எல்.கே.ஜியின் எழுத்து


கடந்த இரண்டு நாட்களாக நான் எழுதிய பதிவு ஒன்றுக்காக சில அன்பர்கள் என்னை கண்டன பின்னூட்டங்களால் கிழி கிழி என்று கிழித்துக்கொண்டிருந்த வேளையில் என் பதிவில் உள்ள ஆரம்ப வரிகளான கான மயிலாட பாடலின் வரிகளில் உள்ள எழுத்துப்பிழையினை சுட்டிக்காட்டி பிரபல எழுத்தாளர் அமுதவன் எழுதியிருந்தார்.பத்திரிக்கைகளில் மட்டும் நான் அறிந்த ஒரு சிறந்த  எழுத்தாளர் எனக்கு எழுதுவது நான் எதிர்பாராதது.
அவர் போன்ற எழுத்தாளர்கள் முன் நான் வான்கோழி கூட இல்லை .சும்மா கொசு தான்.
அவர் என் பதிவை பார்த்து  எனக்கு எழுதியது.ஹார்வேர்ட் பேராசிரியர் நம் ஊர் 3 வயது எல் கே ஜி பையன் போட்ட ) C என்று திருத்தியதற்க்கு சமம்.
பயமாக இருக்கிறது அவரெல்லாம் என் பதிவை படிக்கிறாரே என்று.
அமுதவன் சார் மிக்க நன்றி பிழையை சரி செய்து விட்டேன்.
==================================================================================
ஜென் துறவி பென்கே தனியாக வாரக்கணக்கில் தியானத்தில் ஈடுப்பட்டிருப்பார்.அப்போது அந்த தியானத்தில் கலந்துக்கொள்ள ஜப்பானில் உள்ள அவரது மாணவர்கள் வருவார்கள்.
அப்பொழுது ஒரு மாணவன் பொருள் திருடியதற்க்காக பிடிப்பட்டான்.மற்ற மாணவர்கள் அவனை பிடித்து வந்து குருவின் முன் நிற்க வைத்து அவனுக்கு தண்டனை கொடுக்கும்படி கேட்டுக்கொண்டனர். குரு ஒன்றும் கூறாமல் அமைதியாக இருந்தார்.
மற்றொரு சமயம் அதே மாணவன் அதே போல் மறுபடியும் திருடிக்கொண்டு மாட்டிக்கொண்டான்.அப்பொழுதும் மாணவர்கள் அவனை கையும் களவுமாகப் பிடித்துக்கொண்டு குருவிடம் ஒப்படைத்தனர்.அப்பொழுதும் குரு அவனை ஒன்றும் சொல்லவில்லை.
மற்ற மாணவர்களுக்கு  ஒரே கோபம் .ஒரு புகார் கடிதத்தை குருவிடம் கொடுத்தார்கள்..அதில் அந்த திருட்டு மாணவனை உடனடியாக குரு வெளியேற்ற வேண்டும் என்றும் அவன் அவர்களோடு சேர்ந்து படித்தால் அவர்கள் அனைவரும் அந்த குருகுலத்தை விட்டு விலகப்போவதாகவும் என்று எழுதியிருந்தார்கள்.
குரு அமைதியாக அதைப்படித்து விட்டு நல்லது மாணவர்களே.நீங்கள் தாரளமாக வேறு இடத்துக்கு சென்று படித்து முன்னேறுங்கள்..உங்களுக்கு நல்லது எது கெட்டது எது என்று தெரிந்திருக்கின்றது.ஆனால் இந்த ஏழை சகோதரனுக்கு எது நல்லது எது கெட்டது என்று தெரியவில்லை.யார் இவனுக்கு சொல்லி தருவார்கள்? அதை சொல்லி தருவது என் கடமை அல்லவா? நீங்கள் அனைவரும் வேறிடம் சென்றாலும் இவனை நான் ஆதரிப்பேன் என்றார்.
அதைக்கேட்ட திருடிய மாணவனின் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாய் கொட்டியது.திருடவேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் இருந்து மறைந்தது

1 comment:

வி.நாத் said...

சுண்டு+எலியின் மூலமாக ஜென்துறவி பென்கே நெருடல் சிறுகதை உள்ளத்தை வருடியது.இது போன்ற வற்றை அதிகம் வழங்கவேண்டுமென்று எதிர்பார்க்கும் என் போன்றோர் ஏராளம்

Post a Comment