறந்த நடிகராக நாகேஷை நமக்கு தந்த சர்வர் சுந்தரத்தை சொல்வதா? பெண்கள் கதாபாத்திரங்கள் அதுவரை வெறும் டூயட் பாட மட்டும் என்ற நிலையை மாற்றி , குடும்பத்துக்காக தன்னையே கொடுக்கும் பெண்களாக அ.ஒ.தொடர்கதையிலும் அரங்கேற்றத்திலும் காதலை பூட்டிவைத்து ஏங்கும பெண்களை சொ.நினைக்கிறேன் மற்றும் அழகனிலும் பெண் கலெக்டர் என்றால் சௌகார் தான் என்று தோன்ற வைத்த இரு கோடுகளிலும் பெண்ணால் ஒருவரை தடுமாறி விழ மட்டுமல்ல பின்னர் எழ வைக்கவும் முடியும் என்று காட்டிய சிந்து பைரவி நாயகி ஆகட்டும் எத்தனை பெண் கேரக்டர்கள்.
கமலையும் ரஜினியையும் நமக்கு அடையாளம் காட்டியவர் அவர்தானே?
நேற்று முன்தினம் ஜெயா டிவியில் அவர் பேட்டி பார்த்தேன்.
தன்னை கவர்ந்த நாகேஷ் பற்றி சொல்லும் பொது அவர் கண்களில் கண்ணீர்.சோ அவர்களையும் புகழ்ந்தார் . இத்தனை வயதாகியும் அவருக்கு ஆசை எதாவது இருக்குமா? ஆம் . இருக்கிறது . இயக்குனர் வெற்றி மாறன் இரண்டு விருது வாங்கியதை பார்த்த உடன் எனக்கும் அது போல தேசிய விருது வாங்க வேண்டும், நான் இதுவரை வாங்கியதில்லை என்று குழந்தைபோல் சொன்னார்.
சார். நிச்சயம் வாங்குவீர்கள். தற்போது நீங்கள் இயக்கி ஜெயா  டிவியில்  வந்து கொண்ருக்கும் சாந்தி நிலையத்தில் உங்கள் கை வண்ணம்  உங்கள் இளமையை நிரூபித்து கொண்டிருக்கிறது. அதனால்தான் சொல்கிறேன். சார். நிச்சயம் வாங்குவீர்கள் .

எனக்கு என்னமோ அவருடைய கமல் ரஜினி அறிமுகத்துக்கு முன்பு இருந்த படங்கள் பிடிக்கும்.அதிலும் மேஜர் சந்திரகாந்த் அவருக்கு ஒரு மைல் கல்
அப்போது உச்சத்தில் இருந்த 20 வயது கூட நிரம்பாத ஜெயலலிதா அவர்களை படத்தில் முன் பாதியில் இறக்க வைத்து படத்தை பின்பாதியில் மிக விறுவிறுப்பாக செலுத்திய துணிச்சல் அந்த காலத்தில் புதியது.

 புதுவை ராம்ஜி. 

No comments:

Post a Comment