சிரிப்புத் திருடன்

பல வருடங்களுக்கு முன் ஆனந்த விகடனில் மதன் கார்டூனில்  சிரிப்பு திருடன் சிங்காரவேலு வை பலர் மறந்திருக்க முடியாது. கடந்த வாரம் சென்னையில் உண்மையில் நடந்தது இது.
அதிமுக எம் எல் ஏ திரு .பழ .கருப்பையா வீட்டுக்குள் நுழைந்த திருடன் ஒருவன் அவரது மனைவி கமலா ஆச்சியை தாக்கி அவரது செயினை பறித்து ஓடிவிட்டான். ஆனால் மறதியில் தனது மொபைலை விட்டு விட்டான்.
மொபைல் மூலமாக பிடிபட்டு விடுவோமா என்ற பயத்தில் திரும்ப வந்து வெளியிலேயே நின்று ஆச்சியிடம் மொபைல் தாருங்கள், செயினை வேண்டுமானால் தந்து விடுகிறேன் என்றான். அவர்கள் பயத்தில் கதவை திறக்கவே இல்லை. போலீஸ் வருவதை கண்டு பின்னர் ஓடி விட்டான். ஆனால் போலீஸ் மொபைல் மூலமாக சுலபமாக அவனை பிடித்து விட, தான் தொழிலுக்கு புதுசு என்றானாம்.
எப்படி ? இவன்தான் உண்மையான சிரி .திருடன் சி.வேலு இல்லையா?
 

புதுவை ராம்ஜி


நான் அமெரிக்காவில் நேரில் கண்ட ஜோக் திருடன் இவன்.
நான் ஒரு வங்கியில் இருந்த போது அங்கு இருந்த கணக்காளரிடம் வெறும் கையை பாக்கெட்டில் விட்டு துப்பாக்கி எடுப்பது போல் ஒருவன் பாவ்லா காட்டி பணத்தை எடு என்று கேட்க.அந்த கணக்காளரும் பயந்து போய் ஆனால் சாமர்த்தியமாக வெறும் ஒரு டாலர் ஐந்து டாலர் நோட்டுக்களை தந்திருக்கின்றாள்.அந்த லூசும் கை நிறைய காசுக்களை வாரிக்கொண்டு(சில நூறு டாலர்கள் தான்) காரில் தப்பித்து சென்றான்.சென்றவன் சினிமாவில் பார்ப்பது போல் விர்ர்ர்ர் என்று தப்பிக்கவில்லை.மிக பொறுப்பாக வங்கி அருகிலேயே இருந்த ஒரு சிக்னலில் இடது புறம் திரும்புவதற்க்காக ( இங்கு வலது புறம் திரும்ப சிக்னல் அவ்வளவாக தேவையில்லை) சிரத்தையாக காத்திருந்த போது பிடிப்பட்டு விட்டான்.
ஹும் நம்ப ஊர் பசங்களா இருந்தா கிடைத்த கேப்பில் பறந்திருக்க மாட்டார்களா?


சுண்டு+எலி

No comments:

Post a Comment