கவிதையாம் இது

கவிதையாம் இது


கள்ளிப்பால்


அயல்நாட்டில் அஞ்சாப்பு படிக்கும் என் மகனுக்கு
சமுக கொடுமையை கோடிட்டு காட்ட நினைத்து
பிறந்த நாட்டின் சிசுவதை அவலத்தை விளக்கி
முடித்தவுடன் கேட்டான் ஒரு கேள்வி
அம்மா உனக்கு ஏன் பாட்டி கள்ளிப் பாலை கொடுக்கலை
ஐந்து சகோதரிகளுக்கு பின்பு பிறந்த நான் சிலையானேன்


மன மாயம்




உறங்கி எழுந்தேன் உணர்வுகள் மாயம்
மயங்கி விழுந்தேன் மனமே மாயம்
காயங்கள் பட்டேன் குருதிகள் மாயம்
விதியென்று அறிந்தேன் வினைகள் மாயம்


மேகங்கள் கதிரை உள்வாங்கும் தோற்றமே
மண் மீதில் யாம் காணும் மன மாற்றமே
வெளிவந்த பரிதியை காண நாணும் முகிலோடு
வந்த வழி செல்லும் வழி மாறும் எண்ணங்களே


மாயங்கள் விளைந்தென மண் சுவர் மீதில்
சோகங்கள் பட்டதால் சோர்வில்லை சுகமே
பார்த்தன் அவன் தேரில் பரிதவிக்கும் கணத்தில்
உரைத்த நீதி எமக்கும்  அருள்வாய் உத்தமனே உயிரே

No comments:

Post a Comment