கேள்வியின் நாயகனே என் கேள்விக்கு பதில் சொல்லய்யா



அர்த்தமுள்ள இந்துமதம்
பத்தாம் பாகம்



ஆனால் அடுத்த கேள்விதான் யாரும் பதில் காண முடியாத ஒரு கேள்வியாகும் 
அது நல்லவர்கள் வருந்துகிறார்கள் என்பதைவிட தீயவர்கள் வாழ்கிறார்களே அது எப்படி?
எனக்குத்தெரியும் 
ஒரு நண்பர் ,வாழ்க்கையில் எந்த விதமான நன்மையும் யாருக்கும் அவர் செய்தது கிடையாது.
எதை அனுபவிக்க வேண்டும் என்றாலும் தானும் தன் குடும்பமும் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று வாழ்ந்தவர்,வாழ்பவர் ஆம் இன்னும் வாழ்ந்துக்கொண்டு இருப்பவர்.

எவ்வளவு சிரமங்கள் வந்தாலும் கூட அவருக்கு வசதி குறையவில்லை,பதவி குறையவில்லை புகழ் குறையவில்லை
எப்படி இது இயங்குகிறது எப்படி இது நடக்கிறது.
லட்சோப லட்சமாகப் பணத்தைக் குவித்தார்.அதுவும் தவறான வழியில் .அதுவும் நிலைத்துவிட்டது.தவறான வழியில் சேர்த்த பணம் நிலைக்காது என்பார்கள் .நிலைத்துவிட்டதே.கண்முன்னாலே கண்டிருக்கிறோமே

தப்பான வழியில் அபகரித்த பதவி நிலைக்காது என்பார்கள் அது பல வருஷங்கள் அவர் கையில் இருந்ததே அது எப்படி?

இவையெல்லாம் மனதில் ஏற்ப்படுத்தக்கூடிய மயக்கம் என்ன?
ஆண்டவனுடைய இயக்கம், என்பதிலே ஒரு சந்தேகத்தை இதுதான் உண்டாக்கிறது.
இதைப்பொறுத்தவரை உங்களுக்கு நான் சொல்லக்கூடியது ஒன்றே ஒன்றுதான்.
இப்படிபட்ட அக்கிரமக்காரர்கள் இருபது வருஷம் இருபத்தைந்து வருஷம் நிம்மதியாக வாழ்ந்தாலும் கூட இவர்களுடைய கடைசிக்காலம் மோசமாக இருக்கும்.
அவர்கள் படாதபாடு பட்டுத்தான் தங்களுடைய வாழ்க்கையை முடிக்க வேண்டியிருக்கும்.இல்லையென்றால் அவர்கள் செயத பாவங்களுக்கு அவர்களுடைய குழந்தைகள் தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும்.

நான் ஒரு கட்டுரையிலே சொன்னபடி பதினான்காவது லூயி செய்த தவறுகளுக்கான தண்டனைகளை,பதினாறாவது லூயி அநுபவிக்க வேண்டியிருந்தது
பழைய ஜார் மன்னன் செய்த தவறுகளை அடுத்து வந்த வாரிசு அனுபவிக்க வேண்டியிருந்தது.


கண்ணதாசன் 

 ஆமாம் கண்ணதாசன் யாரை சொன்னார்?



No comments:

Post a Comment