உங்களுக்கு இதெல்லாம் தெரிஞ்சுருக்குங்க,


மோனாலிசாவுக்கு புருவம் கிடையாது—(அப்படியா தெரியவேயில்லை)
முட்டையிடும் பிராணிகளுக்கு தொப்புள் பள்ளம் கிடையாது (அப்ப எப்படி பம்பரம் விடுவாங்களாம்)
தி பேசன்ஜி வகை நாய்களுக்கு குரைக்கத்தெரியாது ( அப்போ கண்டிப்பா கடிக்கும்)
தேனிக்கு ஐந்து கண்கள்—( அப்போ ஐந்து கண்ணன் வரான் என்று குழந்தைகளை பயமுறுத்தலாம்)
சூயிங்கம் மென்றுக்கொண்டே வெங்காயம் உரித்தால் கண்ணீர் வராது ( அப்போ மெகா சீரியலுக்கு ?)
வாழைப்பழம் ஆப்பிள் முதலிய பழங்களை வாசனை பிடித்தால் உடம்பு இளைக்கும் (அப்போ பழக்கடைக்காரர்கள் ஒல்லியாய் இருப்பார்களே?)
அமெரிக்கா உச்சநீதி மன்ற நீதிபதி ஆவதற்க்கு வக்கீல் பட்டம் தேவையில்லை (என்ன சட்டம் இது?)
பூனைக்கு 100 வகை குரல் நாளங்கள் உண்டு ( பல குரல் மன்னன்)
பசு மாட்டை மாடியில் ஏற்றலாம் ஆனால் இறங்க வைக்க முடியாது ( அப்போ இரண்டாம் மாடியில் கிரகப்பிரவேசம் செய்தால் என்ன செய்வார்கள்?)
தேன் ஒன்றுதான் கெட்டுபோகாத பண்டம்( அதான் நம்பளை அம்மா தேனே என்று கொஞ்சினாளா?)
ஆஸ்திரிய நாடுதான் முதன் முதலில் போஸ்ட்கார்ட் வெளியிட்டது ( போஸ்ட் கார்ட் ஆ அப்படின்னா?)

1 comment:

vanakkamradio said...

இது எல்லாராலும் தேடித் தெரிந்துகொள்ளக் கூடிய விடயம் என்றாலும் நீங்கள் போட்டு இருக்கும் அடைப்புக் குறிக் கருத்துக்கள் அபாரம் :)

Post a Comment